21 October 2016

காற்றில் வந்த கவிதைகள்-4

குந்தவை போல பாசம் காட்டியே
குழிபறிக்கும் கூட்டத்தில்!
குயில் போல நீயும்
குணத்தில் ஒரு குரு!
குழைந்து பணிகின்றேன்!
குடியிருப்போம் கூடி!



------/---/
அடிக்கடி ஒலிக்கும்
அழகான பாடலில் எல்லாம்!
அன்பே உன் நினைவுகள்
அசைபோடுகின்றது.
அடுத்து வரும் ரயில் போல
ஆனாலும் பாடல் கேட்க
அலைவரிசை தடைபோடுகின்றது
அறிவில்லாதவனுக்கு!




//////////
அகத்தியரின் சினம் போல
அடிக்கடி   ஆத்திரம்  எட்டிப்பார்த்தாலும்!
அன்பே உன்னிடம்
அடைக்கலம் நாடும் என்
அன்புக்காதல்
அரவணைக்கும் ஐரோப்பிய தேசம் போல
அகன்றது நேசத்தில்
அதையும் மறந்துவிடாதே
அன்பான காதலியே!




/:/::
நீ என்மீது கொண்ட காதல்
நிலையான சொத்துப்போல
நிலைக்கும் என்று நினைத்தேன்!
நிலையில்லாகடன் என்று
நிஜத்தில் இன்று
நினைக்கவைத்துச் சென்றாயே
நீராவி விமானத்தில்!
நிலம்பார்த்து தவிர்க்கின்றேன்.



///////////////////////////////////////////////////////////////////////////////
அகதியின் ஆசைகள் பல
அன்பே !
ஆனாலும் அசைபோடும்
ஆனந்த நினைவுகள் 
அகல்விளக்கு போல சில
அதில் நீ ஒரு
ஆனந்தப்பூங்காற்று!
ஆனந்தம் படம் சினேஹா போல  சிரிபில்
ஆயிரம் நீ தான்
அழியாத கோலம்  என் நெஞ்சில்!
  (யாவும் கற்பனையே)////


///////////////////////////////////////////////////////////////////////////////////////////////

தினம் தினம் வரும்
தினகரன் போல 
திடீர் திடீர்  என்று பரவும்
திருப்பங்கள் போல செய்திகள்
தீயாக விழுந்தாலும்!
திடங்கொண்டு நம்புவோம்
திரும்பி வருவாள் 
திருமகள் என்று!


8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

திருமகள் திரும்பி வருவாள்
தம +1

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே
த.ம.+

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

"அகத்தியரின் சினம் போல" உவமை சூப்பர்

Yarlpavanan said...

எண்ணங்களின் வெளிப்பாடு - தங்கள்
பாவண்ணங்களில் காண்கிறேன்...
தொடருங்கள்

Unknown said...

வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம் :)

putthan said...

தந்திடுங்கள் கவிதைகள் பல
படித்திடுவோம் நாம்.....கவிதைக்கு நன்றிகள்

Yarlpavanan said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்

வலிப்போக்கன் said...

முன்னெ பின்னே செத்தாதானே சுடுகாடு தெரியும் என்பது மாதிரி முன்னே பின்னே காதலித்து இருந்திருந்தால..நானும் தங்களைப்போல் காதல் கவிதை எழுதியிருப்பேன்... என்ன செய்வது..