26 April 2020

கவிதையும் காணமும்!

முன்னர் இங்கே--https://thanimaramnesan.blogspot.com/2015/04/blog-post_43.html

-------------------------------------------------------------
உன்னையே சகி என்று
உழுத கதைகளில்
உலகமே உற்றுக் கேட்டது!
உண்மையில் யார் அவள்? !
ஊமையின் பாடல் போல,
உறங்காத நினைவுகளுடன்,
உயர்படிப்பு 
உறுதியுடனும் நாம் சிந்திய
உதட்டோர முத்தம் எல்லாம்!
ஊரில் தணிக்கைச் செய்திபோல
உருகும் காதலி என்றெல்லாம்,
உருமறைப்பில் திமிருடன்,
உனக்கு விசா இல்லை!


உதறிய உன்னக்கும்
உற்றதுனைதேடி
உங்கப்பர்பரும்!
ஊற்றிய பிரெஞ்சு வைன் போலவே
உள்ளிருப்புகாலத்தில்
உலகமேதூற்றும்!
ஊழ்பட்ட கொர்னாவில் இருந்து நீயும்
உயிர்ப்புடன் வருவாய் என்ற 
உயரியகனவுடன் 
உன்னோடு 
உடரட்டைக் காதலன்
உறங்காத விழிகளுடன் நானும்!
------------------------------------------------------------------------------------------!

யாவும்கற்பனை)

பல பாடல்கள் நாளாந்தம் காற்றலையில் ஒலியாக வெளி வந்தாலும்! படமாகி வெளிவராது போகும் சிலபடங்களில் இந்த என் உயிர்க்காதலி படம் ஒன்று வெளியாக வில்லை. ஆனால் பாடல் இன்றும் இலங்கை வானொலிக்கூடத்தில் இருக்கின்றது.ஆனாலும் சமூகதளமான யூட்டிப்பில் வேற ஒருவர் பதிவேற்றிய காட்சியே இப்பாடல் ஒலி/ஒளியாக இந்த கொர்னா காலத்தில் பார்த்து ரசிக்க!

இப்போதெல்லாம் இலங்கை வானொலி  இணையத்தில் ஓங்கி ஒலிக்கின்றது. தாய்வீட்டில் இப்போது முகநூல் மூலமும் பாடல் கேட்கலாம் வாருங்கள்.!slbc.lk---

https://www.facebook.com/SLBCThendralFM/?epa=SEARCH_BOX



4 comments :

putthan said...

https://www.youtube.com/watch?v=YoBji9RLqn8
"உடரட்ட மெனிக்க கந்துரட்ட திலக'இந்த காணமும் நல்லாயிருக்கும்

தனிமரம் said...

https://www.youtube.com/watch?v=YoBji9RLqn8
"உடரட்ட மெனிக்க கந்துரட்ட திலக'இந்த காணமும் நல்லாயிருக்கும்/உண்மைதான் அருமையான பைலா பாடல்! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

இம்முறை உ வில் கவிதையா...நன்றாக உள்ளது.

பாதுகாப்புடன் இருங்கள் நேசன்.

துளசிதரன், கீதா

இலங்கை வானொலி நானும் கேட்கிறேன் உலகம் முழுக்க உள்ள வானொலிகள் என்று ஒரு லிங்க் வாட்சப்பில் வந்தது அதில் இலங்கையும்..மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. பண்டைய மயில்வாகனன், ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் இருந்து சொல்லிய தமிழ்ச்சேவை என்ற விதத்தில் இல்லை என்றாலும் இதுவும் நன்றாக உள்ளது

கீதா

தனிமரம் said...

இலங்கை வானொலி நானும் கேட்கிறேன் உலகம் முழுக்க உள்ள வானொலிகள் என்று ஒரு லிங்க் வாட்சப்பில் வந்தது அதில் இலங்கையும்..மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. பண்டைய மயில்வாகனன், ராஜேஷ்வரி சண்முகம் அவர்கள் இருந்து சொல்லிய தமிழ்ச்சேவை என்ற விதத்தில் இல்லை என்றாலும் இதுவும் நன்றாக உள்ளது/கால மாற்றத்தில் பல நிகழ்ச்சிக்கள் மாறிவிட்டது! அன்று போல இன்று இல்லை என்ற ஏக்கம் பலருக்கு உண்டு!இருந்தாலும் நிகழ்ச்சியை செவி மடுப்பதுடன் போகின்றது கொர்னா உள்ளிருப்புக்காலம். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கீதா அக்கா.