—-
ஏதிலியின் இதயத்துக்கும்
ஏனோ காதல் ஏற்றம் கட்டி
ஏர் பூட்டி ஊழுவது போல
ஏழ்மையில் ஏக்கம் தந்தவளே!
ஏனோ இன்னும் தராத
ஏகாபத்திய தேசங்களின்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு போல
ஏழை என்னையும் இழுத்தடித்து
எல்லோரிடமும் கையேந்தும்
எங்கநாட்டு காணமல்போனோர் விடயம் போல
ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரிகள்
எல்லோரும் இருக்கும் கதிரையில்
ஏளனம் பேசும் பாராளமன்ற மேடை போல
எல்லோரும் நேசிக்கும்
ஏட்டுக்கல்வித்திறமை
ஏனோ உன்னிடம் இல்லை!
ஏதிலிக்கு எப்போது வரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய வதிவிடவிசா?
என்றெல்லாம் நீ சூட்டிய!
என்றென்றும் புன்னகை போல
ஏனோ சிரித்த பார்வையில் தான்
ஏதிலியும் இன்னும்
எழுதுகிறேன் பல தொடர்கள்!
என்னவளே நாயகி நீ என்ற
எடுகோலில் என்றும்
ஏக்கம்
கலையாற மறுக்கும் கனவு போல
என்னுள் வந்த உன்னை நினைத்து!
(யாவும் கற்பனை)
////தேயாத வெண்ணிலா!
—-
இனவாத மேகங்களும்
மதவாத தூறல்களும்
ஊழல்கள் என்னும் சுழற்காற்று
ஊழிக்கால மண்சரிவு போல
இயற்க்கையின் வளர்ச்சியில்
இன்னும் இன்னும்
இலங்கை என்ற தேசத்தின்
இதயக்கமலத்தில் மின்வெட்டுப்போல
இடறிவிழுகின்ற போதெல்லாம்!
இறையாண்மை என்ற தேயாத வெண்ணிலா
இசைந்தாடும் தென்றலாய் !
இன்னும் இருட்டறைக்கைதிகளுக்கு
இருவிழிகளில் தருசனம்
இனியும் வருமா தேயாத வெண்ணிலாவே
இருகரம் கூப்பிக்கேட்கின்றேன்
இன்னுயிர்க்காதலியே?!!!
(யாவும் கற்பனை)//
///
விளம்பரங்கள் இங்கே
விரும்பம் இல்லை என
விரும்பாமல் போவோரினால்
விருப்பப்பக்கம் வீழ்ச்சி காணும்
விலைச்சுட்டென் இலங்கை போல
விருப்பங்கள் விரும்பாமலே
விண்ணைத்தாண்டி வருவாயா என
விழிகள் நோக்கும்
விடுமுறை விருப்பங்கள் தொலைந்து
வீட்டுக்கொரு கணனி
விளையாடும் விருப்பு வாக்கு நாடி
விளம்பரம்செய்தவர் இன்றைய
வீட்டின் தலைவரிருடன்
விருந்தோம்பல் செய்வதும்
விரைவில் வரும்
விடுதலைத்தீர்வு என்று
விளக்கம் கொடுப்பதும்
விடியவிடிய கேட்ட கதைகள் எல்லாம்
விட்டில்பூச்சி போல
விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும்
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!
விதாணையார் வேலைக்காரன்!
(யாவும் கற்பனை)
6 comments :
எங்கே இடையில் லீவில போயிட்டீங்க நேசன் லீவு லெட்டர் குடுக்காமல்?:).. வழமைபோல கவிதை அழகு..
//விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும்
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!//
ஆவ்வ்வ் அருமை..
தேயாத வெண்ணிலா///
மிக அருமையான சொல்,,..
ரசித்தேன்....
என்னாச்சு நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்பது போலக் காணாமப் போய்ட்டீங்க...
எல்லாமே ரசித்தோம்...////விரைவில் வந்திடு
விளக்கு எரியட்டும்
விளக்கம் கேட்டு முகநூலில்
விழித்திருக்கின்றேன்!//
இது மிக மிக நன்றாக இருக்கிறது...
கீதா
கவிதைகள் அருமை...
பாக்கள் அருமை
அருமையான பதிவு
தொடருவோம்!
Post a Comment