01 October 2018

காற்றில் வந்த கவிதைகள்-42

http://www.thanimaram.com/2018/07/41.html


தள்ளிப்போகாதே!

—-
திட்டம் என்றும்
தீர்வு என்றும்
தீர்வுப்பொதி என்றும்
தில்லாங்கடி வேலையில்
தீர்வு இன்றியே தீர்மானம் இல்லாத
தீர்க்கவியலாத கூட்டணிகள்
தினமும் கூவுகின்றது
திட்டித்திட்டி இதோ 
தினமும் ஊழல் வருவாயில்
திண்ணையில் அவுடிக்கார் 
திறந்து பார்த்தாள் சட்டத்திருத்த 
தீர்வுக்கு இன்னும்
தினமும் கழுவுகின்றோம்
தீர்த்துவைப்பாய் நீயே என்ற
திவிரவாத அரசியல்வியாபாரிகள்
திருமுகம் தினமும் நாளிதழ்களில்
தித்திக்கும் சிந்தனைப்பதவி
திவிர தமிழ்த்தலைவரிடம் தள்ளிப்போகாதே
திருகோணமலை விவகாரம் எல்லாம்
தீப்பொறி போல செய்தி என்று
தினம் ஒரு சந்திப்பூ என்று
தினத்தந்தியில் திமிருடன் பேச
தில் இல்லாத கோழையை தந்தான்
திக்கெட்டும் புகழ்பூத்த தூய
திங்கள்ப்புதழ்வன்!
திட்டுவோர் தமிழர்வழிவந்த
தியாகிகள்!


(யாவும் கற்பனை)
——



தேனும் பாலும் ஓடும்
தேர்தல் வந்துவிட்டது
தேசியத்தலைவர் கைகாட்டிய
தேர்தல் சின்னம் இது
தேர்ந்தேடுங்கள் எம் ஜனாதிபதியை
தேர்தல்விளம்பரம் போல
தேர்தல் பரப்பினையில்
தேசவிரோதிகள் எல்லாம்
தேர் இழுத்தார்கள்
தேற்றிக்கொள்ள முடியும் நல்லாட்சி
தேசியச்சிறையில் இருப்போர் எல்லாம்
தேர்தல்வாக்குக்கள் போல
தேசிய சின்னத்தில் விடுதலையாவார்கள் என்ற
தேசமக்கள் ஏமாற்றம் எல்லாம்
தேய்ந்து போனது 
தேய்பிறை நட்சத்திரம் போல
தேய்ந்து போகும் நல்லாட்சி முகத்தில்!
(யாவும் கற்பனை)





///எழுத நினைத்த ஒரு தொடர்
ஏதிலிக்கும் ஏனோ!
ஏதுமற்ற  வருமானம் என்ற 
எல்லைக்கோடு என்னையும்
எடுத்துவந்த காவடி 
என்னையும் தள்ளிவிட்டது!
ஏன் இந்த அவசரம்!))
ஏற்றம் என்ற சபரிமலை விரதம் முடித்து!

ஏற்றி வருவேன் தனிமரம் வலையில்
எல்லோரும் போற்றும் 
என்னவளே சினேஹாபோல
ஏதிலியுடன் என்றும் சேர்ந்து இருப்பீர்கள் 
என்னிடம் இல்லை ஏட்டுக்கல்வித்தகுதி!))
என்னிடம் சொல்லாயோ







எதிர் பாருங்கள்!

2 comments :

முற்றும் அறிந்த அதிரா said...

உங்கட தலைப்புப்போல புளொக்கை விட்டு நீங்களும் தள்ளிப்போகாதீங்கோ நேசன்...

காணாமல் போனாலும் கலக்கலான கவிதையோடு வந்திருக்கிறிங்க.. அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறோம்...