-முன்னர் இங்கே-----http://www.thanimaram.com/2017/07/18.html
-----------------
வார்த்தை கொண்டு உன்னை வர்ணிக்க
-----------------
வார்த்தை கொண்டு உன்னை வர்ணிக்க
வாலிபம் போனதடி வந்தேறு நாட்டில்!
வாழ்ந்து காட்ட ஆசைகொண்டேன்.
வாழ்வாதரம் வடிகட்டின முட்டாள் நீ
வாழத்தெரியாதவன் என்று
வாழ்த்துரை அளிக்கின்றது! இன்று
வானொலிகளும் கைவிட்டதடி உன்னைப்போல
வாசகர் கவிதைக்கு ஏது தளம்?
வா இன்னொருமுறை
வாழ்ந்திட அழைக்கின்றது அழகிய தேசம்
வாடகைக்கு இதயம் கிடைக்கலயே?!
வாடிய மரம் ஒன்று
வாழ்த்துப்பாடுமா?
வாருவாயா காதலுடன்
வாழும் ஜீவன் இவனடி!
-----
ஆழ்மன உணர்வுகளில்
அடிநாதமாக வாழும்
அன்பு ஜீவன் போல
அகதியின் நெஞ்சில்
அருவி போல வந்தாயே!
ஆன்மீகம் எல்லாம் என் அருகில் போல
ஆசையில் கடந்து வா என்றாயே!
ஆற்றங்கரையில் தொலைத்த
அறுநாக்கொடி போல என் இதயம்
அலைகின்றது இன்னும் !
அருவிகளில் நினைவிருக்கா?
ஆணை வருகின்றது என்று
அணைத்துக்கொண்டாய் அன்று !
ஆணை போனதும் அதன் பின்னே நீ
அகதியாய் போனதும்,
அழியாத நினைவுகளாய்!
அந்த மரம் இன்னும் உன்னையே எண்ணி
ஆசையில் மடிந்த கதை நினைவிருக்கா?
அன்பே அத்தை பெத்த
அழகிய குயிலே!
//////
மீண்டும் ஒரு பிறவி எனில்
மீட்புபோரில் உயிர்பிரியும் வரம் வேண்டாம்
மீண்டும் ஒரு கைதிபோல
மின்னும் நரகாட்சியில்
மீண்டும் பிறவாத இனவாதம்
மீட்கும் பல நட்புக்களுடன்
மிதிலை ஆட்சிபோல ஒரு
மிருதுவான தேசத்தில் மறுஜென்மம்
மீண்டும் கிடைக்குமோ?
-----
6 comments :
கவிதை மனதை கனக்க வைத்து விட்டது நண்பா
வேதனை புரிகிறது தோழர்...
வேதனை வரிகள்
மனதை கனக்கச் செய்யும்வரிகள்
தம +1
வேதனை மிஞ்சுகிறதே!!! தனிமரம்...! காதலிலும்!!
//வாலிபம் போனதடி வந்தேறு நாட்டில்!// காதலுக்கு வயதுண்டா என்ன??!!! காதல்னாலே வருத்தம்தானா!! கொஞ்சம் கொண்டாடுங்களேன்!!!
அருமை
Post a Comment