19 April 2020

கொர்னா என்ன சொல்லுது?!!!

கொர்னாவின்  சதியில்   சிக்குண்டு  வீட்டில்  சிதறிக்கிடக்கும் உறவுகளே நலமாஎன்றுகேட்கும் ஆவலில்லைஎன்றாலும் சம்பிரதாயம்  என்ற  ஒன்று தென்கொரியா  தேர்தல் போல நடக்கும்! எல்லோரும் நலம்தானே

நீண்ட இடைவெளி தனிமரத்தின் முகத்திரையை கூகில் ஆண்டவர்தனிமரம்.org,/தனிமரம்கொம்கிழித்து தொங்கவிட்டாலும்!தனிமரம் நேசன் என்ற முகம் இன்னும் முகநூலில் உறவுகளுடன் முத்தெடுத்தாலும்வலை என்ற ஆலமரத்தின்  ஊஞ்சல்  ஆனந்தம் பட சினேஹாபோல  என் கற்பனை எழுத்துக்கு  விளக்கேற்றும்  இதய  தேவதை போல!)))

தனிமரம் கொஞ்சம் பொருளாதார தேடல் மாற்றல்கள்(பழைய உணவகம் மூடிவிட்டார்கள்) . ,இல்லறத்தில் புதல்வர்களின்  ஐபோன்  எங்களுக்கே என்ற  சீண்டல்கள்நிலையற்ற தொழில் ஓய்வுநாட்கள் என்று விரட்டினாலும் இந்தப்பக்கம்  வர  விரும்புகின்றேன்!)))


எதுவென்றாலும்  முன்னர்  போல  தொடர் கதை  எழுதும்  அமைதியின்மை  பிரதான  மூலக்காரணம்என்றாலும்  விரைவில்   பாரில்  எங்கும்   கொர்னா  நீங்கும்   என்ற   நம்பிக்கை  போல  தனிமரமும் தொடரினை தாங்கிவரும்!


       எங்கே  ?   உன்சத்தம்,சந்தடி இல்லையே   என்று பாசத்துடன்,நேசத்துடன்நேர்மையுடன்,நெகிழ்ச்சியுடன் இன்னும் உங்களை பார்க்கும் ஆவலில் இருக்கின்றோம்  என்ற உங்களின் நலம் அறியும் தனிப்பட்ட  தேடல்  மின்னஞ்சல்களுக்கு எல்லாம் இந்தவழிப்போக்கன் தனித்தனியாக  நன்றி சொல்லஆசைதான்!

எனினும் பொதுவான தனிமரத்தில் ஒருபதிவு போட்டால் என்னையும் நேசிப்போர்  எந்தக்கொர்னாவும் இவனைத்தீண்டவில்லை என்ற ஒருநம்பிக்கைக்கீற்றை   உணர்ந்துகொள்வார்கள்.)) 

பாரிஸ் சினேஹா மன்றம் இன்னும்  துடிப்புடன்  இருக்குதனிமரம்வலை  10 ஆண்டிலும்  சோடை போகவில்லை  எங்களை மீறியதால்  என்ற  இருத்தல்  பற்றிய       திமிர்   இன்னும்         இன்னும்    நலமுடன்  இருக்கின்றோம்  !)))இலங்கையில்   விடுவிக்கப்படாத சிறைக்கைதிகள்  போல   என்பது   எல்லாம்  இலங்கைத்தேர்தல்  பிரச்சாரம்  போல  கையில்  எடுக்காத  அரசியல்போல   என்றாலும்!

தனிமரம்  இன்னும்  வலையை  உயிர்ப்புடன்   சில் சில்  சில்லெல்லா  பாடல்போலமெல்லிசையாகஉன்னை  நினைச்சு   நினைச்சு   உருக்கிப்போன  உருகும்  பிரெஞ்சுக்காதலிபோல  என்றெல்லாம்   பீலாவிட   நேரமில்லை.)))

 ஆயினும்  ,தனிமரம் வலையில்  ஒரு தோப்பு  அன்பில்    என்பதை   புதியவர்களுக்கும்புரிந்துகொள்ளவும்,தெரிந்துகொள்ளவும்ஒருகல்வெட்டு  போல  தனிமரம்  காற்றலையில்  கடிபட்டுசிதைபட்டு,காத்திருந்து,கடந்து  வந்த   பாதைகள்   எல்லாம்  இங்கே  பல  பதிவுகளாகதொடர்கதைகளாககவிதைப்பூக்களாக  ஒப்பீட்டில்  பல  எழுத்துப்பிழைஎன்னும்  ஒட்டறைகள்   இன்னும்   அம்மியில்  அரைத்த சம்பல்போல,சுவையுடன்  இருக்கு!

தேங்காய்ச்சம்பலில் புளிகூடவோ,புளியங்கொட்டைமேல்  இருக்கும் சம்பல்  அரைத்த உதவாகரையின்  கைக்கு  சாட்டையால்  சாத்தனும் என்ற  இலங்கை  காற்றலை ஆசைக்கிறுக்கல் சங்கதி   எல்லாம் எழுதும்  ஆர்வம்  இல்லை  இப்போதும்!


 எனக்குப்  பாடல்கேட்க  இப்போது  புலம்பெயர்தேசத்தில்  நேரம்இல்லை,!



 கொர்னாவிலும்  எங்ககடை வாடிக்கையாளர்களுக்குஎடுத்துச் செல்லவசதியாக  உணவகம்இயங்கின்றது!))) 

இப்படித்தான்  இதுவரை இருந்தேன்  உரங்கு/அத்தியாவசிய  சாமான்தட்டுப்பாடுகியூவரிசை/  பங்கீடு  எல்லாம்  உன்னைநினைத்து  படம்போல   பார்த்து  வளர்ந்தவர்களில்  தனிமரத்துக்கும்  நினைவுகள் பல இருக்கு.

அவை  எல்லாம்   என் வலையில்   பதிவு போல பொத்தி வச்ச மல்லிகை மொட்டு போலசிந்தாமல் சிதறாமல்!)) 

இயற்கையின்   நியதியோ?சீனாவின்  சதியோ?நவீன  தலைமுறையும்  ஈழத்தில்/ இனவாத  யுத்தம்    எப்படி  எல்லாம்  சிதைத்தது  மனித  உயிர்களை,உறவுகளை,என்பதை  புரியவைக்க  வந்த  புதியதென்றல்படப்பாடல்  போல   நாளைக்கும்  நிலவு  வரும்  நாமிருக்க  மாட்டோம்!இந்த  கொர்னாவைரஸ் தாக்கம்  நாம்அறியோம்!


ஆனாலும்  பாரிசில்  இறப்பு  வீதமும்  அதிகம்  என்று     இதுவரை   19/04/2020 ஊடங்கள்  பதிவு செய்து  கொண்டேயிருக்கின்றது 19 323.!

எல்லோரும்  நலமுடன்   இருக்க   ஒன்றாய்  பிரார்த்திப்போம்!என்பதே   இன்றைய   காலத்தின்  தாரக  மந்திரம்

விரைவில்  எல்லோர்  வலையிலும்  கும்மி அடித்தது,குதர்க்கம்,பேசி,விடிய  விடிய  சண்டை போட்டாலும் அன்பில்  விட்டுப்பிரியாத  வலைச் சொந்தங்களின்  இதயவாசல்தேடி  தனிமரம்  வருவேன்!

என்ற   நம்பிக்கையுடனும்,  பிரார்த்தனைகளும்!

-----19/04/2020---------------------------------------------------------------------------------

——பெட்டிக்கடை——-


காத்திருப்பு போல ஒரு 
கடினம் காதலிலும் இல்லை!
கடைசி நேரப் பேரூந்துபோல!
கடைசி நேர நேயர் விருப்பம் போல
கடைமூடிய வாடிக்கையாளர்முகம்போல!
காசு இருந்தும்!
கடைசியாசைபோல!
கால்போத்தல் வைன்இல்லையே!
காலையில் எத்தனைமணிக்கு  ?,
கடைதிறப்பாய்?
கட்டிலில் ஒலிக்கும்
காத்தால கைப்பேசிக்கும்,
கனவுகள் உண்டு!  
காத்திருங்கள்!! இன்னும்
கால்மணி நேரத்தில்  வந்திடுவேன்!
கடை திறப்புநேரம் நெருங்கின்றது!))
கடிந்துகொள்கின்றாள்!
கட்டையில் போகும்வரை
காதுகொடுத்துகேட்பதில்லை நீஎன்று!
கடமை முக்கியம்
கடைகளும் ஒருசேவையே!
(யாவும்கற்பனை)

12 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

வாங்க தலைவரே...

என்னவொரு அழகான அருமையான பாடல்...!

திண்டுக்கல் தனபாலன் said...

"யாவும்கற்பனை" ரசித்தேன்... மேலும் தொடரட்டும்...

தனிமரம் said...

வாங்க தலைவரே...

என்னவொரு அழகான அருமையான பாடல்../ரசிக்ககூடிய வரிகள். நன்றி டிடி வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

யாவும்கற்பனை" ரசித்தேன்... மேலும் தொடரட்டும்../கவிதை இன்னும் தொடரும் கொர்னா நிலை இப்படியே போனால்!

Angel said...

நேசன் அங்கே இங்கே ஐரோப்பா முழுதும் ஒரே நிலைதான் .நீண்ட நெடுங்காலம்பின் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி .பத்திரமா இருங்க குடும்பத்தினர் அனைவரும் .இன்னமும் ஸ்னேகா ரசிகர்மன்றம் உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி :) நடுவே ஸ்ரீதிவ்யா ஆனந்தினு எட்டிப்பார்த்தால் நீங்க நிரந்தர ஸ்னேகா ரசிகர் :)))

அந்த கொ வை விரட்டுவோம் .விரைவில் அனைவருக்கும் நிலைமை சீரடைய பிரார்த்திப்போம் .

putthan said...

கொரானா பலரின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது ...மீண்டும் பதிவுகள் மூலம் சந்திப்பதில மிக்க மகிழ்ச்சி...

தனிமரம் said...

நேசன் அங்கே இங்கே ஐரோப்பா முழுதும் ஒரே நிலைதான் .நீண்ட நெடுங்காலம்பின் உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி .பத்திரமா இருங்க குடும்பத்தினர் அனைவரும் .இன்னமும் ஸ்னேகா ரசிகர்மன்றம் உயிர்ப்புடன் வைத்திருப்பது மகிழ்ச்சி :) நடுவே ஸ்ரீதிவ்யா ஆனந்தினு எட்டிப்பார்த்தால் நீங்க நிரந்தர ஸ்னேகா ரசிகர் :)))
//எப்போதும் சினேஹா ரசிப்பு மாறாது!நன்றி அஞ்சலின் அக்காச்சி வருகைக்கும். கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கொரானா பலரின் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டது ...மீண்டும் பதிவுகள் மூலம் சந்திப்பதில மிக்க மகிழ்ச்சி.../ஆமா உலகமே ஸ்தம்பிதமாகிவிட்டது. சந்தோஷம் வலையில் சந்திப்பது யாழ் புத்தன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பதிவுகள் சிறப்பு-
கொரோனா இன்னல்கள் ஒருபுறம் இருக்க மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி கொரோனா ஒருவகையில் இயற்கையை புதுப்பித்தது போல வலைப்பூவையும் புதுப்பிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது.என் வ்லைப்பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நேசன். வாழ்க வளமுடன்.

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் இன்னும் சினேகா ரசிகர்மன்றம் உயிர்ப்புடன் இருக்கா! அட!!

பாதுகாப்பா இருங்க நீங்களும் உங்கள் குடும்பமும். இக்காலகட்டம் விரைவில் சரியாகி எல்லாம் நார்மலாக வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உங்களுக்காகவும் பிரார்த்தனைகள். எழுதுங்க மகிழ்ச்சியுட்ன. எல்லா இடங்களிலுமே ஆட்டம்தான் போடுகிரது தொற்று. (கீதா: நான் பெயர் சொல்ல மாட்டேனாக்கும்!!!)

துளசிதரன், கீதா

தனிமரம் said...

பதிவுகள் சிறப்பு-
கொரோனா இன்னல்கள் ஒருபுறம் இருக்க மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி கொரோனா ஒருவகையில் இயற்கையை புதுப்பித்தது போல வலைப்பூவையும் புதுப்பிக்க வாய்ப்பு கொடுத்துள்ளது.என் வ்லைப்பக்கத்திற்கு வந்தமைக்கு நன்றி நேசன். வாழ்க வளமுடன்.
/நன்றி முரளி அண்ணாச்சி வருகைக்கும் ,கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன் இன்னும் சினேகா ரசிகர்மன்றம் உயிர்ப்புடன் இருக்கா! அட!!

பாதுகாப்பா இருங்க நீங்களும் உங்கள் குடும்பமும். இக்காலகட்டம் விரைவில் சரியாகி எல்லாம் நார்மலாக வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

உங்களுக்காகவும் பிரார்த்தனைகள். எழுதுங்க மகிழ்ச்சியுட்ன. எல்லா இடங்களிலுமே ஆட்டம்தான் போடுகிரது தொற்று. (கீதா: நான் பெயர் சொல்ல மாட்டேனாக்கும்!!!)

துளசிதரன், கீதா/மன்றம் செயலில் இருக்கு ஓய்வு இல்லாத நிலையில் கூட்டம் கூடுவதில்லை![[ நன்றி கீதா அக்கா வருகைக்கும் ,கருத்துரைக்கும்!