25 April 2013

ஐபோனில் தமிழா!! தனிமரமா???

அப்பிள் நிறுவனத்தின் அரிய வெளியீடான ஐபோனின் வருகை ஒரு வரப்பிரசாதம் .தனிமரம் என்ற வலைப்பதிவில் இன்றுவரை நான் எழுதும் பதிவுகள் எல்லாம் இந்த ஐபோன் செய்யும் மாஜம் தான் .

பாடல் இணைப்பும் காட்சிப்பட இணைப்பும் மட்டுந்தான் காட்டானின் கணனி செய்து தந்த உதவி கடந்த ஆண்டுவரை.:)))  .

இந்த ஐபோனில் எப்படி தமிழில் எழுதுவது என்றாள்?

அப்பள் ஸ்டோரில் போய் செல்லினம் என்ற அப்பளிக்கேசனை தேடினால் மு என்ற தமிழ் வடிவம் முன்னே வரும் .*

இதன் கண்டுபிடிப்பாளர் முத்து நெடுமாறனின் முயற்ச்சி .இவர் ஒரு மலேசிய மைந்தன்.

அதனை உங்கள் கைபேசியில் தரவிறக்கவும்.அதன் பின் செல்லினம் உங்கள் வசம் 
தரவிறக்கியபின் விரும்பியதை தமிழ் மொழியில் நீங்கள் எழுதமுடியும்.

செல்லினம் தமிழில் நீங்கள் விரும்புவதை ஆங்கில வரிசைக்கிரமத்தில் எழுதுங்கள் .

ஒவ்வொரு பொன்ஸ்சும் நெடில்  எழுத்தை எழுத  அதன் அம்புக்குறி படத்தை ஒரு தடவை அழுத்துவன் ஊடாக நெடில் எழுத்தை பெறலாம்!

அதன் சாதாரன அமைப்பில் குறில் எழுத்துக்கள் சீராகவே இருப்பது அதன் சிறப்பம்சம் .

இதில் இருக்கும் குறைபாடு என்றால் தொடர்ந்து எழுதிக்கொண்டு போகும் போது நீண்ட பந்தி வந்தால் தட்டச்சு வேகம் குறைந்துவிடும் .அதனால் மிகவும் இலகுவான வழி சிறிது சிறிதாக எழுதிவிட்டு அதனை இன்னொரு இடத்தில்  காப்பி செய்துவைத்துவிட்டு தொடர்ந்தால் காரியம் இலகுவாகும் .

மீண்டும் பதிவு முழுமையடைந்து விட்டது என நீங்கள் நினைத்தால் பகுதி பகுதியாக காப்பி செய்ததை மீண்டும் ஒன்றாக்கிவிட்டு பிழைதிருத்தம் செய்ய முடியும்.

முதலில் சற்று கடினம் என்றாலும் தொடர்ந்து தட்டும் போது எழுத்துக்கள் மனதில் தங்கிவிடும் பிறகு வார்த்தைகள் மிகவும் இலகுவாக வந்துவிடும் .!
மேலதிக விபரம் இங்கே கிடைக்கும்.-http://sellinam.com/

..இந்தப்பதிவு எழுத்தக் காரணம்  ரெவெரி அண்ணாச்சி அவருக்கு தனிமரத்தின்  நன்றிகள்.

தனிமரம் பாரிசில் இப்படித்தான் அப்போது உருகியதோ  ஹீ

அடஐபோன் வந்த போது!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

22 comments :

நெற்கொழுதாசன் said...

காட்டான் அண்ணாவின் முகத்தை காட்டி விட்டிங்களே ...............ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு என்னமாய் குத்துக்களை போட்டிங்க ...........நீங்க எல்லாம் நல்லா வருவீக

இளமதி said...

ஓம் நேசன் நீங்கள் சொல்லுறது உண்மை. இந்த செல்லினம் ஐபோன் ஐபாட் இரண்டிற்கும் நல்ல உதவி. ஆனால் ஒரே ஒரு குறைபாடெனக்கு இதில என்னவென்றால் எழுத்துக்களை பெரிய புளியங்கொட்டை சைசில் மெயிலில் காட்டுது. அதைவிடவும் நீங்கள் வலைச்சரப்பதிவாளரா இருந்த நேரம் அங்கு நீங்க எழுதிப்பதிவு செய்த எழுத்துக்களை கவனித்தேன். பெரிசு பெரிசா இருந்திச்சு. ஆனா கருத்துப்பதிவு இதிலை எழுதும்போது எப்பவும்போல ஒரே அளவில் காட்டுது.
நான் ஐ பாட்டில் இதன் பிரயோகத்தை செய்து பார்த்துள்ளேன்.
எனக்கும் இந்த தொழில்நுட்பம் பெருமளவில் தெரியாது. யாரும் உதவினால் சந்தோசமே...

உங்களின் இந்தப் பதிவு மிக உபயோகமானது. மிக்க நன்றி நேசன்!

த.ம. 2

S.டினேஷ்சாந்த் said...

நீங்களும் மொபைல் பிளாக்கரா? நம்ம கட்சி தான்.என்ன கொஞ்ச வித்தியாசம்.நீங்க ஐபோன்,செல்லினம் என்று போக நான் அன்ட்ராய்ட்,பிளாக் இற்,தமிழ்விசை என்று பயணிக்கிறேன்.

Seeni said...

ada..!

athu sari..!

கவியாழி said...

நன்றிங்க நண்பரே கைபேசியில் தட்டச்சு வசதியை சொல்லியமைக்கு நன்றி. நானும் இனி அப்படியே எழுத முயற்சிக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

மடிக்கணினியே என் வேகத்திற்கு சரியில்லை என்று முடிவு செய்து விட்டேன்... ஐபோனில் இவ்வளவு பகிர்வுகள் அசத்துவதென்பது-ம்ஹீம்... என்ன சொல்வது...? வாழ்த்துக்கள்...

இனிய நண்பர் ரெவெரி அவர்களுக்கும், நண்பர்களுக்கு சொல்ல செல்லினம் முகவரிக்கும் நன்றிகள் பல...

MANO நாஞ்சில் மனோ said...

சரிய்யா நானும் இனி ஐபோன் வாங்கிருதேன், பிரயோசனமுள்ள பதிவு வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

முற்றும் அறிந்த அதிரா said...

மிக நல்ல தகவல் பகிர்ந்திருக்கிறீங்க நேசன்.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை..

அப்படியே பக்கத்தில் மனைவியையும் சேர்த்துப் போட்டிருந்தால் நாங்க பார்த்திருப்பமில்ல... சரி சரி வாணாம்ம் நான் ஒண்ணும் சொல்லல:).

reverienreality said...

நலமா நேசரே...

என் விருப்பத்தை பதிவு மூலம் பூர்த்தி செய்ததற்கு நன்றி...

இந்த வார இறுதியில் முயற்சி செய்து சொல்கிறேன்...

மறுபடி சந்திக்கலாம்...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நேசன்....
உங்க பிளாக் ரகசியத்தை ஓபன் பண்ணிட்டிங்களே!!!!

தனிமரம் said...

காட்டான் அண்ணாவின் முகத்தை காட்டி விட்டிங்களே ...............ஒரே வீட்டுக்குள் இருந்து கொண்டு என்னமாய் குத்துக்களை போட்டிங்க ...........நீங்க எல்லாம் நல்லா வருவீக//வாங்க நெற்கொழுதாசன் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் காட்டான் படம் முதலில் அகசயம் வலைப்பதிவாளர் வெளியீடு செய்துவிட்டார்!ஹீஈஈஈஈஈஈஈ!குத்தில் உள்குத்து இல்லை ஐயா!ஹீ!நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஓம் நேசன் நீங்கள் சொல்லுறது உண்மை. இந்த செல்லினம் ஐபோன் ஐபாட் இரண்டிற்கும் நல்ல உதவி. ஆனால் ஒரே ஒரு குறைபாடெனக்கு இதில என்னவென்றால் எழுத்துக்களை பெரிய புளியங்கொட்டை சைசில் மெயிலில் காட்டுது. அதைவிடவும் நீங்கள் வலைச்சரப்பதிவாளரா இருந்த நேரம் அங்கு நீங்க எழுதிப்பதிவு செய்த எழுத்துக்களை கவனித்தேன். பெரிசு பெரிசா இருந்திச்சு. ஆனா கருத்துப்பதிவு இதிலை எழுதும்போது எப்பவும்போல ஒரே அளவில் காட்டுது.
நான் ஐ பாட்டில் இதன் பிரயோகத்தை செய்து பார்த்துள்ளேன்.
எனக்கும் இந்த தொழில்நுட்பம் பெருமளவில் தெரியாது. யாரும் உதவினால் சந்தோசமே...

உங்களின் இந்தப் பதிவு மிக உபயோகமானது. மிக்க நன்றி நேசன்!

த.ம. 2//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நீங்களும் மொபைல் பிளாக்கரா? நம்ம கட்சி தான்.என்ன கொஞ்ச வித்தியாசம்.நீங்க ஐபோன்,செல்லினம் என்று போக நான் அன்ட்ராய்ட்,பிளாக் இற்,தமிழ்விசை என்று பயணிக்கிறேன்.//நன்றி டினேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ada..!

athu sari//நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றிங்க நண்பரே கைபேசியில் தட்டச்சு வசதியை சொல்லியமைக்கு நன்றி. நானும் இனி அப்படியே எழுத முயற்சிக்கிறேன்.//நன்றி கவியாழி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மடிக்கணினியே என் வேகத்திற்கு சரியில்லை என்று முடிவு செய்து விட்டேன்... ஐபோனில் இவ்வளவு பகிர்வுகள் அசத்துவதென்பது-ம்ஹீம்... என்ன சொல்வது...? வாழ்த்துக்கள்...

இனிய நண்பர் ரெவெரி அவர்களுக்கும், நண்பர்களுக்கு சொல்ல செல்லினம் முகவரிக்கும் நன்றிகள் பல...//நன்றிகள் தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சரிய்யா நானும் இனி ஐபோன் வாங்கிருதேன், பிரயோசனமுள்ள பதிவு வாழ்த்துக்கள்....

25 April 2013 19:50 //நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துக்கும்.

தனிமரம் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...//நன்றி தனபாலன் சார் தகவலுக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

மிக நல்ல தகவல் பகிர்ந்திருக்கிறீங்க நேசன்.. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை..

அப்படியே பக்கத்தில் மனைவியையும் சேர்த்துப் போட்டிருந்தால் நாங்க பார்த்திருப்பமில்ல... சரி சரி வாணாம்ம் நான் ஒண்ணும் சொல்லல:).

26 April 2013 03:07 //நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலமா நேசரே...

என் விருப்பத்தை பதிவு மூலம் பூர்த்தி செய்ததற்கு நன்றி...

இந்த வார இறுதியில் முயற்சி செய்து சொல்கிறேன்...

மறுபடி சந்திக்கலாம்..//நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் முயலுங்கள் ஏதாவது தயக்கம் எனில் கேளுங்கள்.உதவுகின்றேன்.

தனிமரம் said...

நேசன்....
உங்க பிளாக் ரகசியத்தை ஓபன் பண்ணிட்டிங்களே!!!!//இதில் என்ன இருக்கு தமிழ்வாசி முன்னர் இடக்கு முடக்காக சொல்லியது இப்போது பதிவாக!ம்ம் !ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.