31 July 2015

கவிதையும் காணமும்-.

கனவு போல வந்து
 கவிதை எழுது என்ற
காதலியே!! காத்திருந்து
கதை போல பல
 கவி உன் கண்ணில்
காதலுடன் எழுத
காத்திருந்த காளையின்
காலைப்பொழுதில்.
காதில் விழுந்த இடியடி
கடத்தப்பட்டாள் என்ற
கதை. அன்பே !!நான்
கல்லாதவன் என்று உன்னை
காதலித்து தொழில் அன்றி
காசுக்கு வழியில்லாத
கபோதி என்ற
கருணையும் புரியாத
காவலர். இனவிரோதிகளுக்கு
காதில் விழும் வண்ணம்
கண்ணீரோடு!!
காசும் தரலாம் .இலஞ்சம் .இல்லை
கமிஷன் என்று! நீ இன்னும்
காத்து இருக்கும் சிறைபோல
கடும் வணம் எது?, என்று
காணமல் போன உன்னை நினைத்து
காதலுடன் கண்ணீர்விடுகின்றேன்.


கதை போல  இதுவும்
கடந்து போகும் ஊடகத்துக்கு.
காத்திருக்கும் காதல் வலி
கடுகளவும் கட்டாயம்
கணக்கில் வராத இனவாத
கடற்படையின் கொலை போலத்தான்
காத்து இருக்கின்றேன் !!


காதல் கதை பேச வருவாய் என்ற
கடவுள் போல
கற்பனையுடன்!
காதல் நிஜம் என்றால் நீ
கைதியாக இருந்தாலும்
கைபிடிப்பேன் கடல் கடந்து வந்து.!!!


கட்டாயம் நீ இன்னும் ஏதோ கண்கானாத முகாமில்
கடும் வதை கைதியாக இருப்பாயோ
காதலியே கவலையுடன்
காதலன்  ஒரு
கடிதம்  எழுதப்போறேன் !
காணமல் போனோர் பற்றி
கயவர்கள் கூட்டம் காங்கிரஸ் கூடாராத்துக்கு!!
கவலையுடன் ஒரு ஈழத்து அப்பாவி.
கண்ணீர் தேசம் எழுத இவன்
காந்தி வம்சம் இல்லை
கைவிட்ட ஏதிலிகள் சில தலைமுறை
கதை போல அடுத்த வம்சத்தையும்
கழுத்தறுக்காமல் இருங்கள்..
கனவு போனபின்னும் கைதி போல
காணமல் போனோர் பட்டியளுடன்!


கதிரைக்காக இனியும் சேவகம் தேவையா?,

கற்றவர் என்ற போர்வையில்
கடல் கடந்து  நெஞ்சம் சுடும்
கலாம் கண்ட
கனவு  தேச அரசியல் வியாதிகளே!


//முன்னம் இங்கேயும் காணம் உண்டுhttp://www.thanimaram.org/2013/09/blog-post_22.html









29 July 2015

முகம் காண ஆசையுடன் -15

முகம் காணலாம் முன்னர் இங்கே-http://www.thanimaram.org/2015/07/14.html

 இனி-----------------
                                         
கனவுகாணுங்கள் என்று எழுதியவர் எங்களை விட்டு போட்டார்!
கனவு தேசம் காணப் போனவர்கள் பலர் காணமல் போனநிலை
பற்றி இன்றும்  தேர்தல் காலங்களில் மட்டும் கண்டவன் .நின்றவன் ,காப்பாளன், என்று கழுதையின் காலில் விழும் காட்சிகள் எல்லாம் கதிரை சுகத்துக்காக அலையும் அரசியல்வாதிகளின் காதில் இன்னும் ஒலிக்காக ஈழத்தின்  சிறப்புத் துயரம் எழுத இன்றும்  நவாலியூர் புலவரும் இல்லை!

 இந்த ஆடிமாதம் பற்றி அருமைக்கவிதை பாடிய நம்நாட்டு கவி வேந்தாச்சே!


 இன்று தாம் பெற்ற பிள்ளைகளை , உறவுகளை. கட்டியவன், என்று காணமல் கண்களங்கி கதறும் குடும்பத்தின் வலியும் ,வேதனைகளும் ,வெறும் வார்த்தையல்ல  சந்திச்சு முறையீடு செய்வதுடன் முடியும் கதையல்ல !

இருக்கான?, .இல்லையா ?,என்று பாடமுடியாத சோக வரலாறு இன்னும் எத்தனை காலம் நீளும்.?,??,

 நம்மை வாழ வைக்க வேலை தேடிப் போனோர், வேள்வி போல நாட்டு எல்லை காக்க போனவர்கள். நடுவீதியில்  நடுப்பகலில் நீ அவனா?, என்று கண்கட்டித் தூக்கிப்போன அப்பாவிகளின் வாழ்வு இன்னும் வாக்கு வேண்டிய போது ஊடகத்தில் ஒலிக்கும் ஒப்பாரி நாடகமில்லை..
https://www.youtube.com/watch?t=375&v=u_6HfF9dqeQ.
 இன்னும் கண்களில் ஒளி தேடும் வதை முகாமில் வாழும் சேதுக்கள் போல பல ஈழத்து தமிழச்சிகளும்  இன்னும் நடைப் பிணம்மாக வாழும் நிலையை யார் எப்போது பொதுவெளியிள்  பேசப்போறம்.?,,

 போவது குடும்ப மானம் என்ற ஓற்றை வார்த்தைக்குள் அடக்க வேண்டிய வலியை சூரிய தேவவன் தந்தான் என்று நவீன காலம் பேசும் ஊடக மாமாக்கள்  சொன்னாலும் !நாட்டுக்காக்க என்று கனவுகளுடன் போனவர்களையும் .கைதியாக நடைப்பிணம் போல நம்பி  வந்தவர்களையும் நாடு இனி கேட்கக்கூடாது.

 என்று நன்று திட்டமிட்ட இனவாதம்  இன்னும் சீரழிக்கும் அவலத்துக்கு  நாமும் இந்தநாட்டு தமிழர் என்று அரசகதிரையில் இருந்து ஆர்பரிக்கும் ஈனப்பிறப்புக்களும் இதயம் திறக்க வேண்டும்.

 இனியும்  ஏன் இந்த அப்பாவிகளுக்கு மட்டும் தீர்வில்லை?,,

. ஒரு வார்த்தை இதய சுத்தியுடன் மனம் திறந்து இனவாதம் தோற்கும் வண்ணம்   பொது மன்னிப்புக் கொடுக்க முடியாத வேந்தன் .

மலர்கள் வீசு மந்திரிகள் சூழ மானம் இல்லாது மக்கள் முன் ஏற்றும் தீபத்தையும் ஏற்பானோ?, இந்த உலகம் படைத்த சூரிய தேவன்?,.


 நிச்சயம் அவன் ஒன்றும் வாக்குறுதி கொடுத்துப்போகும் மானம் கெட்ட அரசியல்வாதியும் அல்ல .மக்களும் மறந்து  இலவச அன்பளிப்பு வாக்கு வருமானமும்  அல்ல !

 வதை முகாம்களில் நாளும் கண்ணீர் விடும் அப்பாவிகளுக்கும், நாடளுமன்ற நாய்களின் எச்சில் வாக்குறுதியில் நம்மி இன்னும் சிறையிள் இருப்போரின் வேதனைகளுக்கு நிச்சயம் ஒரு கடவுள் மனம் இறங்கி வர வேண்டும்!

 இனவாதம், மதவாதம், மொழிவாதம் ,இல்லாது இலங்கைக்கும் ,ஈழத்துக்கும் பாலம் போடு அந்த மகா மேதகு யார் என்ற கேள்வி ?,உன்னைப்போல எனக்கும் இருக்கு அசுரன் !

ஆனால் என்னால் உன்னைப்போல தொடர்ந்து எதையும் பொதுவெளியில்  பேசமுடியாத நிலை.

 என்னையும் எந்த வெள்ளைவான் கடத்துமோ ?,என்ற உள் அச்சம் இன்னும் நீங்கவில்லை!


ஆனாலும் என்றாவது ஒருநாள் ஓரு சில உண்மைகள் பொதுவெளியிள் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அறிய வேண்டும்.

 ஆனால் அதுவும் இனவாதம் ,மதவாதம், மொழிவாதம் , போகும் வரை ஊடகத்தில் அதை எந்த மேதையாளும் எழுத , பேச முடியாத விடயம் .


தொடர்ந்து பேசுகின்றேன் உன்னுடன் அசுரன் அதுவரை கொஞ்சம் காத்து இருக்கவும்; மற்ற நேயர்களின் அழைப்பினையும்  உள்வாங்கும் வானொலி அறிவிப்பாளினி  போல


அழைப்பை இடைநிறுத்தினால் சுமா..



....