13 April 2018

தொங்கு பாலம்!

சாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர்  பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்டிய இவ்வாரப்பார்வையை தனிமரம் நானும் , அல்பஸ்தென்றல் நிஷா அக்காவும் பார்த்து ரசித்து கருத்தினை பகிர்ந்து கொண்டபோது !



இந்த தொங்கு பாலத்தில் முழுவதாகவும் நான் நடக்கவில்லை பயத்தின் காரணமாக என்று கூறிய நிலையில் !


தொங்கு பாலம் பற்றி என் கடந்தகால நினைவுகள் மின்னல் போல தட்டிச்சென்றதன் விளைவே இப்பகிர்வு






இலங்கையில் தொங்கு பாலம் என்றால் பலருக்கு தெரிந்தது பேராதனைப்பூங்காவில் இருக்கும் தொங்கு பாலம்

பேராதனைப்பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்களின் இருதய  இடமாற்றப்பகுதி ஒரு புறம் என்றால், இயற்கை விரும்பிகளின் இனிய மாலைப்பொழுது போக்கு மையமும் இந்த இடம் தான்


உன்னைநினைத்து படத்தில் லைலைவுடன்என்னைத்தாலாட்டும் சங்கீதம் நீயல்லவாபாடலில் இந்த பேராதனை தொங்கு பாலம் சினிமாவிலும் வந்திருப்பது மகிழ்ச்சியான விடயம்

ஆற்றினை ஊடறுத்து இந்த தொங்கு பாலம் இருபுறமும் போக்குவரத்துக்காக இருப்பதும், தவறிவிழுந்து போகாதவாறு வரை இருபுறமும் பாதுகாப்பாக கட்டபடிருக்கும் இந்தப்பாலம் கீழே விழுந்தால்! காதலில் தோல்வியில் தற்கொலை போல 
இந்த ஆறு போய் கடலுடன் முடிவது கிழக்குமாகாணத்தில்.

 கங்கையாளே என்ற ஈழத்துப்பாடல் முருகையன் கற்பனையை இன்னும் மறக்காத முந்திய தலைமுறைக்கு நிச்சயம் பேராதனிய தொங்கு பாலம் நெஞ்சில் ஓர் ராகம் போல))) 

இது போலவே இலங்கையில் இன்னொரு பகுதியில் ஒரு தொங்கு பாலம் இருந்ததுக்கு கடந்தகால வாழும் சாட்சிகளில் இந்த பரதேசி படம் போல ஊர்கள் சுற்றிய. தனிமரம்  ஒருவன்.

 அதிக பாதுக்காப்பு வசதிகள் அற்று இருபுறமும் இரு கயிறுற்றில் நடப்பது என்பது பொம்மலாட்டம் போல அல்ல கரணம் தப்பினால் மரணம்   அப்படியான தொங்கு. பாலம்  அது எங்கே இருக்கு?

 மலையகத்தின் எழில்கொஞ்சும் பதுளை மண்ணில் இருக்கும் கலன் தோட்டத்திற்கும்  பதுளைப்பிட்டிய என்ற இரு ஊர்களுக்கு இடையில் கைகொடுக்கும் கை போல!

கலன் தோட்டத்திற்கு வாகனத்தில் பிரதான வழியாக செல்வது என்றால் அதிக தூரம் எடுக்கும். ஆனால் பொடி நடையாக மல்லுவேட்டி மைனர் போல  குடையோடு வாத்தியார்ர்கள் லயப்பாடசாலைக்கு  நடப்பது என்றாலும், கல்வியின் எழுச்சியே மலையக மக்களின் வாழ்வியல் விடிவெள்ளியாக  இருக்கும் என்ற இளமை எழுதும் கதை போல பள்ளிக்கூடம் செல்வது என்றாலும் , நானும் உங்கள் தோழன் என்று கோஷம் போடும் அரசியல்வாதிகளும் இந்த தொங்கு பாலம் ஊடாக பலர் பயணித்தார்கள்  பல தாசாகப்தம்.

 கலன் தோட்டத்துக்கும் பதுளை நகரின் புறநகரான பதுளைப்பிட்டியையும் இணைப்பது இந்த தொங்கு பாலம் ஆகும் .

கீழே பதுளையின்  முத்தியங்கன ரஜமாஹா விகாரையின் பின்புறத்தில் இருந்து பயணிக்கும் கிளையாறு இந்த பதுளைப்பிட்டி ஊடாக பயணித்து கிழக்கு மாகாணக்கடலில் சங்கமிப்பதும் ஒரு சுவாரசியம்

இந்த தொங்கு பாலத்தில் பயணித்த பல சிட்டுக்கள் அன்றைய நதியாகால இரண்டில் ஒன்று பட நாரினில் பூத்தொடுத்து  பாடலில் வருவது போல டிபன் பொக்சில் சில துண்டு ரொட்டி கொண்டு வருவதும், அதில் இருப்பது ரொட்டி தானா ?என்று பார்ப்பது போல சிவகாமி நினைப்பினிலே பாடம் சொல்ல மறந்த ,காதல்க்கடிதம் எழுதிய முகங்களையும் ,உன்னை மறந்து வேறெபெண்ணா அன்பே, ,அடி இது நீ இருக்கும் நெஞ்சம்மடி ,அழகிய பொன்வீணையே என்னோடு வா என்றெல்லாம் உருகி உருகிக்காதலித்த உருகும் பிரெஞ்சுக்காரி போல பல சினேஹாக்கள் மட்டுமா ?

பெரும்புள்ளி பட பாபு போலவும்,


ஒரு தலை ராகம்

ராகம் சங்கர் போலவும்  பலரை கடந்து சென்று இருப்பது இந்த தொங்கு பாலம்.!!


 சிங்களவர்களும்,தமிழர்களும்,இஸ்லாமியர்களும் இனவெறிகடந்து இப்பாதை ஊடாக வியாபாரம் செய்த கதைகள் எல்லாம் இன்னும் நீங்காத நினைவுகள்.

 சகோதமொழி இளைஞன் காதலித்து ஏமாற்றிய அனோம போன்ற ஏழைக்குடிசைவாசிகளின் தற்கொலைபலிபீடமும் இந்த தொங்கு பாலம் எனலாம்.

 அதிக பாதுக்காப்பு இல்லாத இப்பாதையில் சில சிங்கள தொடர் நாடகங்கள் காட்சிகளாக எடுக்கப்பட்டிருப்பதும் மறக்கமுடியாத மறைக்கமுடியாத,  தனிக்கை செய்யமுடியாத விடயம்.

இப்பாலம் எப்படி இருக்கும் என்றால் ?கொஞ்சம் சிந்திக்க இணைந்த கைகள் படத்தில் அருண்பாடியனும்,ராம்கியும் மலையைக்கடக்க ஆபாவணனன் காட்சிப்படுத்துவாரே அழகாய் ஒரு  ஒரு காட்சி அப்படி இருக்கும்!


 என்றாலும் கீழே ஓடும் ஆறு அதிகம் ஆழம் இல்லை  சின்னம்மா  மனசு போல  சத்தியம்)))
ஆனால் மாரி காலத்தில் அதிக நீரோட்டம் இருக்கும்.

 தொங்கு பாலத்தின்  வளர்ச்சி சீமெந்துக்கலவை  மேம்பாலம்  இன்று  வந்திருக்கலாம் என நம்புகின்றேன் . இதில் எத்தனை ஊழல்கள் இடம்பெற்று இருக்கும் என்பது எல்லாம் சேப்பாக்கம்  கிரிகட் விளையாட்டு போல நிராகரிக்க முடியாது.

   என் நட்புடன் இந்த தொங்கு பால இன்றைய நினைவிடக்காட்சியை முடிந்தால் ஒரு காட்சிப்படத்தை அனுப்பு என்றேன் வைப்பரில்

உடனே அவன் பதில் இப்ப அந்தபாலம் இருக்கோ தெரியாது ?நானே மறந்திட்டன், உனக்கு எப்படிடா இன்னும் இந்த ஞாபகம் இருக்கு என்று அவன் கேட்ட அக்கனம்?

 இதயம் பட ஹீரா நினைவில் வந்து போனது  பாட்டி நல்ல பாட்டி தான் என்று ஜொல்லுவிட்ட எத்தனைபேரினை ,இன்றும் நிஜத்தில் கலியாணம் முடித்து ,பிள்ளைபெற்று பிள்ளையும் அடுத்த தலைமுறை பார்க்கும் பாட்டியான கதைகள் எல்லாம் தனிமரம்  முகநூல் நட்பில் இருக்கின்றதே ! அந்த தனிமரம் மட்டும் எப்ப தோப்பாகும்? அதை விரைந்து எழுதுவேன் என்ற போது!


 நீ திருந்ததா ஜென்மம்டா என்று திட்டுவதை என்ன சொல்ல ?)))தனிமரத்தின் நினைவுச்சொத்துக்கள்  தான் இன்றும் என்னிடம் இருக்கும் பெரிய கையிருப்பு என்ற பதில் கேட்டு முகநூலைவிட்டே ஓடிவிட்டான் போல)))



இப்படியான தொங்கு பாலம் சிங்கப்பூர் செந்தோஷா பார்க்கிலும் சுற்றுலாவாசிகளை கவர்வதற்காக இன்றும் இருப்பதும்!

 இந்த மூன்று தொங்கும் பாலத்தில் தொங்கியும் !இன்னும் திருந்தாத  உள்ளத்திற்கு என்று தான் புத்தி வருமோ என்று சாமியிடம் சரண் புகுந்தால்!


 சபரிமலைப்பயணத்தில் பெருவழி நடந்தவர்கள் முந்திய தலைமுறையினருக்கு அழுதாமலை அற்றுக்கும், கரிமலைத்தொடக்கத்திற்கும் இடையிலும் ஒரு தொங்கு பாலம் இருந்ததும், இன்று அங்கேயும் மேம்பாலம் வந்து பாதயாத்திரிகளுக்கு பாதச்சுமை நீங்கியிருப்பதும் காலத்தின் மாறுதல் எனலாம்!

 காலம் மாறினாலும் மனசுக்கு மட்டும் இன்னும் புரியாத புதிர்கள் அதிகம் இருப்பதும் இப்பூமியில் நிஜம் சாகசங்கள் செய்யும் மக்களை நோக்கும் போது!

என் பிள்ளைகளையும் என்றாவது ஒரு நாள் நான் பார்த்த ஊர்களுக்கு கூட்டிடுச்செல்ல வேண்டும் நண்டுபடம் போல)))

பதிவு எழுத தூண்டிய  துளசி அண்ணாவுக்கும் நிஷா அக்காவுக்கும் நன்றிகள்!


தனிமரத்தின் அன்பர்கள் ,நண்பர்கள் ,வாடிக்கையாளர்கள்,வாசகர்கள் ,அனைவருக்கும் தித்திக்கும் விளம்பி புதுவருட நல்வாழ்த்துக்கள்.



8 comments :

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

பல படங்களை நினைவு கூர்ந்து சொன்னது சிறப்பு...

KILLERGEE Devakottai said...

படங்களின் வழியே கடந்ததை இரசித்தேன்

முற்றும் அறிந்த அதிரா said...

ஆவ்வ்வ் இம்முறை சற்று வித்தியாசமான போஸ்ட்.. தொங்குபாலம்.. பேராதனை பார்க் போயிருக்கிறேன்.. தொங்குபாலம் நினைவில்லை.

ஆனா நல்லூரடியில் கட்டப்பட்டிருந்தது ஒரு பெரிய பூங்கா.. அதில் குட்டித் தொங்குபாலமும் இருந்தது.. ஏறியிருக்கிறேனே:)).. வெளி நாடுகளில்.. பார்க் களில் அதிகம் உண்டுதானே.. ஆனா இவை எல்லாம் பயங்கரம் இல்லையே உங்கள் படங்கள்போல:)

Yarlpavanan said...

தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!


கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே

putthan said...

வாசித்தேன் ரசித்தேன்

Tamilus said...

சுவாரசியமான பதிவு. சில நினைவுகளை மீட்டிச் சென்றது

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US