11 May 2018

காற்றில் வந்த கவிதைகள்-39

http://www.thanimaram.com/2018/04/38.html
----------------------------
ஒரு வார்த்தை-

—-
சுதந்திரம் என்னும்
சுயநிர்ணையம்
சுயமொழியில் சுகத்துடன் வாழ
சுபீட்சமான தலைநகரம் எங்கும்
சுயமரியாதையுடன் 
சுமர்ந்துசெல்லும் பயணங்களில்
ஒரு வார்த்தை இவர்களும்
இத்தேசத்தின் புதல்வர்கள் என்று
புத்தன் தேசம் உரைக்குமா
பொதுவெளி எங்கும்?


(யாவும் கற்பனை)
—-


//சிறகு இருந்தால்!

—-
பறக்கும் வரம் 
படைத்து இருந்தவன் கொடுத்தால்
பல தேசங்களின்
பரிதாப கையேந்தலுக்கு
படை உதவி போல
பறந்து போய்ச்சேரலாம்
பசிதீர்க்கும் உணவுகளுடன் !
பாதை யாத்திரையில்
பற்றி எரியும் நெருப்பினை அணைக்க
பால்க்குடம் போல பலதொன் தண்ணீர் 
பறந்து இறைக்கலாம்!
பதைபதைப்பில் துடிக்கும் போதும்
பார்க்கவேண்டிய முதல்குடிமகன்
பாதுகாப்பு என்ற பகட்டிலும்,
பாராளமன்ற உறுப்பினர்
பதவி சுகத்திலும்
படுக்கைவிட்டு வெளியில் வராத போதெல்லாம்!
பக்கதுணையிருப்பேன் 
பரிசாக ஒரு வாக்கு வேண்டாம்!
பாடல்கள் தராத பண்டிதர்கள்
பல வானொலியில் பழகியும்
படபடப்பு நேர அவஸ்த்தை புரியாதவர்களை
பச்சை மட்டையில் 
பறந்து போய் அடிக்க ஆசை!
பாதிக்கவிதை காற்றில் வராது என்ற
பயத்தில் பறக்கின்றேன் 
பாரிசில் சிறகு இருந்தால் !
பாடையில் போகும்
பாசமான மச்சாளிடம் கேட்டு இருப்பேன்
பாசம் என்பது பணம் இருந்தால் தானோ?
பகிடிவிடுவாய் முகநூலில் என்று!

(யாவும் கற்பனை

——எப்போது சொல்வாய்?
விழிகளில் வீழ்ந்து
வீரம் கற்றுத்தந்த
வீரத்திலகம் போல நீயடி!
வீழ்ந்து போனேன் காதல்போதையில்,
வீழ்ந்து போன யாழ்ராஜ்ஜியம் போல
வீறுகொண்டே எழுக்காத்திருக்கும்
விடலைகள் அல்ல நாம் 
வீரப்புதல்வர்கள் என்பது போல
விடைகொடு !நாமும்
வீழ்ந்து போகமாட்டோம்,
வீரப்பூமி என்னும் காதலை.
விடுதலைப்பூமி என்று எப்போது 
விதந்துரைப்பாய்?
விழிகளில் நீரூடன்
விடுபட்ட ஏதிலி?

(யாவும் கற்பனை)உ

கண் ஜாடை!

—-
காதல் பருவத்தில்
கன்னியவள் விழிகள்
காணும் பொருட்கள் எல்லாம்
காதலின் கண்ஜாடையில்
கற்பகத்தருப்போல
காதலனுக்கு!
கடினமான தேசவிரோதிகளுக்கு
கண்ஜாடைத்தலையாட்டு
கனபேர்களின் வாழ்வை
காணாமல்ச்செய்ததும்,
கண்ஜாடைக்கு இன்றும்
கவிஞர்களுக்கு பாரதியே
கச்சிதமான புலவர்!
கண்ஜாடையில் களவியல் 
களியாட்டம் கதைகள்
கனதினை ஊடகம்
கடும்போராட்டத்தில் பதிவு இட்டதும்,
களிதின்னும் சாமியார்
கண்ஜாடை இன்று
கடும்குற்றத்தில்!
கண்டு வந்ததையும்
கவலையுடன் பதிவு எழுதும்
கஸ்தூரியின் கண்ஜாடைக்கும்
கருத்துப்போர்கள் 
களைகட்டுகின்றது இணையத்தில்!
கண்ஜாடையில்  வீழ்ந்த
காவிய நங்கை கிளியோபாரட்ரா
கதைகளும் ,
கட்டளை என்று 
கழுத்தறுத்த விடுதலைபோர்களும்
கண்ஜாடையிலே மூழ்கியதும்,
கலியுகம் படத்தில் அமலாவுடன்
கசிந்துருகிய கதைகளும்
காட்சியாகக் கண்டதும் நிஜமே!
(யாவும் கற்பனை)


5 comments :

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமும் ரசித்தோம் நேசன். முதல் கவிதையின் வரிகள் மிகவும் நன்றாக இருந்தன... //ஒரு வார்த்தை இவர்களும் இத்தேசத்தின் புதல்வர்கள் என்று புத்தன் தேசம் உரைக்குமா பொதுவெளி எங்கும்? // இது பல அர்த்தங்கள் பொதிந்த வரி. அருமை அருமை..

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வழமைபோல் கவிதை அழகு நேசன்.

அதுசரி உயிர்ரோசையில் இருப்பது ஸ்நேகா அக்காவோ? பார்க்க வேறு யாரோபோல தெரியுதே:).