07 November 2016

காற்றில் வந்த கவிதைகள்-6

முன்னர் காற்றில் வீசியவை இங்கே-http://www.thanimaram.org/2016/10/5.html


----------------------------------------------------
துயரங்களைச் சொல்லி
தூண்போல தாங்கும்
துணைவர்களைவிடவும் !
துன்பம் பெருக்கி
தூற்றாமல் !தோள் சாயந்து
துறவறம் போல ஒரு மரத்தடி நிழல் போதும்!
துவண்டமனதுக்கு
தூவானம் வீச!



----------------------------------------------------------------------------------------------------------

அடர்ந்தவனத்தில்
 ஆயிரம் கனவுகளுடன்!
அடுக்கு மரப்பாதையில்
அழுதுவடிக்கும்
ஆசைரோஜாவுக்கும் தெரியும்!
அகதியின் அன்புக்காதல்
அளவிடமுடியாத 
ஆயிரம் பலம் கொண்டது!
ஆசையுடன் வருவேன்
அணைத்து மகிழ 
அசந்து தூங்காதே ஆருயிரே!





----------------------------------------------------------------------------------------------------
பிரியமானவர்களிடம் வரும் 
பிரிவினை என்பது !
பிரிவினைவாதம் போல!-
பிடரியில் தொடங்கி
பிண்டம் வைக்கும் 
பிதிர்க்கடன் போல 
பிறப்பில் அன்புப்
பிச்சையும் ஒரு சாபமே!
பிறவிக் கடன் போல
பிதற்றியே கொல்லும்!

//////////////////////////////////////////////////////////////////////////////////////////////
துணிவே துணையென்று
துணிந்துவிட்டால் ! வரும்
துயரங்கள் மறந்து 
தூய்மையாக 
துடுப்பு வீசலாம்!
தூய்மையான பூமியில்
துவண்டு போகாதே 
துழைத்த காதலில் நண்பனே!///



/////////////////////////////////////////////////////////////////////
விந்தையான பூமியில்
விரும்பி யாரையும்
வில்லங்கம் செய்வதில்லை!
விட்டுச்செல்ல இது 
விதர்ப்ப நாட்டு வேந்தன்
விசிரியும் அல்ல,
விரலுக்கும் வீக்கம் வேண்டும்!
விறலுக்கு இறைப்பதா ?
விலையில்லா அன்புக்கு
வீசுவதா என்ற 
விளிப்பு வரும் போது!
விடைபெற்றுச்செல்கின்றனர்
விடுதலை விரும்பிகள்!


7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

துணிவையே துணையாக்கிக் கொள்வோம் நண்பரே
அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழர்...

Yarlpavanan said...

தோல் சாயந்து
என்பது
தோள் சாய்ந்து
என வரும் - சற்று
திருத்தம் வேண்டுகிறேன்.

அருமையான பாவரிகள்
தொடருங்கள்

putthan said...

[quote]விடைபெற்றுச்செல்கின்றனர்
விடுதலை விரும்பிகள்![quote]

அழகிய வரிகள் நண்பரே

வலிப்போக்கன் said...

அருமை.....!!!!

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவி வரிகள்! பாராட்டுக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அனைத்தும் அருமை. குறிப்பாக முதல் கவிதை சொல்லிப் போன விதம்