31 July 2015

கவிதையும் காணமும்-.

கனவு போல வந்து
 கவிதை எழுது என்ற
காதலியே!! காத்திருந்து
கதை போல பல
 கவி உன் கண்ணில்
காதலுடன் எழுத
காத்திருந்த காளையின்
காலைப்பொழுதில்.
காதில் விழுந்த இடியடி
கடத்தப்பட்டாள் என்ற
கதை. அன்பே !!நான்
கல்லாதவன் என்று உன்னை
காதலித்து தொழில் அன்றி
காசுக்கு வழியில்லாத
கபோதி என்ற
கருணையும் புரியாத
காவலர். இனவிரோதிகளுக்கு
காதில் விழும் வண்ணம்
கண்ணீரோடு!!
காசும் தரலாம் .இலஞ்சம் .இல்லை
கமிஷன் என்று! நீ இன்னும்
காத்து இருக்கும் சிறைபோல
கடும் வணம் எது?, என்று
காணமல் போன உன்னை நினைத்து
காதலுடன் கண்ணீர்விடுகின்றேன்.


கதை போல  இதுவும்
கடந்து போகும் ஊடகத்துக்கு.
காத்திருக்கும் காதல் வலி
கடுகளவும் கட்டாயம்
கணக்கில் வராத இனவாத
கடற்படையின் கொலை போலத்தான்
காத்து இருக்கின்றேன் !!


காதல் கதை பேச வருவாய் என்ற
கடவுள் போல
கற்பனையுடன்!
காதல் நிஜம் என்றால் நீ
கைதியாக இருந்தாலும்
கைபிடிப்பேன் கடல் கடந்து வந்து.!!!


கட்டாயம் நீ இன்னும் ஏதோ கண்கானாத முகாமில்
கடும் வதை கைதியாக இருப்பாயோ
காதலியே கவலையுடன்
காதலன்  ஒரு
கடிதம்  எழுதப்போறேன் !
காணமல் போனோர் பற்றி
கயவர்கள் கூட்டம் காங்கிரஸ் கூடாராத்துக்கு!!
கவலையுடன் ஒரு ஈழத்து அப்பாவி.
கண்ணீர் தேசம் எழுத இவன்
காந்தி வம்சம் இல்லை
கைவிட்ட ஏதிலிகள் சில தலைமுறை
கதை போல அடுத்த வம்சத்தையும்
கழுத்தறுக்காமல் இருங்கள்..
கனவு போனபின்னும் கைதி போல
காணமல் போனோர் பட்டியளுடன்!


கதிரைக்காக இனியும் சேவகம் தேவையா?,

கற்றவர் என்ற போர்வையில்
கடல் கடந்து  நெஞ்சம் சுடும்
கலாம் கண்ட
கனவு  தேச அரசியல் வியாதிகளே!


//முன்னம் இங்கேயும் காணம் உண்டுhttp://www.thanimaram.org/2013/09/blog-post_22.html









6 comments :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காதல் வலியோடு சமூக அவலத்தையும் சொல்கிறது கவிதை.கண்ணீரில் நனைகிறது கண்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

கலங்க வைக்கும் வரிகள்...

வலிப்போக்கன் said...

கதை போல இதுவும்
கடந்து போகும்

balaamagi said...

வணக்கம்,
வேதனையின் உச்சம் தங்கள் பா வரிகளில் கண்டேன்,
நன்றி.

இளமதி said...

வலிகளை வார்த்தைக்குள் அடக்கிட முடிவதில்லை..!
ஆயினும் உங்கள் கவி வரிகள் உள்ளத்தை உருக்குகின்றன...

Yarlpavanan said...

"காதல் நிஜம் என்றால் - நீ
கைதியாக இருந்தாலும்
கைபிடிப்பேன் கடல் கடந்து வந்து.!!!" என்ற
நம்பிக்கையூட்டும் அடிகளை
அடியேன் விரும்புகின்றேன்

புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html