30 August 2015

நினைவாகத் தொடரும் நினைவுகள்.

சில பாடல்கள் என்னை இன்னும் சித்திரம் போல மனதை அசை போட வைக்கின்றது .அப்படியான பாடல் கேட்கும் போது அதை பல நட்புக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆசையிருக்கு !அதனால் முகநூல்/வலை என்று பட்ட அவமானம் இன்னும் நிழல் போல முகநூலில் இன்றும் கோபம் ஊட்டினாலும்!

 பொதுவெளியில் எழுத நினைக்கும் பாடல் பட்டியல் என்னிடம் ஆயிரம் தாண்டிய  பாடல்கள் பட்டியல் இருக்கு! மும்மொழியும் எனக்கு பிடிக்கும்! தமிழ், சிங்களம், ஆங்கிலம், என்று !  இலங்கையில்[[[


இப்போது பிரெஞ்சுப் பாடல்களும் பிடிக்கின்றது ! ஆனாலும் பிரெஞ்சை பலர் நேசிக்க மறப்பது தனிக்கதை.

 அதுக்கு ஆங்கிலம் தடையாக இருப்பதும் ஒரு காரணம் எனலாம்! விளங்கவில்லை/புரியவில்லை என்றால் முதலில் கேட்பது நீ ஆங்கிலம் கதைப்பாயா /பேசுவாயா என்றால் அவன் பதில் இல்லை என்றே வரும் .

இது அவன் மொழிப்பற்று அது பற்றி இன்னொரு பதிவில் பேசலாம்!


 ஆனால் கனவுகள் என்னை தாலாட்டுது. அது ஏன். ?,எதனால் ?,என்று அறியும் ஆவலில் இருக்கின்றேன் !சிலதை மறை முகமாகத்தான் காட்சிப்படுத்த முடியும் ஊடகத்தில்!

 அதுவும் கனவாக போனவை பல


மறைவேதம் சொல்லும் சேதி பல  விளங்கவில்லை உன் பகிர்வு புரியவில்லை என்றால் முதலில்  இருந்து என் பதிவுகளை படியுங்க!

 இல்லை என்னை பிளாக் பண்ணி விட்டு ஓடினால் நானும் இன்னும் முகநூலில்/ வலையில் கும்மி அடிக்காமல் பலரின் காத்திரமான பதிவுகளை  வாசிக்கலாம்!

பாடல் என் நாதம் யாரிடமும் எனக்கு கோபம் இல்லைஇந்த நிமிடம் வரை  சகோ!

இந்தப்படல் பற்றி நீங்கள் மூத்தவர் வழிகாட்டி  பகிரவில்லையே வலையில் என்ற ஆதங்கம் அன்றி வேறில்லை!

 தனிமரம் இன்று வலையில் வந்தவன் தான்! ஆனாலும் தோப்பு இப்பவும் எப்போதும் !தனிமரம் பாடல் பற்றி முடியும் போதெல்லாம் பகிர்வேன்  வெட்டியாக இருந்து!பம்ம மாட்டேன் சார்! நன்றி சகோ ஒரு பதிவை தேற்ற உதவியதுக்கு!


பாடலை ரசியுங்கோ வலை உறவுகளே இன்னும் பேசலாம் இந்த வலையில்!




எனக்கு வருவதைதான் என் பார்வையில் என் மொழியில் எழுதுகின்றேன் !  இதில் நொண்டிச்சாட்டு எதற்கு,,?, இல்லை சிங்களமொழியில் எழுதினால் புரியுமா சகோ ?,!அதுக்கும் தனிமரம் இன்றுமுதல் தயார்!  வலை அமைப்பை நீங்கள் உருவாக்கி தரமுடியும்?, என்றால் ! எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லை என்பதை பலதடவை என் வலையில் சொல்லியது விளங்கவில்லை/புரியவில்லை என்றால் என்னால் மீண்டும் பள்ளிக்கூடம் போக முடியாது!

சிங்களத்தில் வலையை ஆரம்பித்து தரமுடியும் என்றால் விரைவில் அங்கேயும் வர தனிமரம்  ரெடி !ஆனால்  தொழில்நுட்ப , எழுத்துப்பிழை என்றால் எந்த மொழியும் அறியாதவன் என்னை வலையில்  எங்கே அழைதாலும் ஏதிலி ஐயா சாமி
!



25 August 2015

தொக்கி நிக்கும் தொடர்பு!

தொலைந்து போனேன்  என்று
தொடர் எழுத ஆசை கொண்டேன்!
தொடர்கின்றார்கள் இன்னும்
தொலைதூரப் புலியோ ,,?,
தொடாதே! முக்கிய
தொலை தூர அழைப்புக்களை.
தொட்டுப்பார்க்கும் புலனாய்வு கூட்டம்.
தொலைபேசி அடித்து உதைத்து
தொங்குது அங்கே!!


தொடர்ந்தும் வரும் உள் அழைப்பு
தெமலத என்று எனக்கு புரியாத
தொல் மொழியாம் நீ அறிவியோ,,?,
தொடராதே என்னை!
தொடர் எழுதுகின்றேன்!


தொலைநகலில் தகவல் அனுப்பு
தொலைந்த காதலியை தேடும்
தொலைந்தவன் என்று !


தொட்டுச்செல்ல இது என்ன
தென்னிந்திய இந்து ராம் பேட்டியா??
தொலைக்காட்சியில் பார்க்க!
தொலைந்தவர்கள் விடயம் வராது!
தொலைந்து போ நீயும் உன் அழைப்பும்.
தொக்கி நிக்கும் !!அவலத்துடன்
தொலைதூர ஏதிலி!
தொடர்பு தொலைந்தாலும்
தொடரும் தேடல்.

....

யாவும் கற்பனை.

தெமல -தமிழா என்று சிங்களத்தில் கேட்பது விசாரணை போல!

21 August 2015

நினைத்தாலே இனிக்கும்.

பயணம் என்பது  ஒரு தேடல் போல அதை ரசித்து பயணித்தால் போகும் தூரம் அதிகமில்லை.பயணத்தில் அருமையான பாடலும் சேர்ந்து கொண்டாள் அந்தப்பயணம் இனிமை இதோ இதோ என்று துள்ளிக் குதிக்கும் இவை எல்லாம் எனக்கு துள்ளித்திரிந்த காலம் போல கடந்த காலம் என்றாலும் நினைவில் இன்னும் மனதை தாலாட்டும் ஆனந்தப்பூங்காற்று!

 இனவாத யுத்தம் பலரை இலங்கையின் இயற்கையை இரசிக்க முடியாது திரைபோல சிறைவரை கொண்டு சென்ற கதைகள் பல  இணையத்தில் ஏறவில்லை என்றாலும்!

 இன்றைய ஆட்சி மாற்றம் இனநல்லாட்சிக்கான பாதையில்  தொடர்ந்தும் பயணிக்கும் என்று இன்றைய இலங்கைப்பிரதமர்  பதவி ஏற்பு உரை வெறும் உதட்டோடு நின்றுவிடாமல். இதயத்தில் இருந்து வெளிப்பட்டால் இன்னும் பலர் மகிழ்ச்சியடைவார்கள்.

இப்போது  தொடர்ந்து அரசியல் தூய்மை பேண முயற்சிக்கும் இவர் ஆட்சியில் முன்னர்  இனவாத சிந்தனையில் இலங்கையில் சந்தேகம் என்ற போர்வையில் சிறைவைத்து இருக்கும் பலரையும். !!

இறுதிப்போரில் இலங்கை இராணுவத்திடம்  சரண் புகுந்தவர்களை இன்னும் வெளியுலகு காணாமல் வதை முகாமில் இருப்போரையும் வெளியில் சுதந்திரக்காற்றை சுவாசிக்கவிட்டால் இந்த அரசு இன ஜக்கியத்தை  பேணும் ஆட்சி என்று வரலாறு  பதிவு செய்யும் !!

அதை செய்வதுக்கு இலங்கை மக்களும் இனவாத சிந்தனை நீங்கி இங்கே பலரும் சுற்றுலா வரலாம் இயற்கை காட்சி இரசிக்க இன்னும் பல இலங்கையில்  இருக்கு என்று  இலங்கை  குடியரசு  மக்கள் எப்போது வெளியுலக மக்களிடம்  தம் நன்மதிப்பை உயர்தப்போரார்கள்.?,

 புதிய சுற்றுலா அமைச்சர் இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டுக்கு என்ன புதிய திட்டம் செயல்படுத்துவார் ?,.

 மலையக மக்களின் விடிவுக்கு விரைவில் யார் தீர்வு தருவார்கள் . ?,,மலையகத்தில் பல இயற்கை சுற்றுலா மையங்கள் இருப்பதையும் மறந்துவிடக்கூடாது!

வாருங்கள் ரசிக்க இப்படி நம்நாட்டிலும் இருக்கு என்று !!!




  எனக்கும் ஆசைதான்.!!

ஆனாலும் ஜென்சி போல ஒரு குரல் இன்னும் நவீன தமிழ் சினிமா தரவில்லை!!








16 August 2015

முகம் காண ஆசையுடன் --17.

முன்னால் வாங்க இங்கே[...http://www.thanimaram.org/2015/08/16.html

இனி......


மாற்றம்  வரும் என்றே மாந்தைகள் போல மக்களும் தேர்தல் என்ற கதிரைப்போட்டிக்கு வாக்கு என்ற மானத்தை அடைவு வைக்கும் தேர்தல் என்ற சித்து விளையாட்டு கிரிக்கட் போல சூதாட்டம்  என்றாலும் !!


  ஐந்து வருட வாழ்வாதார இழுபறி உணர்ச்சிப் பிரச்சாரம் குளிர்சாத அறையில் இருந்து ,பொது வெளிக்கு வெளிச்சம் போல  மின்னல் செய்வோர் முதல் குடிப்போர் வாழும் கள்ளுக்கடை தவறனை மன்றம் வரை வேட்டி கட்டி  பலரை  வாக்குப்பிச்சை தேடி வணங்கி  அப்பா நலமா ?,அண்ணா இல்லை, தங்கச்சி நலமா,,?, வியாபாரம் எப்படி கடலையில் கல்லா,,

 என்று  தேரடி வீதி முதல் தேவடியாள் என்று அவமான சின்னம் குத்தும் தேர்தல் பரப்புரைக்கு ஓடோடி உழைக்கும் கூட்டம் எல்லாம் ஏன் இன்னும் கருணை  விடுதலை என்றோ?, பொது மன்னிப்பு என்றோ?,

 சிறையில் சந்தேகத்தின் பேரில் இன்னும் இலங்கையில் வதை முகாமில் இருப்போர் பற்றி  மக்கள் நாடாளுமன்ற கதிரைக்கு பாகிஸ்தான்  பஞ்சாப் உள்துறை அமைச்சர் மீதான வெடிகுண்டு போல  இன்னும் ஏன் வெட்டிக்க வில்லை ?,



எல்லாம் தேர்தல் முடிந்தபின் மறந்து விடுவார்கள் என்ற ஞாபக மறதியா ?,,

இத்தனை வருடம் விடியும் விடியும் என்று சுதந்திர போராளிகள்/ வேங்கைக்கள் சிறையில் விடியும்!!

  சூரியன் உதிர்க்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த காலம் முதல் எல்லாம் முடிந்துவிட்டது சூரிய தேவன் மறைந்து விட்டான் !!

 என்று மகிந்த மாமா மார்பில் குத்திய ஓசையை விட!!

 அவன் மைந்தன் இன்னொருத்தி காதல் அந்தரங்க  உறுப்பை வெட்டி எரிந்தான் காமக்கொடுரன் போல என்பதை எல்லாம் இன்று ஊடகம் சுதந்திரமாக வியாபாரத்துக்கு காமக்கம்பளம் விரிக்கும் நிலையில் !!


எவன் சிறையில் இருப்போர் வெளியில் வர வேண்டும்  என்று முகநூலிலும். செய்தியிலும் நிஜ இன உணர்வுடன் எழுதுகின்றான்?,

 எல்லாம் வாலுதான் போல சுமா!

 இதை எல்லாம் என் தளத்தில் உறுதிமொழி போல வீர ஆவேசம் கொண்டு பொங்கி எழு என்று எழுத்தில் பொங்கினால்!

 எனக்கும் உள்குத்து எப்படி இருக்கும் என்று நான் நன்கு அறிவேன் வெள்ளை வான் போல


ஆனாலும் நானும் விரைவில் பொது மேடையில் ஆசிரியர் பதவி ஏற்காப்போறன் ஊடகப்பேச்சாளர் போல அங்கே என் நிலையை எல்லாம் நான் விரும்பியது போல சொல்ல நினைத்தாலும்.!!


 ஊடகம் என்னையும் திசை திருப்பும் உனக்கு இது எப்படித்தெரியும் என்று ?,

என்றாலும் தொடர்  தொடர்ந்து எழுதுவியா பொதுவெளியில் தில் இருந்தால்  என்றால்!! ஐயா சாமி எனக்கு உயிர் மீது ஆசை அதிகம் உனக்கோ என் பணம் மீது பாசம் அதிகம் [[[

இதைப்பிடி என்னைவிடு  என்று
நாடு விட்டு ஓடும் கூட்டம் என்னைப்போல இன்றும் அதிகம் தான் சுமா!

.

இன்னும் பேசலாம் .

முதலில் உன் சேமிப்பை எல்லாம் செய்தியாக என் மின் அஞ்சலுக்கு அனுப்பிவை .வாசித்த பின் உன் பகிர்வை பார்த்து வாழ்த்துக்கள் ,பணி தொடரட்டும் என்று மொக்கையாக எழுதலாமா ?,என்பதை தீர்மானிக்கின்றேன் !!

இது தானே இப்போது புதிய டிசைன்[[[ எதையும் மேலோட்டமாகத்தானே மேய்கின்றோம் அவசர உலகில்.

 அதன் பின் இருக்கும் உழைப்பை யார் சிந்திக்கின்றோம்?, வாக்கு போட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது போல[[[



தொடரும்....

11 August 2015

முகம் காண ஆசையுடன் -16


முன்கதை இங்கே---http://www.thanimaram.org/2015/07/15.html


இனி.....


தேர்தல் பிரச்சாரத்துக்காகவும் ,வாக்கினை வாங்கவும் வசதி படைத்தவர் ரகர் விளையாட்டு வீரர்  வஸீம் தாஜுதீன்  மரணத்தையும் விளம்பரம் செய்யும் ஊடகங்களும் ,ஆட்சிமாற்றத்தின் அருவருடிகள் அனைவருக்கும், ஏன் ?,ஏன்?, ஏன் ?,,


இன்னும் அடக்கமானவர் போல வாழும் சிறைக்கைதிகள் , சீர்திருத்த வாழ்வு முகாமில் வாடும் உறவுகள், காணமல் போனோர் பட்டியலில் வாழ்வோர் பற்றி சில வதைமுகாம்களில் இன்னும் இருக்கலாம் உயிரோடு உயிராகப்போல  தேசத்தின் முத்துக்கள்.

 அவர்கள்  படும் துயர் நிலையை  எல்லாம் ஏன் இன்னும் புறந்தள்ளுவது ?,



அதுக்கு துணைபோகும் தாத்தாக்கள் எல்லாம் எப்போது வீடு துறந்து வீதிக்கு வருவார்கள்?, என்று வீதியில் நிற்கும் உறவுகள் பற்றி  எப்போது பொதுவெளியில் பேசப்போறம்?,,!

 காலம் கருணை காட்டும் என்று கண்ணீர் விடுவதுதான நமக்கான தீர்வு,,?,

 சட்ட ஆலோசனை வழங்க, ஏன் படித்த மேதைகள் இல்லையா?,; சட்டமா அதிபர், முதன்மை நீதிபதி எல்லாம் பெயரளவில்தான தமிழர்கள்!!!

.இன்னும் எத்தனை வருடம் இந்த நாட்டை சீர்கெடுக்கப் போறம் என்ற உணர்வு ஏன் பலருக்கு வருவதில்லை?,,

.இதை எல்லாம் முகநூலில் பேச யார் வருவார் ?,


முகநூலில் தேர்தல் விளம்பரத்துக்கு கட்சி ஆதரவாளர் என்று கோஷம் போடும் கூட்டம் ஒரு புறம் என்றால்!

 இந்த தேர்தல் திருவிழாவுக்கு எந்த சின்ன மேளம் வரும் என்று ஜொல்லு விடும் கூட்டம் எல்லாம் !!

ஏன் சிறைக்கைதிகள் விடுதலை விரைவு ஆலோசனை, விரைந்து சட்டச்செலவுக்கு போதிய நிதி திரட்டல் என்றுமுகநூல் மூலம் நல்லவிடயத்துக்கு   கும்மியடிக்கலாமே ?,

 உண்மைதான் சுமா!

 ஆனால் முகநூலும் ஒரு பொழுது போக்கு கள்ளுக்கடை போலத்தான் !அப்படிச்சொல்லாத அசுரன் .

 இல்லை சுமா எங்க தாத்தா கள்ளுக்கடை போதையில் உள்நாட்டு அரசியலே பேசுவார்!

 ஹீ உனக்கும் அந்த போதை தேவையோ,,?,

 சீச்சீ கள்ளுக்கடைபக்கம் போகாதே  பாட்டே இன்னும் வானொலியில் நேயர் தேர்வாக வந்தால் போதை தான் !நம்மவர் பாடல் ஞாபகம் இருக்கா ?


அடப்போடா நான் முக்கிய விடயம் பேசணும் என்றால்!

 நீ இன்னும் குசும்பிள் இருக்கின்றாய்!.

 ஆமா என்ன விஷேசம் பாரிசில் ,?

இங்கே ஒரு விஷேசமும் இல்லை!

 சினேஹாவுக்கு ஆண் வாரிசு பிறந்திருக்காம் .உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு அல்ல[[[[[[[[[[[[[[[[[[[[[

இருடா நாயே வாரன் என்று ஆத்திரத்துடன் தொடர்பை துண்டித்தாள் சுமா.

ஏன் பெண்கள் இன்னொரு பெண்பற்றி பேசும் போது அதிகம் கோபம் கொள்வது இதுக்கு பகவான்ஜீ தான்  வலையில்  பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அசுரன்!

தொடரும்.....


08 August 2015

மூழ்காத ப்ரென்சிப்!!!!!

நட்புக்கள் கிடைப்பது ஒரு தவம் போல பலருக்கு!  நல்ல நட்பை தருவது பள்ளி வாழ்வு .ஆனாலும் அந்த நட்பை எத்தனை பேர் தக்க வைத்து இருப்போம் ??பொருளாதாரம்,  இல்லறம் என்ற அடுத்த வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் பலர் திரும்பிப் பார்க்கும் போதில் பலரும் புலம்புவது. எனக்கு ஒரு நல்ல நண்பன் அமையவில்லை! என் சுகதுக்கத்தில் என் தோளினினை தட்டிக்கொடுக்க என்று!


காதல் தேசம் அப்பாஸ் வினித். நட்புக்காக சரத், விஜயகுமார் போல எண்ணி மனம் வேதனைப்படும் .


ஆனால் என்றும் தனிமரம் எனக்கு அந்தக்கவலை இன்று வரை இல்லை! ஆம் என்னையும் என் ஆர்வத்தையும் மட்டும்மல்ல என் பிடிவாத  போக்குவரை . பள்ளியிள்   பிடித்த பாடம் முதல் பிடித்த சினிமா தமிழ். ஹிந்தி. சிங்களம், ஆங்கிலம் வரை  பார்த்து ஒன்றாக ரசிக்க ஓத்த சிந்தனையில் ஒருவன் அமைய முடியுமா?,,


 அதுவும்  இலங்கை அரசியல் பிரிக்கும் ஆயிரம் காரணம் சொல்லி! குடும்ப அரசியல் வரை தேசிய அரசியல் வரை எதையும் தெளிவுடன் பேசும் நட்பு கிடைப்பது என்பது எத்தனை சுகம்!

அதில் முரண்பட்டாள் நட்பையும் பிளாக் பண்ணிப்போகும் முகநூல் காலம் என்றாலும்; முகத்துடன் மச்சான் நீ இதில் சமரசம் செய்யலாமே?, ஏன் நல்ல வேலைஅரசில்  .எதிர்காலத்தில் நல்லாக இருக்கலாமே?,

 நான் சொல்வதை கேள் !என்று அதிகாரம் போடாத நட்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்!!


ஆனாலும் பரதேசி  எனக்கு நட்பு என்றால் இன்று வரை இணைந்த கைகள்  படம் போல நட்பு  நிஜத்தில் குறைவு. அல்லது அரிது எனலாம்!

எப்போதும் என் போக்கு சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது என் இயல்பு ! இன்று வரை என் இயல்பை நிஜத்தில் புரிந்த இந்த நட்பு என் முகநூல் முதல் வலை வரை தனிமரம் எதை எழுத வேண்டும் என்பதை அதிகம் சிரத்தை கொள்ளும் இவனைப்போல இன்று பாரிசில் வெட்டியாக இருக்கின்றேன் என்று உண்மை சொன்னாலும் எந்த புதிய நட்பும் புரிவதில்லை§


 தனிமரம் நேசன்  ஒரு டுப்பாகூர் என்று நினைப்பது அவர்களின் புரிதல் என்றாலும் இன்றும் என் யாதர்த்த நிலையை புரிந்த ஒருவன் என் நண்பன் டெனில் !

இவன் போட்ட விதையில் வலை தனிமரம் வலையில் எழுதிய தொடர்கள் பல என்றாலும் இவன் என் எழுதுப்பிழை திருத்திய தொடரில் என்றும் பலரை ஈர்த்த மின்நூல் இது!



 பொருளாதார தேடல், புதிய தொழில் இடமாற்றம், எப்போதும் இருந்த ஐபோன் தொலைத்து உருகிய நிலை ,ஒருப்பக்கம் என்றால்!


 குறுகிய கால அரபுல வேலைவாய்ப்பு  விட்டு தாயகம் போனபின் நம் நட்பிள் அதிகம் ஸ்கைப், முகநூல் என்று கைபேசி என்று கும்மியடிக்காவிட்டாளும்!

 இன்றும் டெனில் என்னோடு பல பாடல்களில் ரயில்பயணத்தில்  பயணிக்கின்றான்  தொடர்ந்து !


காரணம் மச்சான் இந்தப்பாட்டு கேட்டாயா?,,

 என்று முதலில் தாய்நாட்டில் இருந்து அழைப்பிள் வரும் போது பாடல் பற்றி பேசுவான்.

.இப்போது அதிக சுமை ஆம் நாம் இருவரும் தந்தை என்ற பதவியில் அதிகம் தொலைவில் என்றாலும் நட்பு எப்போதும் தொடரும் ...




!பள்ளி வாழ்வில் நண்பன் வீட்டில் ஒரு மதிய உணவில் இது பற்றி இன்னொரு தொடர் எழதலாம் இனி[[[[ முதலில் தனிமரம் அப்ப முடியுடன்இடம் இருந்து வலமாக  6 வதாக நண்பன் டெனில் [[[[ஒரு காலத்தில் சிகரேட் எப்படி களவாக புகைத்து ஊதுவேன் என்பதை என் பள்ளியில்  நான் மதிக்கும் சங்கீத ஆசிரியையிடம்போட்டுக்கொடுத்தவன்! இந்த காட்சியில் இருக்கும் இன்னொரு நிலையில்[[[[  ஆனால் இன்று புகைப்பது இல்லை 18 வருடம் அதை எப்படி விட்டேன் எனபதே இன்றும் புரியாத புதிர்[[[[[[[[[[[[[[[[[நம் கல்லூரியில் உயர்தரம் கற்கும் போது  நாம்தான் உயர்தரத்தின் இரண்டாவது ஆண்டில் ஓவ்வொரு ஞாயிறும் மதியப்பொழுதில் ஒரு நட்புக்கள்/நண்பிகள் வீட்டில் ஒரு நாள்  விருந்தோம்பல் உண்ணும் வழக்கத்தை 1998 இல் உறுவாக்கினோம்  நட்புடன் கூடிக்குதுகலிக்க !!அது இப்போதும் தொடர்வதாக  முகநூலில் அறியும் சந்தோஸம் இன்னும் நெஞ்சில் நாவில்!



))))

முகநூலில் ஒரு தோழி  என்னோடு கவிதை எழுதுவதில் எப்போதும் அவள் போல என்னால் இன்றும் முடியாது[[[[

 என் தோழியும் என்னை பதிவுலகில் அடி எடுக்க வழிகாட்டிய காறில் என் கீதம் பதிவாளினி நேற்று பகிர்ந்தது சற்று  பொறாமையுடன் [[[ தனிமரம் பாரு என்று[[[[கவலை இல்லாத உலகு பள்ளியில் மட்டுமா இப்போதும் நட்புக்கள் சந்திக்கும் குடும்பம் என்றான போதும்  முடியும்!!!.



 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!9/8/.1980


என்னுக்கு எப்படியான பாட்டு பிடிக்கும் என்றாலும் உனக்கும் இருக்கு தெரிவு[[[[

03 August 2015

வசந்தகால வைன்!!!!!

வசந்தகாலம் என்றாலே
வசதியில்லாத
வதிவிட வாழ்வுறுமையில்லாத
வாலிபம் தொலைத்த
வலிப்போக்கன் இவன் வாசலில்
வசந்த முல்லை போல
வந்து நிக்கும்!

 வதிவிட நாட்டில்
வாழ்வுறுமை கொண்ட
வண்ண நிலவே  !!வா!! நலமா?,,,?, என்று
வாசலில் வரவேற்க ஆசைதான்!


வாழ்வில் ஒரு முறை
வரும் வசந்த காலம் போலத்தான்
வாழ்வில் காதலும் என்று
வாசித்த அனுபவம்!


விழியில்/ விசா  என்ற குடியுறுமை
வழியில்லாதவன்!
வந்த நாட்டில் வக்கில்லாதவன்
வாடிப்போவேன் என்றுதானா ?,
வாழ்த்தாமல் போனாய் என் காதலை?,,


வருவேன் சிரிப்புடன் என்று
வாதாடிய போதும் வராமல் போனாய்!
வாழ்வில் உயிர் கல்வி என்று. அன்று !!

வடக்கு நோக்கிப்போனாய்! இன்று

வந்து ஏண்டி கொல்கின்றாய்
வசந்தகாலம் என்று !

வடிவான பிரெஞ்சு வைனே!

வா  வசந்த வாசலில் ஒரு
வாசனைக்கோப்பி குடித்து மகிழ .
வாக்கு போல இல்லை அழைப்பு இது காசுக்கு
வாழ்க்கையை விக்கும் வசதி!
வாழ்க்கையை வெளிநாடு எனக்கு
வாழ்த்துப்பா எழுதவில்லை !!உன்னைப்போல ஒரு
வாசனமுல்லையை!


வாடிப்போகமாட்டேன்!
 வா ஒரு வைன்  சேர்ந்தே குடிப்போம்!!
வாழ்வில் வந்து போகும் போத்தல்கள் எல்லாம்
வடிவாகத்தான் இருக்கும் !உன்
வடிவான கழுத்துக்கு
வசதியான சங்கிலி் போல
வாட்டமில்லாத தாலியும்!





யாவும் கற்பனை.