31 January 2014

கவிதை எழுத வாங்கோ!

வலையுலகில் எழுத்தார்வத்துக்கு களம் அமைத்துக்கொடுக்கும் பலர் .கவிதை ,கட்டுரை , கதை ,என பல போட்டிகளை நடத்திக்கொண்டு இருப்பது மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய செயல்.


 அந்த வகையில் சக மூத்த பதிவாளர்  வெங்கட் நாகாராஜா ஒரு படத்தினை  பகிர்ந்து கவிதை எழுத வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

 அழகிய காட்சிப்படத்தினைக்கண்டு கவி எழுத ஆசை! 


ஆனாலும் ஆன்மீக தேடலில் தனிமரம் வலைக்கு ஒய்வு .என் சொந்தப் பெயரிலேயே கவிதை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன் .
அந்திப்பொழுதில் அன்பை ஆழ்கடல் போல
அள்ளித்தரும் அருமை நாயகன் என் அருகில்.
அவர் கரம் கொண்டு அணிந்து அழகு
பார்க்கத்துடிக்கும் அல்லிப்பூக்கள் ஆயிரம்
அன்று மலர்ந்தவை போல அவரிடம்
சொல்ல ஆசைகள் கோடி அருவியின்
அலைபோல ஆனாலும் அந்தக்கனப்பொழுதிலும்
அன்புக்கூடல் அதைத்தடுக்கின்றதே.
ஓட்டுக்கேட்கும் அலைவரிசை ஒலிப்பதிவு
அரசு போல அருகில் வளரும் தனிமரம்
அதை வேட்டையாடுங்கள் முதலில்
ஆம் ஆத்மி கட்சிபோல
அரசியின் கட்டளை இது அரசே!
கவிதை பிரசுரம் ஆகுமா ?இல்லை பூக்கூடையில் போகுமா?, என்ற தயக்கம். இருந்தாலும், கவிஞர்களும் ,கவிதாயினிகளும் போட்டி போடும் இடத்தில் சிவநேசனும் போட்டி போடலாம்  என்ற ஆசையில் எழுதிய கவிதையை ,ரசித்து பாராட்டியவர்கள்  பலர்  .http://venkatnagaraj.blogspot.com/2014/01/18.html

அவர்கள் எல்லோருக்கும் என் நன்றிகள் .இந்த வாய்ப்பை தந்து கவிதையையும் வெளியீடு செய்த வெங்கட் அண்ணாவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்க்ளும் .




கவிதைக்கு கானம் சேர்த்து கல்லூரிக்காலத்தில் கல்லடியும் ,சொல்லடியும் வாங்கியதால் நீண்ட காலமா என் பெயரை நான் மறந்துவிட்டேன் :)) ! இப்போது தனிமரம் சுதந்திரப்பறவை என்றாலும் கானம் இல்லாத கவிதை வேட்டிக்கு இல்லாத சால்வை போல: எனக்கு :))

 ஒருவேளையில் கவிதையில் யாரைப்பார்தாவது உருக்கிப்போன உதவாக்கரையோ என்று யாரவது நினைத்தால் கம்பனி பொறுப்பு இல்லை:)))



17 comments :

Angel said...

Vaazhthukkal...kavitha nalla irulku

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

கவிதை மிகச் சிறப்பாக உள்ளது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

ஒரு கமெண்ட் போட
அது மூன்றாக பதிவாகிவிட்டது
அதுதான் இரண்டை நீக்கி இருக்கிறேன்
வாழ்த்துக்களுடன்....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதை அருமை. வரலாற்று படமா இருந்தாலும் இன்றைய நடைமுறையும் புத்திசாலித்தனமாக கவிதையில் சேர்த்தது சிறப்பு. வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் கவிதையின் அருமை எங்களுக்கு தானே தெரியும்...

வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” said...

அருமையான கவிதை! தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!

தனிமரம் said...

Vaazhthukkal...kavitha nalla irulku// வாங்க அஞ்சலின் முதல்ப்பால்க்கோப்பி உங்களுக்குத்தான் நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்
.

தனிமரம் said...

கவிதை மிகச் சிறப்பாக உள்ளது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

31 January 2014 15:33//நன்றி ரமனி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கவிதை அருமை. வரலாற்று படமா இருந்தாலும் இன்றைய நடைமுறையும் புத்திசாலித்தனமாக கவிதையில் சேர்த்தது சிறப்பு. வாழ்த்துக்கள்//நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும் முரளிதரன் அண்ணாச்சி.

தனிமரம் said...

உங்களின் கவிதையின் அருமை எங்களுக்கு தானே தெரியும்...

வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

அருமையான கவிதை! தொடர்ந்து எழுதுங்கள்! நன்றி!/வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஸ்.

Unknown said...

நல்ல கவிதை!வாழ்த்துக்கள்,நேசரே!

MANO நாஞ்சில் மனோ said...

நேசனுக்கு கவிதை சொல்லியா குடுக்கணும் ? அசத்தல்...!

தனிமரம் said...

நல்ல கவிதை!வாழ்த்துக்கள்,நேசரே!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

நேசனுக்கு கவிதை சொல்லியா குடுக்கணும் ? அசத்தல்...!

1 February 2014 16:22//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்க்கும் பாராட்டுக்கும்.