http://www.thanimaram.com/2017/11/26.html
----------------------------------
நல்லாட்சியில் நல்லது நடக்கும் என்ற ஆவலில் காத்து இருந்தோர்கள் முகங்களில் எல்லாம் என்றும் போல இந்த ஆட்சியும் பேரினவாதச் சிந்தனையில் இருந்து மீண்டு வராது என்ற நம்பிக்கைக்கு உரம்மூட்டுவது போலவே அமைகின்றது சர்வகட்சி மாநாடு நோக்கி நகரும் புதிய அரசியல் வெற்று உளறல்கள் !
----------------------------------
நல்லாட்சியில் நல்லது நடக்கும் என்ற ஆவலில் காத்து இருந்தோர்கள் முகங்களில் எல்லாம் என்றும் போல இந்த ஆட்சியும் பேரினவாதச் சிந்தனையில் இருந்து மீண்டு வராது என்ற நம்பிக்கைக்கு உரம்மூட்டுவது போலவே அமைகின்றது சர்வகட்சி மாநாடு நோக்கி நகரும் புதிய அரசியல் வெற்று உளறல்கள் !
என்றாலும் இந்த சர்வதேசம் தமிழருக்கு தீர்வு ஏதும் கொடுப்பார்களா ?இலங்கை ஆட்சியாளர்கள் என்பது பற்றி ஒரு முன்னெச்சரிக்கையும் முன்னெடுக்கவில்லை எனலாம்.
என்றாலும் ஐரோப்பிய தேச சுற்றுலா விசா வழங்கும் வசதிகளில் இப்போது கட்டுப்பாட்டு விதிமுறைகள் தளர்த்தி இருப்பது மகிழ்ச்சியான செய்தி எனலாம்.இலங்கையர்கள் யாரும் தாய் தேசத்தில் இருந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தால் நிச்சயம் உள்நாட்டவர்களும் சுற்றுலாவுக்கும், சுற்றுலா ஊடாக சொந்தங்களை தேடியும் கண்டு பிடிக்க வசதி இருக்கு ஜீன்ஸ் படம் நாசர் போல !
அதனால் இப்போது ஐரோப்பா தேசம் தூரத்து துருவநட்சத்திரம் போல அல்ல அயல் தேச பிரதமர் போல விமானத்தில் பறந்து திரியலாம்!நினைத்தேன் வந்தாய் நூறு வயசு பாடல் போல!
என்ன மறுமுனையில் சத்தத்தை காணவில்லை ?காற்றின் மொழி ஜோதிகா போல யாழவன்?
என்ன மறுமுனையில் சத்தத்தை காணவில்லை ?காற்றின் மொழி ஜோதிகா போல யாழவன்?
இல்லை ராகுல் நீ நான் ஏதோ கேட்க? நீ ஏதோ சொல்லுகின்றாய்! அதுதான் புதிய அரசியல்யாப்புக்குள்ளும் ஒற்றை தேசம்,பெளத்தமதம் என்றும் போல முன்னுரிமைவிட்டுக்கொடுக்காத நிலையில் எப்படி சகவாழ்வு சாத்தியம் இதுக்கு முகநூலில் தீர்க்கமான பதில் தெரியாத சகவாழ்வு அமைச்சர் போல அமைதிகாக்க்கின்றேன்.
நண்பா எப்போதும் ஒருத்தன் மனத்துயரில் இருக்கும் போது நல்ல நட்புகள் ஆதரவுகொடுத்து, அவனுடன் நட்பை உறுதி செய்துகொள்ளவேண்டும். இது அவசரயுகம் யாரும், யாருக்காவும் காத்து இருந்து அந்தக்கால பூமழை பொழிகிறது பட நண்பர்கள் போல சகஜமாக பழகமுடியாதுதான்.
என்றாலும் அக்கரையுடன் ஒரு தொலைபேசி அழைப்பு, முகநூலில் ஒரு சிரிப்பு, டிவிட்டரில் ஒரு கலாய்ப்பு என்றெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது போகலாம் பலருக்கு, எனினும் ஒருவன் தன்நிலை தவறும் போது அவனை தேற்ற வேண்டும். நல்ல நட்புக்கு பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது!
சாருமதியை கமலேஸ் காதல்ரோஜாவே நாயகன் போல நேசித்தது நிஜம். ஆனால் தவராஜாவின் தங்கை தடைபோட்டது அழகல்ல, ஊரில் இருந்து வந்த மாப்பிள்ளைகள் எல்லாம் சட்டிகழுவும் ,மாடிகளில் குப்பைகூழங்கள் கூட்டிப்பெருக்கத்தான் பொறுத்தம் நம்மவர் படப்பாடல் போல சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் என்பது போல நினைக்ககூடாது.
தன் மகள் இங்கே படித்தவள், அவளுக்கு காரியாலயத்தில் 8 மணித்தியாளங்கள் பணிபுரியும் ஐடி மாப்பிள்ளைகள் தான் பொறுத்தம். என்ற நவநாகரீக சிந்தனை தோன்றுவதில் தவறில்லை .
தான் தன் கணவர் இங்கே உணவகத்தில் இரண்டு நேர வேலை செய்வதால் பின்னிரவில் வரும் போது அவரின் வருகைக்காக முழித்திருப்பது போல தன் மகள் இருக்க மாட்டாள் என்று சிந்திப்பதும் தவரில்லை .
ஆனாலும் உடன் பிறந்த அண்ணாவின் மகன் ஆசைப்பட்டான் உரிமையில் தானே ?அதில் தவறில்லை ,சொகுசா வாழ்ந்த சூரியவம்ஷம் தேவயானி போல தன் மகளும் உப்புமா சமைப்பாள் என்று சிந்திப்பது எங்கனம்? .
ராகுல் இதில் நான் யார் பக்கமும் கருத்து சொல்ல முடியாது .
கமலேஸ் காதலுக்கு என்னால் ஒரு பக்கத்தில் இருந்து தான் உதவி செய்ய முடியும் என்ற நிலை ஊரில் இருந்தது. இப்போது நானே இரண்டும் கெட்டநிலையில் இருக்கின்றேன் புலம் பெயர் தேச. பொருளாதாரதேடலில்!
புரிகின்றது யாழவன் ஆனால் ஒன்று சொல்லவா !கமலேஸ் போதைவஸ்த்துக்கு அடிமையாகிவிட்டான் என்ற முழுமையான செய்திகூட உனக்கு தெரியாது தானே?
அதுதான் சொன்னேனே நான் இப்போது பலருடன் தொடர்பில் இல்லாத இருண்ட வாழ்க்கை வாழ்கின்றேன்.
பலரின் தொலைபேசி அழைப்புக்கள் இலக்கம் தவறவிட்டுவிட்டேன். அத்தோடு பலரின் கற்பனை பொருளாதார முன்னேற்றத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது இங்கே.
பலரின் தொலைபேசி அழைப்புக்கள் இலக்கம் தவறவிட்டுவிட்டேன். அத்தோடு பலரின் கற்பனை பொருளாதார முன்னேற்றத்துக்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது இங்கே.
நான் உழைப்பதை இங்கத்தேச செலவுகளுக்கே போதாமல் இருக்கும் போது எப்படி பொருளாதார உதவி மற்றவர்களுக்கு செய்ய முடியும்?
ஏதோ நிலாந்தன் அழைப்பு எடுத்து சொன்ன காரணத்துக்காகத்தான் கமலேஸ் பற்றி தேடுகின்றேன் .இல்லையேல் என் பிழைப்பைப்பார்க்கவே நேரம் சரியாக இருக்கு!
ஆனாலும் உன்னிடமும் பிழை இருக்கு தானே? ஊரில் இருந்தவனை அங்கே இருக்கவிடுவதை விடுத்து, உயர்கல்வி விசாவில் லித்தினியா போகவும், அங்கிருந்து பாரிஸ் வரவும் புறச்சூழ்நிலையை தோற்றி வித்ததில் உன் பங்கும் இருக்கு!
என்னிடம் கமலேஸ் காதலுக்கு உதவி கேட்டான், அகதியாக அலைந்து பாரிஸ் போவதைவிட, கல்விக்கூட தகுதி விசாவில் இங்கே வரலாம் என்பதை தெளிவு படுத்தினேன் .!
சாருமதியை கட்டிவைப்பதாகவோ ?இல்லை அவர்கள் வீட்டில் துணிந்து போய் ஆனந்தம் பட மம்முட்டி போல விஜயகுமாரிடம் சம்மதம் கேட்பேன் என்று சொல்லவில்லையே!
சாருமதியை கட்டிவைப்பதாகவோ ?இல்லை அவர்கள் வீட்டில் துணிந்து போய் ஆனந்தம் பட மம்முட்டி போல விஜயகுமாரிடம் சம்மதம் கேட்பேன் என்று சொல்லவில்லையே!
இங்கே வந்த பின் நான் அதிகம் கமலேஸ்கூட பழகும் சந்தர்ப்பம் அமையவில்லை ,அவனும் நட்புக்களுடன் தங்கியிருந்தான்.
அங்கேதான் நீயும் பிழைவிட்டாய் அவனை தெரிந்த உறவுகளுடன் இருக்க வைத்து இருக்கலாம், அவன் நட்புக்கள் எல்லாம் இலங்கையின் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் ,அவர்களுக்கு வேண்டப்பட்ட சொந்தக்காரங்களும் தான் .
சொகுசு வாழ்க்கை வாழும் சிலரின் பிள்ளைகள் எல்லா கெட்ட பழக்கமும் கற்றவர்கள் என்பது உனக்குத்தெரியும் தானே?
மலையோரம் வீசும் காற்று என்ற நம்தேச நாடகத்தில் கூட கொழும்பில் எப்படி எல்லாம் போதைவஸ்த்து கைக்கு கிடைக்கும் என்று காட்சிப்படுத்தியிருப்பார்கள் நீ பார்த்து இருக்கமாட்டாய்! இனவாத யுத்த பூமியில் இருந்த படியால்
. நம் தேசத்தில் அப்படி என்றால் !
. நம் தேசத்தில் அப்படி என்றால் !
கட்டுப்பாடு இல்லாத சுதந்திரதேச பாரிசில் எத்தனை வசதிவாய்ப்புக்கள் இருக்கும் போதைவஸ்த்து பெற்றுக்கொள்ள! நம்மவர் பட கரண் போலத்தான் நான் நேரில் பார்க்கும் போது கமலேஸ் இருந்தான்!
உடனே அவனுக்கு தக்க வைத்தியம் அளிக்க நானே வைத்தியரிடம் கூட்டிக்கொண்டு போனேன் யாருக்கும் தெரியாமல்!http://www.desintoxicationdrogue.fr/cure-de-desintoxication-complete-14-jours
அப்படியா அதிர்ச்சியா இருக்கு ராகுல் நீ சொல்வதைக்கேட்கும் போது.
என்ன செய்வது கேட்ட போதெல்லாம் காசுகொடுத்து பிள்ளைகளை பாலாக்குவது பெற்றவர்கள் தானே!
உண்மைதான் !அதுக்காக தவறான பாதையில் போவதா ?
அதுதான் என் பாட்டி சொல்வாரே கூடாத கூட்டங்கள் கூடுவானேன், கூடி கூடங்கள் மாடங்கள் ஏறுவானேன் என்று!
உனக்கு இன்னும் இரு இன்பதிர்ச்சி செய்தி சொல்லவா யாழவன்!
அதுதான் என் பாட்டி சொல்வாரே கூடாத கூட்டங்கள் கூடுவானேன், கூடி கூடங்கள் மாடங்கள் ஏறுவானேன் என்று!
உனக்கு இன்னும் இரு இன்பதிர்ச்சி செய்தி சொல்லவா யாழவன்!
தொடரும்!
2 comments :
அந்த இன்ப அதிர்ச்சி என்னவோ? ஆவல்!
போதை வஸ்து ஆம் பெற்றோரின் கண்காணிப்பு அன்பு தோழமை இல்லாமையால் விளைகிறது!!
பெட்டிக் குறிப்பு வெகு அருமை. பெண்களின் கண்ணீரை விட ஆண்களின் ஒரு துளி கண்ணீர் வலி மிகுந்ததுதான்...
என்னாச்சு இன்று சினேகா போய் ரஞ்சிதா!!!
பாட்டி சொல்லைத் தட்டாதீர்
சிறந்த வழிகாட்டல்
Post a Comment