03 August 2017

விழிகளில் வந்திடு கண்ணே விம்மலுடன்--11

முன்னர் இங்கே விழிகளில். ---http://www.thanimaram.com/2017/07/10.html-

காதல் என்ற ஒரு பரவச உணர்வு தோன்றக் காரணம் என்ன ?ஈர்ப்பா?அழகா?வாலிபமா? கவர்ச்சியா?,பொருளாதாரமா? பண்பாடா?ஓய்வு நிலையா

ஏன் காதலுக்கு மட்டும் பல்லாயிரம் பாடல்களும் ,கவிதைகளும் ,நூல்களும் ,கதைகளும் கருவாகின்றது .?

காதல் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்வா என்று மடலேறும் காளையை சங்க இலக்கியம் போற்றியது !

காதலுக்காக தேசிய போராட்டத்துக்கு போனவர்களின் சிலரின் கதையை ஈழத்து இலக்கியம் தன்னுள்ளுள் கொண்டாடியதாக ஆதாரம் அச்சில் இல்லாமல் போய் இருக்கலாம் !

ஆனாலும் அடுத்த கட்ட வளர்ச்சி என்ற இணையத்தில் வரலாற்றுகள் எல்லாம் கட்டுடைத்தல் கொண்டதாக அமையும் எனலாம் !



அது போலத்தான் சாருமதியின் இலங்கைவருகை கமலேசின் வாழ்வில் வசந்தகாலப்பறவை பாடல் செம்பரத்தி சென்பரத்தி  போலவோ ,தாளம் படப்பாடல் எங்கே என் புன்னகை போலவே காலம் எல்லாம் காதல் வாழ்க என்று காதல்க்கோட்டை போலவோ ,Humko Humise Chura Lo Hindi Song from Mohabbatein ஹிந்திப் படப்பாடல் போலவோ இல்லை.  Pata Pata Mal - Siri Parakum Movie Song - www.Music.lk
போலவோ  என்று சிந்தித்தால் எப்படி  இந்த காதல் நோய் வருகின்றது? யாழவன் சார்?








 எங்கள் கனவுக் குறும்படத்துக்குள்  ஒரு நாயகியை கொண்டுவருவது எப்படி ?அதுவும் புலம்பெயர் நங்கையின் காதல் என்றால் உன்னைத்தேடி படமாகவோ ?இல்லை Dilwale Dulhania Le Jayenge Shahrukh Khan | Kajol  படம் என்பது போலவா ?இல்லை நம்ம பசுநேசன் நடித்த புதுப்பாட்டு படப்பாடல் போலவா  ?நேத்து ஒருத்தரை ஒருதைப்பார்த்தோம்  போலவா ?இல்லை தாலாட்டுப் படத்தில் சுகன்யா போல நாயகிகள் கிராமத்துக்கு வந்து ஏன் சினிமாவில் மட்டும் வெற்றிக்கொடி கட்டிக்கொள்கின்றார்கள்?

 ஆனால் நிஜத்தில் எத்தனைபேர் இப்படி காதலில் மருகுதே. உருகுதே என்று உருகிப்போகின்றார்கள் என்று ஒரு கதையை மையமாக கொண்டு  நீங்களும் இசையும், கதையும் போல ஏன் ஒரு தொடர்கதையை எழுதக்கூடாது ? யாழவன் சார் ?

ஊவா சமூக வானொலியில் உங்க பல நட்புக்கள் அங்கு அறிவிப்பாளராக கடமையில் இருப்பது எனக்கும் தெரியும்  யாழவன் சார் !  

தம்பி கமலேஸ் இப்பதான் பல ஊர்சுற்றி  திரும்பவும் அப்புத்தளைக்கு போ என்று எங்க கம்பனியில் பதவி உயர்வுடன் வட்டார அதிகாரியாக(Area manger) இங்கே வந்து இருக்கின்றேன் .

இப்போது எங்க கம்பனியின் வியாபாரத்தை மேம்படுத்த இன்னும் ஒரு சில பதவி வெற்றிடம் காத்து இருக்கு !

அதில் உன்னைச் சேர்த்துவிடும் ஆசை இருக்கு ,பூவோடு சேர்ந்த நாரும் மணப்பது போல  அதைவிடுத்து.கதை எழுது காதலில் லாலிபாடு என்று எல்லாம் எனக்கு குடுமி கட்டாதா? உன்னைவிட வயதில் மூத்தவன்!


 விடுமுறையில் ஊர் சுற்றிப்பார்க்க வந்திருக்கும் சாருமதியை சைட் அடிக்கலாம் ,குறும்படம் இயக்குகின்றேன், அவளோடு  சேர்ந்து பிரெஞ்சு தேசம் போகலாம் என்று எல்லாம் உயறப் பறக்கும் கருடன்  போல எண்ணாதே

 !

அதுக்காக உனக்காகப் பிறந்தேன் பிரசாந் போல  நீ அழகானவன் என்றோ நினைக்காதே .

வாழ்வில் யாதார்த்தம் எது என்பதை முதலில் தெரிந்துகொள்.

 உங்க அப்பாவின் சில்லறைக்கடை வியாபாரத்தை மேன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கொள், இலங்கை அரசின் தென்னாப்பிரிக்கா ஆட்சிமுறை ஆராட்சி பற்றிய  வெள்ளை அறிக்கை போல வெளிவராத அரசியல் தீர்வுத்திட்ட கதை போல அல்ல நிஜமான முற்போக்குப்பார்வை வேண்டும்.

 நம் தேசம் செழிப்புடன் வாழ இதை எல்லாம் ஊடகத்தில் பகிரும் திறமை நிச்சயம் ஒருநாள் எதிர்கால வளர்ச்சி உன்னிடம் இருக்கும் , ஆங்கிலம், தமிழ், சிங்களம் என மும்மொழியையும் என் போலவே நீயும் கற்றவன் .

மலையகத்தின் அடிப்படை வாழ்வாதர சூழல் தெரிந்தவன் .!

எவனோ ஒருவன் வாசிக்கின்றான் என்று பாட நினைக்காதே !வாழ்வில் நாம் சாதிக்க வேண்டும் ,சாதனைபடம் போல எங்கேயோ காண்பேன் அணார்க்கலி  என்று நீ மலையகத்தில் இருந்து பாடடுவதை எந்தளவுக்கு சாருமதி புரிந்துகொள்வாள் என என்னால் கற்பனை செய்யமுடியாது .


அவளைப்பார்தேன் இருதயம் இடமாறித் துடிக்கும் பாடல் எல்லாம் நான் கேட்டுச்சலித்தவை  இலங்கைப் பண்பலைகளில்  !

புதிதாக வியாபாரம் பற்றி சிந்தி மச்சான் !இந்தா கித்துக்கள் போதை ஏறாது போனால் இன்னும் குடி  ஆனால் காதல் என்று என்னிடம் உதவி கேட்காத !இந்த மின்னல் பட பாடல் எல்லாம் பாடவைக்காத வென்மதி வென்மதியே நில் என்று!

ஆமா உங்கமாமி இவ்வாரம் பிரெஞ்சு போறாதானேஅடுத்தவாரம் என்னோடு கொழும்பு வாரியா ?எங்க கம்பனியில் உன்னைச்சேர்த்துவிடுகின்றேன்! சாருமதி  நீ என்  சொந்தமடி  என்ற பாடலை நேயர்விருப்பம் என்ற இலங்கை  வானொலி நிகழ்ச்சிக்கு  தபால் அட்டை அனுப்பாத))) 

இந்தா உனக்கு ஒரு ஐடியா சொல்லுகின்றேன் கேள்?உன் அப்பாவிடம் போட்டுக்கொடுக்காத சாருமதியை சொந்தம் கொண்டாட ஒரு வழி இருக்கு)))

தொடரும்!



கித்துள்கள் என்பது -மலையகத்தில் இருக்கும்  ஒருவகை கள்ளு.


5 comments :

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் நண்பா....

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள்
தொடர்கிறேன் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை படங்கள் மனதில் வந்து போகிறது...! யப்பா...!

K. ASOKAN said...

பாடல் மிக நன்றாக உள்ளது

putthan said...

தொடருங்கள் நேசன்