29 July 2015

முகம் காண ஆசையுடன் -15

முகம் காணலாம் முன்னர் இங்கே-http://www.thanimaram.org/2015/07/14.html

 இனி-----------------
                                         
கனவுகாணுங்கள் என்று எழுதியவர் எங்களை விட்டு போட்டார்!
கனவு தேசம் காணப் போனவர்கள் பலர் காணமல் போனநிலை
பற்றி இன்றும்  தேர்தல் காலங்களில் மட்டும் கண்டவன் .நின்றவன் ,காப்பாளன், என்று கழுதையின் காலில் விழும் காட்சிகள் எல்லாம் கதிரை சுகத்துக்காக அலையும் அரசியல்வாதிகளின் காதில் இன்னும் ஒலிக்காக ஈழத்தின்  சிறப்புத் துயரம் எழுத இன்றும்  நவாலியூர் புலவரும் இல்லை!

 இந்த ஆடிமாதம் பற்றி அருமைக்கவிதை பாடிய நம்நாட்டு கவி வேந்தாச்சே!


 இன்று தாம் பெற்ற பிள்ளைகளை , உறவுகளை. கட்டியவன், என்று காணமல் கண்களங்கி கதறும் குடும்பத்தின் வலியும் ,வேதனைகளும் ,வெறும் வார்த்தையல்ல  சந்திச்சு முறையீடு செய்வதுடன் முடியும் கதையல்ல !

இருக்கான?, .இல்லையா ?,என்று பாடமுடியாத சோக வரலாறு இன்னும் எத்தனை காலம் நீளும்.?,??,

 நம்மை வாழ வைக்க வேலை தேடிப் போனோர், வேள்வி போல நாட்டு எல்லை காக்க போனவர்கள். நடுவீதியில்  நடுப்பகலில் நீ அவனா?, என்று கண்கட்டித் தூக்கிப்போன அப்பாவிகளின் வாழ்வு இன்னும் வாக்கு வேண்டிய போது ஊடகத்தில் ஒலிக்கும் ஒப்பாரி நாடகமில்லை..
https://www.youtube.com/watch?t=375&v=u_6HfF9dqeQ.
 இன்னும் கண்களில் ஒளி தேடும் வதை முகாமில் வாழும் சேதுக்கள் போல பல ஈழத்து தமிழச்சிகளும்  இன்னும் நடைப் பிணம்மாக வாழும் நிலையை யார் எப்போது பொதுவெளியிள்  பேசப்போறம்.?,,

 போவது குடும்ப மானம் என்ற ஓற்றை வார்த்தைக்குள் அடக்க வேண்டிய வலியை சூரிய தேவவன் தந்தான் என்று நவீன காலம் பேசும் ஊடக மாமாக்கள்  சொன்னாலும் !நாட்டுக்காக்க என்று கனவுகளுடன் போனவர்களையும் .கைதியாக நடைப்பிணம் போல நம்பி  வந்தவர்களையும் நாடு இனி கேட்கக்கூடாது.

 என்று நன்று திட்டமிட்ட இனவாதம்  இன்னும் சீரழிக்கும் அவலத்துக்கு  நாமும் இந்தநாட்டு தமிழர் என்று அரசகதிரையில் இருந்து ஆர்பரிக்கும் ஈனப்பிறப்புக்களும் இதயம் திறக்க வேண்டும்.

 இனியும்  ஏன் இந்த அப்பாவிகளுக்கு மட்டும் தீர்வில்லை?,,

. ஒரு வார்த்தை இதய சுத்தியுடன் மனம் திறந்து இனவாதம் தோற்கும் வண்ணம்   பொது மன்னிப்புக் கொடுக்க முடியாத வேந்தன் .

மலர்கள் வீசு மந்திரிகள் சூழ மானம் இல்லாது மக்கள் முன் ஏற்றும் தீபத்தையும் ஏற்பானோ?, இந்த உலகம் படைத்த சூரிய தேவன்?,.


 நிச்சயம் அவன் ஒன்றும் வாக்குறுதி கொடுத்துப்போகும் மானம் கெட்ட அரசியல்வாதியும் அல்ல .மக்களும் மறந்து  இலவச அன்பளிப்பு வாக்கு வருமானமும்  அல்ல !

 வதை முகாம்களில் நாளும் கண்ணீர் விடும் அப்பாவிகளுக்கும், நாடளுமன்ற நாய்களின் எச்சில் வாக்குறுதியில் நம்மி இன்னும் சிறையிள் இருப்போரின் வேதனைகளுக்கு நிச்சயம் ஒரு கடவுள் மனம் இறங்கி வர வேண்டும்!

 இனவாதம், மதவாதம், மொழிவாதம் ,இல்லாது இலங்கைக்கும் ,ஈழத்துக்கும் பாலம் போடு அந்த மகா மேதகு யார் என்ற கேள்வி ?,உன்னைப்போல எனக்கும் இருக்கு அசுரன் !

ஆனால் என்னால் உன்னைப்போல தொடர்ந்து எதையும் பொதுவெளியில்  பேசமுடியாத நிலை.

 என்னையும் எந்த வெள்ளைவான் கடத்துமோ ?,என்ற உள் அச்சம் இன்னும் நீங்கவில்லை!


ஆனாலும் என்றாவது ஒருநாள் ஓரு சில உண்மைகள் பொதுவெளியிள் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் அறிய வேண்டும்.

 ஆனால் அதுவும் இனவாதம் ,மதவாதம், மொழிவாதம் , போகும் வரை ஊடகத்தில் அதை எந்த மேதையாளும் எழுத , பேச முடியாத விடயம் .


தொடர்ந்து பேசுகின்றேன் உன்னுடன் அசுரன் அதுவரை கொஞ்சம் காத்து இருக்கவும்; மற்ற நேயர்களின் அழைப்பினையும்  உள்வாங்கும் வானொலி அறிவிப்பாளினி  போல


அழைப்பை இடைநிறுத்தினால் சுமா..



....  

4 comments :

நம்பள்கி said...

தமிழ்மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்பத்தின் வலியும் ,வேதனைகளும் சொல்ல வார்த்தைகள் இல்லை...

saamaaniyan said...

வணக்கம்

தங்கள் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்

http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_31.html

நன்றி
சாமானியன்

Thulasidharan V Thillaiakathu said...

இருக்கான?, .இல்லையா ?,என்று பாடமுடியாத சோக வரலாறு இன்னும் எத்தனை காலம் நீளும்.?,??,// சொல்லவொணா வேதனை நண்பரே! தமிழ் மக்களின் குடும்பங்களின் வேதனைகள் ஓங்கி ஒலிக்கின்றது.....சத்தியமான வார்த்தைகள் நண்பரே!

ஊடகங்களில் காணும் போது அதுவும் செழுமையாக இருந்த வடகிழக்கு மாகாணங்கள், ஈழம் இப்போது பாலைவனமாக உள்ளதைக் காணும் போது மனது வலிக்கத்தான் செய்கின்றது..அந்த புமியில் எத்தனை அவலக் குரல்கள் இனியும் பல ஆண்டுகள் கேட்டுக் கொண்டுதான் இருக்குமோ..மண்ணோடு மண்ணாகப் புதைந்தவர்களின் குரல்கள்...என்று பல சமயம் தோன்றுகின்றது...இதைப் பற்றி ஒரு பதிவு தயாராகி வந்து கொண்டிருக்கின்றது நண்பரே! தொடர்கின்றோம்....