18 February 2019

காதல்க்கேடி!))))

இப்போதெல்லாம் முன்னர் போலபாடல்கள் கேட்கும் புறச்சூழ்நிலைகள் இல்லை .நிலையற்ற பொருளாதார தேடல்,இணைய வானொலிகளை செவிமடுக்க முடியாத கைபேசி செயல் இழப்பு , வீட்டில் நுழைந்தால் வாரிசுகளின் வா வெளியே போகலாம் என்ற ஆசைக் குதுகலிப்பு  எதிர்பார்ப்பு !

எப்ப பாரி வேலை வேலை வீட்டுக்கு வந்தால் ஒரே பேஸ்புக் வீட்டில் ஒருத்தி இருக்கின்றாள் என்ற நினைப்பு என்ற தமிழருவி வானொலியில் வரும் வர்த்தக விளம்பரம் போல நிஜத்திலும் கூல் கூல் என்றெல்லாம் சாமானிய வாழ்வியலில் அதிகம் மூழ்கிப்போய்விட்டேன் .)))) 

ஆனாலும் இன்னும் ரசனை மாறவில்லை பாடலுக்குக்கான தேடலில் என்று சொல்ல நினைத்தாலும் ,ஆர்ப்பாட்டமான இசைகள் அதிகம் என்னை ஈர்ப்பதில்லை. இந்த ஐரோப்பிய பரபரப்பு வாழ்வில்

காதல் மாதம் இது என்று கவிதை எழுத நினைத்தாலும்! காலநதியில் நானும் ஏதிலியாய்ப்போனேன்!)))

புத்தாண்டும் பிறந்தாச்சு பூவே நில்லடி  என்று இவ்வாண்டிலும் எம்மவர் கந்தப்பு ஜெயந்தன்  இசையில் செந்தூரனின் வரிகளில் ஒரு பாடலை காட்சிகளுடன் முகநூலில் பகிர்ந்து இருந்தார்  . 


 காட்சி அமைப்பில் சில முரண்பாடுகள் தனிப்பட்ட ரசனையில். தொடர்ந்து  ஒரே மாதிரியான இசை ,இந்திய சினிமாவின் தாக்கம் அதிகம் என்றாலும் நம்மவர் பாடலை பலரிடம் கொண்டு சேர்க்கும் ஆசையில் இதோ பாடல் நீங்களும் ரசிக்க!)))

9 comments :

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க நேசன்!!! மீண்டும் எழுதத்தொடங்கியாச்சு போலும்...

ஆமாம் ஆர்பாட்டமான பாடல்கள் ஈர்ப்பதில்லைதான்...

ஆனால் நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடல் ஒலிக்கவில்லையெ...காணொளி வேலை செய்யவில்லை. கொஞ்சம் சரிபாருங்கள்...சரியாக இணைக்கப்பட்டிருக்கா என்று

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் யுட்யூபில் வந்துருச்சு...உங்கள் தளத்தில்தான் வேலை செய்யலை...கேட்கிறேன் யூட்யூபில்....கேட்டுட்டு வரேன்

கீதா

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி நண்பரே
இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

யாழில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது சரியா? யாழில்

அந்தக் கோயிலைப் பார்க்கும் போது நெடுந்தீவோ இல்லை நயினார்/மணிபல்லவ தீவோ என்று தோன்றுகிறது...

பாட்டு ரொம்ப ஸ்பீடோ?! நல்லாருக்கு...நீங்கள் சொன்னபடி இந்திய தமிழ்பாட்டுகளின் தாக்கம் இருக்குதான்....முயற்சியைப் பாராட்டுவோம்..

கீதா

கொய்யால யாருகிட்ட said...

இடையில் எதுக்கு லுங்கிடான்ஸ் ரெம்ப க்ளோஸப் வச்சு கொடுமை படுத்துறாங்க இசை எல்லாம் நாகூர் அணிபா காலத்தில் இருக்கு.இப்படி எல்லாம் கொடுமை படுத்த வேண்டாம் தலைவா

முற்றும் அறிந்த அதிரா said...

குடும்பம்தான் முதலாவது நேசன்... அதுக்கப்புறம்தான் ஸ்னேகா .. புளொக் எல்லாம்:)

putthan said...

{“எப்ப பாரி வேலை வேலை வீட்டுக்கு வந்தால் ஒரே பேஸ்புக் வீட்டில் ஒருத்தி இருக்கின்றாள் என்ற நினைப்பு }

வீட்டுக்கு வீடு வாசற்படி ...மீண்டும் ச‌ந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி

தனிமரம் said...

l

Angel said...

பிள்ளைங்க புரிந்து கொள்ளும் வயசு ஆகும் வரையும் அவங்க கூட அதிக நேரம் செலவழிக்கணும் .அத்தகு 10- 15 வயது வரையும் போகும் .

நேரம் கிடைக்கும்போது வலைப்பக்கம் வாங்க :)