06 February 2017

காற்றில் வந்த கவிதைகள்...7

முன்னர் இங்கே-https://nesan-kalaisiva.blogspot.fr/2016/11/6.html.

இன்புற்று இருக்கலாம் இணைந்தே என்றே
இருவரும் நேசித்தோம் !
இடையில் இதுவரை புரியாத
இலங்கையின் புதிய தீர்வுத்திட்டம் போல
இன்னொரு தேசம் போனாள்!
இனி என்னை மறந்திடுங்கள் என்பதை
இந்தியச்சினிமா போல
இறக்கிவைத்துவிட்டு!
இந்தாண்டிலும் தீர்வு வரலாம் என்ற
இன்னொரு நம்பிக்கையில்
இன்னும் தனிமரமாக  இவனும்!

////-----



///
////////////////////////////

பொருளாதாரத்தையும்,
பொன்னான பூமியையும்,
பொருளீட்ட நினைக்கும்
பொதுநலவாதிகளிடம் இருந்து
பொறுப்பற்ற தனிமரமாக
 பொதுவெளியில் வாழ்வது
போதுமான தனிமை!

/////
/////////////////////////////////////////////////////////////

///வாகை சூடி வந்துவிட்டான்
வறிய குடும்பத்தில்
வளர்ந்தவன் என்று ! இன்று
வாழ்த்தும் இந்த உறவுகள் !!
வாழ்வியலில் வஞ்சித்த கதைகள் 
வரலாற்றில் அறியாத மாந்தர்களே.
வடுக்கள் தந்த நீமட்டும்
வாஞ்சையுடன் நோக்குகின்றாய்!


/////:

1 comment :

Thulasidharan V Thillaiakathu said...

தனிமரம் வரிகள் அருமை! ஏனிந்த சோகம்??!!!!

உங்கள் பதிவுகள் எங்கள் பாக்சிற்கு வந்துவிடும் முன்பு ஆனால் இப்போது வருவதில்லை.

நேசன் நீங்கள் டிடி அவர்களைத் தொடர்பு கொண்டு நம் தமிழ்வலைப்பதிவகம் வாட்சப் குழுவில் இணையுங்கள். உடனுக்குடன் பதிவுகள் பார்க்கலாமே...