——-////////————-!
தேடல்கொண்ட வாழ்வில்
தேடிப்பெற்ற அன்பின் சகியே
தேடிச்சென்றாய் உயர்கல்வி என்று
தேசம் விட்டு தேசம்!
தேடி வருவாய் என
தேவனின் கோவிலில்
தனிமரம் போல
தேடிக்கொண்டேயிருக்கின்றேன்
தேவதை நீ வருவாய் என!
தேனே தென்பாண்டி மீனே என,
தேடினேன் வந்தது போல
தேர்வில் தோற்றவன்!
தேர்ந்த அரசியல்வாதி போல
தேசியம் விட்டு
தேற்றக்கணக்கில் தேடியவை
தேய்மானாமாகச்சொத்துக்கள் பல!
தேசியம் சிரிப்பதை
தேரோட்டி சொல்லியும்,
தேடிக்கொள்ளவே அதிகம் பிடிக்கின்றது!
தேசியக்கட்சியில் இருப்போருக்கு!!
தேய்ந்து போகின்றது
தேர்தலில் வாக்களிப்போர் விகிதம்!
——-
எதிர்பார்த்திருப்பேன்!—
-/
பொருளாதார தேடலில்
பொருத்தமானவள் இதயம் துடிக்க
பெரும்சுமையுடன்
பொருளீட்டச் சென்றவன்!
பொல்லாத தீவிரவாதியாய்
பொஸ்னியச்சிறையில்!
பெற்றவளோ
பொருளாதார மந்திரி போல
பெட்டிகளுடன் வருவான்
பொறுத்திருங்கள் !நுண்நிதிக்கடன்,
பெருங்கடன் எல்லாம்
பெருங்குடிமகன் தேர்தல் நேரத்தில்
பொழச்சுப்போங்கோ என்று
பெரும்மனதுடன் தள்ளுபடி
பொருள்வாக்கு தந்திடுவான்!
பெருமையுடன் போட்டிடலாம்
பெருவாரியான வாக்குகள்!
எதிர்பார்த்திருப்பேன்
நல்லாட்சியில் விடுதலைச்சிறை
விரைந்துவந்திடும் என்று!
நாங்களும் பொழுதினை
நாள்தோறும் போற்றுகின்றேம்
எதிர்ப்பார்த்திருப்பேன்
எனக்கும் விடிவு வரும் என்று!
(யாவும் கற்பனை)
பொறாமை!
—
வளர்ச்சியை நோக்கி
வடிவம் எடுக்கும் தேசங்களை எல்லாம்
வளர்ந்துவிட்ட பொருளாதாரம்
வழுக்கிவிழ வைக்கும்
வாய்ப்புக்களின்
வரிசுமையில்க்கூட
வந்துவிட்டது பொறாமை என்னும்
வலைப்பின்னல்!
வாடிப்போனாலும்
வாடிக்கையாளருக்கு
வரிவிலுக்கு அளிக்க
வசதியான முதலாளிகளுக்கு
பொறாமை
வடிகால் காட்டுவதில்லை!
வாக்கு அரசியலில்
வாத்திமார்களிக்கும் பொறாமை
வளரும் கட்சியையும்,
வசைபாடி வீட்டிலேயே
வாசலில் வைத்துக்கொள்ள
வாழும் தலைவருக்கும்
வால்பிடிப்போர் வடக்கில் பலர்
வந்துவிட்டார்கள் இனப்பற்றுப் பொறாமையில்!
வரிக்கவிதையிலும் வழுக்கள் உண்டு
வாட்டி எடுப்போர்கள்
வடிகட்டி
வதனநூலில் லைக்கு என்னும் பொறாமையில்
வந்து போகின்றனர்!
வாருங்கள் பொறாமை என்னும்
வக்கிரபுத்தியை
வழக்கொழிபோம்!
வட்டலப்பம் சாப்பிட்டு!
6 comments :
பொறாமை அருமை...(!)
வார்த்தைகள் வேதனையாக... வரிகள் அருமை.
வழமைபோல ஒரு எழுத்தை வைத்தே மூன்று கவிதைகள் அபாரம்... ஆனா இம்முறை ஸ்நேகாவுக்கு இடமில்லைப்போலும்:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:))
பாடல் நல்லாயிருக்கு.. நான் முன்பு கேட்டதா நினைவில்லை.
"பொறாமை!" என்ற கவிதையைப் படித்தால்
போட்டியைக் காணவில்லையே!
போட்டியும் பொறாமையும் இணையர்களே!
அதனால், அப்படி எண்ணினேன்!
"பொறாமை!" என்ற கவிதைக்குப் பாராட்டுகள்!
அருமை
அருமை
Post a Comment