28 June 2018

மொழி என்னும் கைத்தடி!

ஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முகாம்களிலும், வெவ்வேறு ஊர்களில் வாழ்வதும் வரலாறு .

இன்றைய நல்லாட்சி என்ற கோஷங்களும் விடுவிக்காத காணிகள் ,சந்தேக கைகதிகள் என்ற அவலங்கள் எல்லாம் தொடரும் துன்பியல் வலிகள்.  

அது போல நம்மவர்கள் பலர்  இந்தியா /ஐரோப்பிய/அவுஸ்ரேலிய/கனடா என்றும் புலம்பெயர்ந்து பல்வேறு உளவியல் போராட்டங்களுக்கு முகம் கொடுப்பது எல்லாம் நடைமுறை வாழ்வியல்

அந்த வகையில் பாரிஸ் தேசத்தின்  அடிப்படை குறுக்குவெட்டு முகத்தினை பலர் அச்சுவடிவிலும் ,இணையத்திலும் எழுத்தில் வடித்து இருக்கின்றனர்.

 இன்னும் பலர் பல படைப்புக்களை எதிர்காலத்தில் பதிவு செய்யலாம் பல நம்மவர்கள்.

 ஆனாலும் ஒரு நூல் வாசிப்பதைவிட ஒரு காட்சி ஊடகம் மூலம் ஒளி/ஒளியுடன் சொல்லவருவதை திறம்படச்சொன்னால் நிச்சயம் அது பல பார்வையாளர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிடும் .

 அந்த வகையில் இப்போதெல்லாம் அதிகமான குறும்படங்கள் எம்மவர்களின் வாழ்வியலை காட்சிப்படுத்தியவாரே பாரிசில் வெளியாகுவதை சமூக தளங்களில் பார்க்க முடிகின்றது இவ்வாறு சினிமா ஆர்வத்தில் இருப்போரும் தனிமரத்தின் கிளைகளில் சில நட்பு வட்டங்களாக முகநூல்களிலும் ,வாட்சாப்பிலும்,டிவிட்டர் ஊடாகவும்  பயணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்

அந்த வகையில் இவ்வாரம் என் பார்வைக்கு கிடைத்த இந்தக்குறும்படம் நெஞ்சில் முள்ளாக நெருடுகின்றது . பொருளாதார தேடல் என்ற போராட்டத்திற்கு இடையிலும் புலம்பெயர்தேசத்தின் இன்றைய அவசியத்தை உணர்த்தும் இக்கானொளியை நீங்களும் இங்கே காணலாம்!https://www.youtube.com/watch?v=sbapGccRJto&feature=youtu.be

நன்றிகள் யாழவன் ராஜன் அருமையான குறும்படத்தினை முகநூலில் பகிர்ந்தமைக்கு.


குறும்படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்!



------------------------------------------------------------------------------------------------------------------------------------




























3 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

குறும்படக்குழுவிற்கு வாழ்த்துகள்...

KILLERGEE Devakottai said...

எமது வாழ்த்துகளும்.
பிறகு கணினியில் காண்பேன்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ குறும்படமோ? பார்க்கிறேன் நேசன்..