22 June 2020

திமிர்.

கல்வி கற்காத பாட்டியும்
கற்பகம் படம் போல
கண்ணக்குழியழகி  விஜயா போல
கடன்வாங்கி
காணி உழுது
கற்பித்தால்
கனிமொழியை !
கற்றோர் என்ற சபையில்
கணீர் என்ற குரல் கேட்கும் ஆசையில்
கண்டிவரை போய்
கலைப்பட்டதாரியானதை
காட்சிப்படம்
கலைநயத்துடன் மின்னியது
கந்தையா வீட்டில்!
கருப்பு என்றாலும்
கஸ்தூரி மஞ்சல் போல
கலியாணச்சந்தையில்
காத்திருந்தாள்!


கற்றதகுதிக்கு எவருமில்லை ஈடாக!
கணக்கப்படிச்ச திமிருடன்!
கனபேர் அறியாத
கருப்பையா மகன்
கணக்கப்பிள்ளை கண்டியில் !
கல்லாதவன் என்று
கழட்டிவிட்டவன் மச்சான்
கலியாணத்தில் ஓடிய
கலியாண அகதிபடம் போல!
கற்றது தமிழ்படம் போல
கருப்பையா பேர்த்தியுடன்
கணக்கப்பிள்ளை
கடுகண்ணாவில் கொல்லப்பட்டதும்,
குழந்தை அவளுக்கு மாமி
கனிமொழி உறவில்!
கடும்யுத்தம் என்று
கட்டுநாயக்கா தாண்டி
கண்கான தேசம் போனாள்
கற்றுவிட்டேன் பலதகுதி,
காலம் எல்லாம் முதிர்கன்னி!
கடும்பணி செய்வேன் என்ற
காணிவித்த காசுடனும்,
கவியாணம் கானத
கடும் மனச்சுமையுடனும்,
கண்ணீரில் தவித்த
கற்பகம் பாட்டியை
கந்தாளாயில் விட்டு!
கடும் விசாரணையின் பின்
கனடாவில் அடைக்கலம்!
கற்பித்தால் தன் மருமகளுக்கும்
கல்விக்கு ஏது முற்றுப்புள்ளி!
கண்ணக்குழியழகி
கனிஹா போல நீயடி! என்
கண்பட்டுவிடும் செல்லமே!
காதல்சுகமானது நாயகி போல
கவிதைக்கு கற்பனை போல
கட்டிளம் பருவத்தில்
கனகுறிப்புக்கள்,
கடகடவென
கதிரை ஆட்சிட்கு வந்தது போல
கற்ற பையன்,
கடையிருக்கு,
கணக்காளர்,
கலைஞர் என்றெல்லாம்,
கரம் பட்டது!


கணித்த பஞ்சாங்கள் எல்லாம்
கனபொருத்தம் இருக்கு!
காத்திருங்கள்!
கல்விகற்கின்றாள்
கலியாணம் இப்போது வேண்டாம்!
கவலைப்படாதீங்கோ
கனஹா போல என் மகள்
கலைத்துறையில் நுழையமாட்டாள்!
கலியாண வயசில்லை
கனிமொழி சொல்லிய போது
கனிஹாவுக்கு வயது 27
கந்தகபூமியில்
கடும்போரில்
கண்மூடிய பாட்டியும்
கடைசியாசையாக சொன்னாள்!
கைம்பொன் நானும்
கற்பகத்திற்கு ஒரு  கலியாணம்பார்க்கல,
கணடாவில் பேர்த்திக்கு
கலியாணம் நடக்குமோ?,
கண்ணீருடன் கண்விழித்து
கற்கவெச்ச பாடு எல்லாம்
கதையாக சொன்னாலும்!
கடன் தந்தவன் பேராண்டி
கற்பூரமுல்லை ராஜா போல
கடைசியில் சாத்திரம்
கடும் தோஷம் என்றெல்லாம்
கதைவிடும் ஒற்றைமரம் போல
கடும்பனியிலும்
கப்பலில் போறாளாம்
கடுமையான கொர்னா பாதிப்பில்
கரைசேராத அமெரிக்காவுக்கும்!

மருத்துவ சேவையில்
மல்லுக்கட்டும் டாக்டர் கனிஹா!
கண்ணீருடன் வழியணுப்பிய  மாமியின்
கைபேசியில் ஒலித்தது
கல்கி படத்தில் இருந்து
எழுதுகிறேன் ஒரு கடிதம்!
(----------------------------------


6 comments :

ராஜி said...

இது கவிதையா?! கதையா?!
எழுத்துருவை பெருசாக்கலாமே!!

Thulasidharan V Thillaiakathu said...

நேசன் உங்கள் ப்ளாகை ரீச் செய்ய கடினமாக இருக்கு. ப்ளாகர் செக்யூரிட்டி கேள்விகள் கேட்குது அப்புறம் நுழைந்துவிட்டேன். ஹா ஹா

நன்றாக இருக்கிறது வழக்கம் போல்...

இப்போது ப்ளாகும் பார்க்க நன்றாக இருக்கிறது. எழுத்து சைஸ் மட்டும் கொஞ்சம் பெரிதாக்குங்க நேசன். ரொம்பப் பெரிசா வேண்டாம்

கீதா

தனிமரம் said...

இது கவிதையா?! கதையா?!
எழுத்துருவை பெருசாக்கலாமே!!/உரைநடைக்கவிதை போல![[ எழுத்துருவை சரி பார்க்கின்றேன் ராஜி அக்கா! வலையில் மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் கைகூடுதில்லை! நன்றி வருகைகும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நேசன் உங்கள் ப்ளாகை ரீச் செய்ய கடினமாக இருக்கு. ப்ளாகர் செக்யூரிட்டி கேள்விகள் கேட்குது அப்புறம் நுழைந்துவிட்டேன். ஹா ஹா/பிளாக்கரின் புதிய அறிமுகத்தில் அதிகம் குழப்பங்கள் அக்காச்சி கீதா. விரைவில் சரி பார்க்கின்றேன்.

தனிமரம் said...

எழுத்து சைஸ் மட்டும் கொஞ்சம் பெரிதாக்குங்க நேசன். ரொம்பப் பெரிசா வேண்டாம்/பார்க்கின்றேன் மாற்றம் செய்வதுக்கு .

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா ஹா ஹா
க வில
கலக்கிட்டீங்க
கவிஞர் நேசன்ன்ன்:)..

அதுசரி இடையில கொரோனாப் படம் வருதே:)