24 December 2011

நண்பனும்  நினைவுகளும்!

இசையின் ஓசையில் காதல் கதவு திறக்கும் இதயங்களை. என்பதை!  என் நண்பன் மூலம் கண்டு கொண்டேன்.

 நானும் தொழில் நிமித்தம் பலருடன் பழகியிருக்கின்றேன். என் விற்பனைத் துறையில் கைகோர்த்தவன் ஜேம்ஸ் .

இருவரும் கொழும்பில் வெவ்வேறு நிறுவனத்திற்கு கடமையாற்றினாலும், ஒரே வாடகை அறையில் தங்கும் நிலையைத் தந்தது பொருளாதார துண்டுவிழும் தொகை.

 அந்தப்பகுதியில் வேலை செய்யும் விற்பனைப்பிரதி நிதிகளில்  நானும், ஜேம்ஸ்சும், ஒரே வடபகுதி என்பதால் இயல்பாகவே பாதுகாப்புக் காரணங்களால் கொஞ்சம் அதிகம் கவனத்துடன் இருந்தோம்!.

 பொலிஸ் பதிவு மற்றுமொரு உடல் உறுப்பு ஆனபடியால்.

 .எங்கள் வேலையில் கொழும்பு கொட்டாஞ்சேனைப்  பகுதி முக்கிய இடம் வகித்தது .

ஜம்பட்டா வீதி ஒரு சுகமான சுமையான நினைவுகளைத் தந்து செல்லும் என நானும். வேலைக்குச் சென்ற காலத்தில் எண்ணியதில்லை!

பலசரக்குக் கடைகளும், பாமஸிகளும் நிறைந்த அந்த வீதியில் .

ஒரு கடையை நாம் இருவரும் அதிகம் திடீர் திடீர் என்று சுற்றி வருவோம்.

 காரணம் ஜேம்ஸ் மனதில் மையல் கொண்ட நங்கைக்காக!

 அவள் பார்வையில் பல நூல்கள் படித்தான் ஜேம்ஸ். சித்திரம் தீட்டும் சிங்காரச் செவ்விழல் மேரி லூக்கஸ் அவள் நாமம்.

 .நங்கை இருக்கும் கடை  ஒரு பலசரக்கு வியாபார நிலையம்.

 தந்தையின் வியாபார நடவடிக்கைக்கு உதவியாக கணக்குப் போடுவதும், காசு வாங்கி லாட்சியில்(கல்லாப்பெட்டி) போடுவதும். அவளின் பணியாக இருந்தது.

 அவளின் தம்பி அருகில் இருந்த பாடசாலையில் படித்து வந்தான். அவனைக் கண்டால் ஜேம்ஸ் மிகவும் அக்கரையுடன் தன் வாகனத்தில் இருக்கும் காசளரைக் கூட பின்பக்கம் ஏறும்படி கூறிவிட்டு !

அவனை முன் ஆசனத்தில் அமர்த்தி அழைத்து வருவான் .

எங்கள் அறைக்கு வந்தாள் மேரியின் பாமாலைதான் அதிகம் பாடும் இதய ராகம் ஆனது.

 எப்படியும் தன் காதலைச் சொல்லி விடனும் என்ற ஆவலில் என்னையும் இம்சை செய்யும் அளவுக்கு நண்பன் அவன்.

 .மேரி ஞாயிறுப் பொழுதுகளில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் தேவகீதம் இசைக்கும் குழுவில் இருப்பவள்.

 அதனால் பல ஞாயிறுப் பொழுதுகள் அங்கே தவம் இருந்தோம்.

 அருகில் இருக்கும் பொண்ணம்பல வானேஸ்வரர் ஆலயத்தைக் கூட  பார்க்கவிடாமல் .

தனக்கு காவலுக்காக என்னையும் நந்தியாக்கி  விட்டு ஒரு தலையாய் காதலித்தவன் மேரியை.

  2000 ஆண்டு நத்தார் பண்டிகை மறக்க முடியாது நம் நட்புக்கு!

 ஆலய பூசையில் கலந்து விட்டு வந்தவளிடம் தன் காதலைச் சொன்னான் ஜேம்ஸ்!

 அவளிக்கும் இவன் ஒரு அப்பாஸ் என்ற அடிமனத்து எண்ணத்தின் வண்ணத்தில் காதல்ப் பூக்கள்  தொலைபேசிக் குறுஞ்செய்தியாக வலம் வந்தது.

 பின் சில பொழுதுகளில் செல்வமஹால் திரையரங்கும் சில்மிஸம் செய்யும் சோதனைக் கூடம் ஆனது.

  அவர்களுக்கு உதவியாக எட்டி இருக்கும் என்னையும் செல்வமஹால் திரையரங்கு மூட்டைப் பூச்சுகளும் முத்தமிட்டது முதுகில்.

 அவன் தம்பிக்கு எல்லாம் இது தெரியும் !என்னுடன் இருந்து  ஐஸ் சொக்கும், சிப்ஸும் தெவிட்டாமல் திண்பதில் அவனும் ஒரு வெண்ணை திண்ட கண்ணன் என என்னவைப்பான்.

 ஆனாலும்! அவனையும் விதிவிடவில்லை. பதுகாப்புக்கண்களுக்கு சந்தேகம் வந்ததில்.

 அவன் கைபேசியில் யாரோ செய்த செயலில்  புலனாய்வுப் பொலிஸ் ஜம்பட்டா பொலிஸ் நிலையம் கொண்டு போனார்கள்.

 அதன் பின் மேரியின் தந்தை லூக்கஸ் எம்புட்டுப் பாடு பட்டும் .இன்றுவரை தகவல் இல்லை. வியாபாரத்தின் வீழ்ச்சி சூறாவளியாகியது!

 சில நாட்களில் பலகாசோலைக்கள் திரும்பி வந்தது காசு இல்லாமல்.

 எத்தனை நாள் கடன் சொல்வது என்று தெரியாமல் இருந்த தந்தை. கடையை மூடிவிட்டு குடும்பத்துடன்  ஒர் இரவில் இருந்தசுவடு தெரியாமல் நாடு விட்டு ஓடிவிட்டார் இந்தியாவிற்கு!

 இனி என்னை மறந்திடுங்கள் என்று அவள் சொன்ன அழைப்புத் தான் மேரி எடுத்த இறுதி அழைப்பு.!

 இதயத்தில் ஈட்டி தாக்க நிலைகுழைந்தான் ஜேம்ஸ்.

  ஸ்டவுட்டும், மெண்டிஸ்சும் பாம்பராக்கும் ,பத்தவில்லை. வேதனைக்கு மருந்தாக !

வேலையில் ஒழுங்கில்லை தூக்கிவிட்டது நிர்வாகம் .

.இத்தனையும் தெரிந்தும் என்ன செய்ய
முடியும் என்னால் .

தந்தைக்கு  தொலைபேசியில்





தூண்டிவிட்டேன்!

  .போதையில் துவலும் இவன் திருந்த ஒரேவழி !போய் வா புலம் பெயர் தேசம் என்று தமக்கையிடம்  அனுப்பி விடுவோம் . .தந்தையும்  சம்மதிக்க
நடைபிணம் போல் நாடுவிட்டுப் போனான் ஜேம்ஸ்


   கனடாவிற்கு.!

காலநிலை மாற்றம் போல்  அவனும் மறந்து போனான் நம் நட்பை.

 அவனோடு சுற்றித்திரிந்த அந்தோனியார்,கொட்டஞ்சேனை சாந்தோம் மாதா தேவாலயங்கள் ஞாபகங்கள் இன்றும் என் விழிகளில்!

 காலம் பல நண்பர்களை நல்ல நூல் வடிவங்கள் ஆக்கின்றது! அதே வேகத்தில் யாழ் நூலகம் போல் எரித்துவிட்டும் செல்கின்றது இன்னும்
தொடர்கின்றது என்பதும் ஒரு சோகம் தான்.!


அவனுக்கு விருப்பம் இந்தப்பாடல்!
.பைபிள் வாசகங்களைத் தாங்கி வைரமுத்துத் தீட்டிய வர்ணக்கோவை. அனுராதா சிரிராம் இப்படியும் பாடுவார் என்பதையும் . கோலம்  இட்டது.

 ரகுமானின் மெல்லிசையில் வந்த இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம்! அந்த நண்பர் முகம்  நெஞ்சில்  நிழலாடுகின்றது! என்றாவது ஒரு புள்ளியில் சந்திக்கலாம் என்ற ஜீவனில்!

நண்பர்கள், வாசகர்கள் ,அனைவருக்கும் தனிமரத்தின் இன்பம் பொங்கும் இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்!


 வலையுலகில் அருவாள் புகழ் அண்ணண் நாஞ்சில் மனோவிற்கும் அவர் குடும்ப உறவுகளுக்கும் தித்திக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.





      தகவல்-) தனிமரத்தின் சிந்தனையை செதுக்கிவரும் வலைப்பூவை தன் அழகிய தொழில் நுட்பத்தினால் பல்வேறு பணிகளுக்கு இடையிலும் ,இணையத்தின் உதவியுடன் அலங்காரம் செய்து தந்த நிகழ்வுகள் கந்தசாமிக்கு .

.என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
 புதிய தொடருக்கு வெள்ளோட்டப் படமும் தந்து கைகொடுத்தவர் அவரே!

விரைவில் வரும் தொடர் உங்களை நாடி. அதுவரை தொடரும் தனிப்பட்ட தேடல்!

35 comments :

Unknown said...

காலம் கடந்தாலும் நட்ப்பு மறக்குமா..மாப்ள உங்களை தேடி வரும் பாருங்கள் நண்பனின் நட்ப்பு!

Admin said...

நண்பனும் நிகழ்வுகளும்..அருமை ..நிறைய விசயங்களை கலந்து கட்டி அடித்திருந்தீர்கள்..தொடரையும் எதிர்பார்க்கிறேன்..வாழ்த்துகள்..

படங்கள் பாடல் அருமை..

அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

ஹேமா said...

புதுத் தொடர் ஆரம்பமா.காத்திருக்கிறோம் நேசன் !

நட்பையும் யாழ் நூலகத்தையும் ஒன்றுபடுத்தியது நெகிழ்வு !

MANO நாஞ்சில் மனோ said...

வலையுலகில் அருவாள் புகழ் அண்ணண் நாஞ்சில் மனோவிற்கும் அவர் குடும்ப உறவுகளுக்கும் தித்திக்கும் நத்தார் தின நல் வாழ்த்துக்களை விசேடமாக தெரிவித்துக் கொள்கின்றேன்.//

பாசக்காரன்ய்யா....!!!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த கிறிஸ்மஸ் அண்ட் புதிய வருட வாழ்த்துக்கள் மக்கா...!!!

MANO நாஞ்சில் மனோ said...

காலநிலை மாற்றம் போல் அவனும் மறந்து போனான் நம் நட்பை.//

நட்பை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது நண்பா, நண்பன் மீண்டும் வந்து சேருவான் பாருங்கள்...!!!

தனிமரம் said...

நன்றி விக்கியண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி மதுமதி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்! விரைவில் முயல்வேன் தொடர் தருவதற்கு!

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

உங்கள் இந்த பதிவை வாசிக்கும் போது உண்மையில் மனம் வலிக்கின்றது கால ஓட்டத்தில் எத்தனை காதல்கள்,நட்புக்கள் மறைந்து போகின்றன இனி கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயப் பக்கம் போகும் போது எல்லாம் உங்கள் நண்பனும் அவரது காதலும் தான் நினைவுக்கு வரும்

தளவடிவமைப்பு சூப்பராக இருக்கு கந்து வடிவமைத்தால் சொல்லவா வேணும் org க்கு பதிலாக com என்று டொமைன் வாங்கியிருக்கலாம் ஏன் தனிமரம் என்ற பெயரில் com முகவரி கிடைக்கவில்லையா

மகேந்திரன் said...

ஒரு நீரோட்டம் போல உங்கள் எழுத்துக்கள் அழகு.
இனிய நத்தார் வருட மற்றும் கிறிஸ்துமஸ் தின நல் வாழ்த்துக்கள்.

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!இனிய நத்தார் வாழ்த்துக்கள்!அந்த நண்பர் பதிவுகள் படிப்பாரா தெரியவில்லை.அப்படியாயின் நட்புத் தொடர வாய்ப்பிருக்கும்.புதிய ஆண்டில் நல்லது நடக்க இறைவனை வேண்டுவோம்!

சுதா SJ said...

மகேந்திரன் அண்ணா சொன்னது போல் தெளிந்த நீரோட்டம் போன்ற உங்கள் எழுத்துக்கு எப்போதும் நான் ரசிகனே பாஸ்.... ரெம்ப நல்லா இருக்கு

சுதா SJ said...

நட்புக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியதுவம் அழகு... காதல் கதைகள் சொல்லுவது ரெம்ப சுவராசியம்தான்.. அதுவின் நண்பனின் காதல் கதை என்றால் சொல்லவே தேவை இல்லை.... ஹா ஹா.... ரெம்ப ரசிச்சேன்.

சுதா SJ said...

அன்பென்ற மழையிலே....... எனக்கு ரெம்ப புடிச்ச பாடல்... ;))

சுதா SJ said...

புதிய தொடருக்கே இப்பவே காத்திருக்கேன் பாஸ் :)

N.H. Narasimma Prasad said...

ஒரு சிறுகதை போல இருக்கிறது உங்கள் பதிவு. பகிர்தலுக்கு நன்றி. இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

ஆகுலன் said...

நட்பு இவளவு செய்யுமா...

கதைதான் சோகம்...:(

Anonymous said...

காலமும் நேரமும் கூடி வந்தால் மீண்டும் நீங்கள் இருவரும் சந்திக்க வாய்ப்பு உள்ளது... கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்கள்

Anonymous said...

நமக்கெல்லாம் எதுக்கு பாஸ் நன்றி ;)

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅவளிக்கும் இவன் ஒரு அப்பாஸ் என்ற அடிமனத்து எண்ணத்தின் வண்ணத்தில் காதல்ப் பூக்கள் தொலைபேசிக் குறுஞ்செய்தியாக வலம் வந்தது.ஃஃஃஃ

யோவ் ஒப்பீட்டுக்கு அந்தளைக் கூப்பிட்டு ஏன்யா உம்ம வயதை பிடி கொடுக்கிறீர்...

இருந்தாலும் அருமையான நெருடல் பதிவு ஒன்று..

அம்பலத்தார் said...

வணக்கம் நேசன், உங்க பதிவுகளும், நீங்க அடுத்தவங்க பதிவுகளிற்கு இடும் பின்னூட்டங்களும் உங்க பரந்த அனுபவங்களையும், ஈழத்து இலக்கியங்களில் உள்ள அறிவையும் ஈடுபாட்டையும் புலப்படுத்துகிறது.

அம்பலத்தார் said...

நேசன், மலையகத்தில் முகம் தொலைத்தவன் உங்கள் பரந்த அனுபவங்களுடன் மலையக மக்களின் வாழ்வியலை சொல்லும் சுவாரசியமான தொடராக வரும் என எதிப்பார்க்கிறேன்

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கிறீங்களா?

நட்பின் நினைவலைகளைப் சுவாரஸ்யத்தில் தொடங்கிப் பிரிவில் முடித்திருக்கிறீங்க.

நிரூபன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

தனிமரம் said...

நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும். com /இல்லாத காரணத்தால் சில எதிர்கால நலனின் காரணத்தால் மாற்றிவிட்டேன்!

தனிமரம் said...

நன்றி மகேந்திரன் வருகைக்கும் கருத்துரைக்கும். 

தனிமரம் said...

நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும். 

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன்  வருகைக்கும் கருத்துரைகளுக்கும் ! 

தனிமரம் said...

நன்றி பிரசாத் உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும் ! 

தனிமரம் said...

நன்றி ஆகுலன்உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும் ! அதிகம் நட்பு காயப்படுத்தும் நான் கண்ட அனுபவம்.

தனிமரம் said...

நன்றி கந்தசாமி உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும். நன்றி சொல்வது நம்
கடமை அல்லவா?

தனிமரம் said...

நன்றி மதிசுதா உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும். அவரின் வயதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லைத் தம்பி! ஹீ
ஹீ

தனிமரம் said...

நன்றி அம்பலத்தார்  உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும்.நிச்சயம் முயல்கின்றேன் வரும் தொடரில்! 

தனிமரம் said...

நன்றி நிரூபன்   உங்கள்  வருகைக்கும் கருத்துரைக்கும்.வாழ்த்துக்களுக்கும்!