29 January 2013

விழியில் வலி தந்தவனே!!! முதல் வலி


சர்வதேச நாளேடுகளிலும் இலங்கை தேசிய நாளேடுகளிலும் சட்ட மூல ஆராய்வு என்ற வார்த்தைப்பிரயோகத்தின் மூலம் ஈழமக்கள் பலரும் சட்ட சீர்திருத்த அமைப்பு,நிறைவேற்று ஜனாதிபதி  முறை என்றால் என்ன என்று உண்மையில்  தெரியாத சாமானிய மக்கள் பலர் சிந்தித்துக் கொண்டு  இருந்த  இலங்கையின் சமாதான நாடகத்தின் நடவடிக்கை தேக்கம் கண்ட நிலையான2005 ஆம் ஆண்டின் தைமாதத்தில்.... !


அப்படியான தையில்
முதல் வாரம் ரகு உயர்தரவகுப்பில் சேர்ந்திருந்த ஆரம்ப நாட்கள் .


எதிர்காலம் எப்படி அமையும் என்ற கற்பனைக்கு விதை விதைக்கப்படும் காலம்.

பாவையர் பார்வையில்  பள்ளிப்படிப்பு பல்கலைக்கழகம் தாண்டுமா ?இல்லை பாதியில் நிற்குமா நீ தானே என் பொன் வசந்தம் .

என புலம்பும் இந்த இரண்டுவருடம் படிப்பில் ஒழுங்காக கவனம் செலுத்தினால் தான் எதிர்கால வாழ்கை பிரகாசமாக இருக்கும் என்ற நிலையில் ரகு !

கல்வியே நாளை நமதே நம் வாழ்வின் ஒளியே இந்த கல்வி அறிவே என பாமரன் பாதையே என்றது  முதல் நோக்கமாக இருந்தது.


ரகுவின் தந்தை ஒரு விவசாயி .நடுத்தர குடும்பம் அவர்களுடையது .ரகுவின் பொழுதுகள் பெரும்பாலும் நண்பர்களுடனே கழியும்.

விவசாயி என்பதை இலகுவாக சொல்லிவிடலாம் .ஆனால் ஒருவிவசாயியின் கஸ்டம் என்ன என்பதை எழுத்தில் சொல்லிவிடமுடியாது.

நெல்லாடிய வயல் எங்கே... ???..என்ற பாடலில் வைரமுத்து இடையில் சரணத்தில்  எலிக்கறி தின்பது பற்றி விவசாயின் அவலம் எழுதியது எப்படி பலருக்கு புரியாதோ ??அப்படித்தான் இனவாத ஆட்சியினர் விவசாயத்தின் உப கரணங்கள் முதல், யூரியா வரை வன்னியில் தடைசெய்த நிலையியும் தென் இலங்கை மேட்டுக்குடியினர் பலருக்கு புரியாது.

 சேவை என்ற போர்வையில் மருத்துவ டாக்டர்கள் பணம் செய்யும் தொழில் போல அல்ல விவசாயம்!  

இது ஒரு சேவை நோக்கான பசியினைப் போக்கும் பாமரனின் புனிதமான தொழில்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் யாரும் விவசாயம் செய்ய முன் வருவது இல்லை. 

ஐடியில் அல்லது ஊடகத்தில் கழுத்துப்பட்டி  கட்டி சலாம் போட்டு அடிமையாக இருப்பது போல இன்றைய நவயுகம். முன்னர் போல அது எதோ படிக்காத பாமரர்களின் தொழில் என்ற நிலையில் அடையாளப்படுத்தப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்.இன்று இன்ஜினியர் கூட விவசாயத்துக்கு மீள் திரும்பும் நிலையில் .

உயர்தர வகுப்பிற்கு வரும் ஆசிரியர்கள் சுய அறிமுகம் மேற்கொள்ள சொல்லும் போது, தனது தந்தையின் தொழில் விவசாயம் என்று சொல்ல ரகு ஒரு போதும் தயங்கியது இல்லை.!

ஆனால் அதை சொல்லும் போது சக மாணவர்கள் ஏதோ சொல்லக்கூடாத இராணுவ ரகசியத்தைவெளிநாட்டு ஊடகத்துக்கு  இவன் சொல்லியது போல பார்ப்பதை எண்ணி பல முறை அவன் வேதனைப்பட்டதுண்டு.


நகரின் பிரதான பாடசாலைகளில் அதுவும் ஒன்று. நகரின் பெயரைக்கொண்டு அமைந்த பாடசாலையாகும். சமூகத்தில் பெரும் அந்தஸ்து உள்ளவர்களின் பிள்ளைகள் பலரும் படிக்கும் பாடசாலை. கல்வி,விளையாட்டு என்று கிளிநொச்சி மாவட்டத்தில் அதை அடித்துக்கொள்ள   வேறு எந்த பாடசாலையாலும் முடியாது.

ரகுவை போல சாதாரண குடும்பத்து பிள்ளைகளும் அங்கே படிக்கின்றார்கள் ரகுவின் இரண்டு தலைமுறை படித்ததும் அதே பாடசாலையில் தான்,!

மூன்றவது வம்சம் ரகுவும் படிப்பதும்  அதே பாடசாலையில் தான். முதலாம் வகுப்பு முதல் படித்துவருகின்றான். பிறகு 1996 ஆம் ஆண்டு கிளிநொச்சி இடப்பெயர்வின் பின் சில ஆண்டுகள் அந்த பாடசாலையை பிரிந்து இருந்த ரகு, 2001 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் மீண்டும் கிளிநொச்சிக்கு மீளக்குடியமர்ந்த பின் ரகு மீண்டும் அதே பாடசாலையில் படிக்கத்தொடங்கினான்.

8,9,10,11 என்று இப்போது உயர்தரத்திற்கும் வந்துவிட்டான் இன்னும் இரண்டு வருடங்களில் அவனுக்கு பாடசாலைக்கும் இடையிலான தொடர்புகள் அடுத்த இராணுவத்தளபதியின் பதவி போல முடிந்துவிடும்.


ரகு பிறக்கமுன்பே இனவாத யுத்தம் இருந்தது. அவன் பிறந்த பின்பும் இனவாத  யுத்தம் உச்சத்தில் இருந்தது ஏழரைச்சனியன் போல யுத்தத்திலே பிறந்து யுத்ததிலே வாழும் அப்பாவி பிறவிகள் அந்த ஈழ மண்ணின் மக்கள். ரகு உயர்தரம் படிக்க வந்த போது சமாதான காலம் !!

.எனவே தென் பகுதிகளில் இருந்தும் வேடிக்கை பார்க்க பலரும் வெற்றி நிச்சயம் என்றும் .அக்கினிச்சுவாலை, என்றும் இனவாத ஆட்சியில் இராணுவச்சிப்பாயாக முன்களத்தில் பணியாற்றிய சாமானிய கிராமத்து அப்புக்காமியின் மகனின் பேரில் மாதாமாதம் வங்கிக்கு காசு வரும் மகனிடம் இருந்து கடிதமும் நேரடி உரையாடலும் வராத பாமரசிங்கள மக்கள் தம் பிள்ளைகளைத்தேடி சுதந்திரமாக இராணுவ கேள்வி இன்றி சுதந்திரத்துடன் வடக்கு நோக்கிய பயணமும்!
 (முன்னர்  வடக்கு போக இராணுவ அமைச்சின் பாதுகாப்பு அனுமதிMOD  எடுக்க வேண்டும்)


சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் பயணித்தார்கள் ஒரு புறம் என்றால் மறுபுறம். வெளிநாட்டில் இருந்தும் பல்பொருள் அங்காடி திறக்கவும் ,

வெளிநாட்டில் வைத்திருந்த கடன் அட்டைப் பணத்தைக் கொண்டு சாமானிய வியாபார நிலையங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி சொகுசு பல்பொருள் அங்காடி திறக்கும் ஆங்கலாய்ப்பில் ஓடிவந்த வியாபார நரிகள் ஒருபுறம் என்றால்!

 இனவாத யுத்ததிற்கு முகம் கொடுக்கொடுக்கா முடியாமல் உயிர் தப்பவும் பொருளாதார மாஜமானைத்தேடி பின் கதவால் ஓடிய பலரும், பிறந்த மண்ணை பாசத்துடன் பார்க்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளாக  வன்னிக்கு வரத்தொடங்கிய காலம்.

அவர்களை எல்லாம் பார்க்கும் போது அட நாங்களும் யுத்தம் இல்லாத ஒரு பூமியில் பிறந்திருந்தால் சந்தோசமாக வாழ்ந்திருக்கலாமே என்று ரகு ஏங்கிய நாட்களும்  உண்டு.!

தொடரும் வலி............/

21 comments :

Seeni said...

thodarungal sako....!

MANO நாஞ்சில் மனோ said...

விவசாயிகளின் வாழ்வைப் பற்றி இப்போ உள்ள பிள்ளைகளுக்கு அறவே தெரியாது என்றே நினைக்கிறேன்...!

நெற்கொழுதாசன் said...

ஆரம்பமே அசத்தல்.............வாழ்த்துக்கள் எங்கட தொழிலை வேறு தொட்டு கதையை கொண்டு போறிங்கள் இரண்டு தரம் வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

யுத்தம் இல்லாத பூமியில் பிறந்திருக்கலாமே என்ற ஏக்கம் ரகுவைப் போல எத்தனை எத்தனை மனங்களில் இருந்திருக்கும் தம்பி! நினைக்கையிலேயே மனம் கனக்கிறது. விவசாயத்தின் அருமை பெருமைகளை அறியாத தலைமுறைதான் இப்போது இருப்பது. உண்மையில் அதை பெருமையாக அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

திண்டுக்கல் தனபாலன் said...

/// சேவை என்ற போர்வையில் மருத்துவ டாக்டர்கள் பணம் செய்யும் தொழில் போல அல்ல விவசாயம்! ///

உண்மையான வரிகள்...

K.s.s.Rajh said...

அட எங்க ஊரில் கதைக்களமா ஆவலுடன் தொடர்கின்றேன் தொடருங்கள்

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!சமாதானத்தில் ஆரம்பித்திருக்கிறீர்கள்.தொடரட்டும்!

”தளிர் சுரேஷ்” said...

புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! ஆரம்பம் அருமை!

தனிமரம் said...

thodarungal sako....!//வாங்கோ சீனி அண்ணா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் முதல் கருத்துக்கும்.

தனிமரம் said...

விவசாயிகளின் வாழ்வைப் பற்றி இப்போ உள்ள பிள்ளைகளுக்கு அறவே தெரியாது என்றே நினைக்கிறேன்...!

29 January 2013 17:04 //ம்ம் உண்மைதான் மனோ அண்ணாச்சி ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆரம்பமே அசத்தல்.............வாழ்த்துக்கள் எங்கட தொழிலை வேறு தொட்டு கதையை கொண்டு போறிங்கள் இரண்டு தரம் வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நெற்கொழுதாசன்!

தனிமரம் said...

யுத்தம் இல்லாத பூமியில் பிறந்திருக்கலாமே என்ற ஏக்கம் ரகுவைப் போல எத்தனை எத்தனை மனங்களில் இருந்திருக்கும் தம்பி! நினைக்கையிலேயே மனம் கனக்கிறது./ம்ம் அவதிப்பட்ட வலி அதிகம் .ஈழத்தவன்

விவசாயத்தின் அருமை பெருமைகளை அறியாத தலைமுறைதான் இப்போது இருப்பது.// உண்மைதான் அண்ணாச்சி/

உண்மையில் அதை பெருமையாக அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!ம்ம் கதைக்களம் வேற என்பதால் இப்படி நன்றி வருகைக்கும் கருத்துக்கும் கணேஸ் அண்ணா!
29 January 2013 17:24

தனிமரம் said...

சேவை என்ற போர்வையில் மருத்துவ டாக்டர்கள் பணம் செய்யும் தொழில் போல அல்ல விவசாயம்! ///

உண்மையான வரிகள்...

29 January 2013 17:40 // நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

அட எங்க ஊரில் கதைக்களமா ஆவலுடன் தொடர்கின்றேன் தொடருங்கள்// நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!சமாதானத்தில் ஆரம்பித்திருக்கிறீர்கள்.தொடரட்டும்!

29 January 2013 22:51 // வணக்கம் யோகா ஐயா!ம்ம் சாமாதானம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்! ஆரம்பம் அருமை!//நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

செங்கோவி said...

ஆரம்பம் அருமை.

தனிமரம் said...

ஆரம்பம் அருமை.//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

K said...

அருமையான தொடக்கம் அண்ணா! ரகு அப்படியே மனதில் பதிந்துவிட்டான்! தன் தந்தை விவசாயி என்பதை தயங்காமல் கூறிய ரகுவுக்கு ஒரு சலுயூட்!

கதையில் நீங்கள் கையாண்டுள்ள உவமைகள் அசத்தல்! குறிப்பாக,

“ ஏதோ சொல்லக்கூடாத இராணுவ ரகசியத்தைவெளிநாட்டு ஊடகத்துக்கு  இவன் சொல்லியது போல ‘

என்ற உவமை ரசிக்கத்தக்கதும், நிகழ்காலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுமாகும்!

சரி, ரகுவுக்கு என்ன நடக்கப் போகிறது? அவனின் கனவுகள் நிறைவேறுமா?

இதோ அடுத்த பாகத்துக்கு ஓடிப் போகிறேன்!

தனிமரம் said...

அருமையான தொடக்கம் அண்ணா! ரகு அப்படியே மனதில் பதிந்துவிட்டான்! தன் தந்தை விவசாயி என்பதை தயங்காமல் கூறிய ரகுவுக்கு ஒரு சலுயூட்!

கதையில் நீங்கள் கையாண்டுள்ள உவமைகள் அசத்தல்! குறிப்பாக,

“ ஏதோ சொல்லக்கூடாத இராணுவ ரகசியத்தைவெளிநாட்டு ஊடகத்துக்கு இவன் சொல்லியது போல ‘

என்ற உவமை ரசிக்கத்தக்கதும், நிகழ்காலத்தைப் படம் பிடித்துக் காட்டுவதுமாகும்!

சரி, ரகுவுக்கு என்ன நடக்கப் போகிறது? அவனின் கனவுகள் நிறைவேறுமா?

இதோ அடுத்த பாகத்துக்கு ஓடிப் போகிறேன்!

24 February 2013 07:47 //ம்ம் நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_16.html