24 January 2021

ஊர் சிரிப்பு!

 ஊர்கூட்டி உறவுகளுடன்

உணவுப்  பந்தலில்

உன்கரம்   பற்றக்   கணாக்கண்டேன்!

உமையாள் பேர்த்தியே!

ஊர்  எல்லாம்

உருமாறிய  கொர்னாவில்,

உன்னையும்  பிரிந்து,

உத்தரவு  மீறாத

உண்மை  ஆட்சி பீடத்தில்\

ஊர் எல்லையில் கொத்தணிச்சாலை!

உழிக்கலக்கமிடும்,

உரைகளும்,  தினமும்

உளறுகின்ற   ஊடக   சந்திப்பும்போல

உன்னையும்  !காதலியைப் பிரிந்து,

உரைக்கின்ற  மருத்துவ அறிக்கைகள்,

உள்நாட்டு  சுகாதார  மந்திரிக்கும்,





உன்விதியும்,என்விதியும்

ஊடல்கொண்ட  கேதுகளினால்,

உயிர்ப்பெறாத   கலியாணமாம்!

ஊரவர்கள்   சிரிப்பொலி

உலகசேவையில்   கேட்கின்றேன்.




உலர்பாணம்   குடித்தவர்களுக்கும்

உனக்கும்   பிடிக்காத   

ஊதாரி முன்னால் மாப்பிள்ளைக்கும்

உருமாறிய  புதிய  கொர்னாவில்

 உயிருக்கு   உலைவைக்காதே  என்று

உத்தமன்   படம்போல   வாழ்த்துகிறேன்!




உந்தன்   திருமண  கோலத்திலும்

உரைமொழி  பெயர்ப்பாளன்   பின்னே

ஊர்க்குருவி   போல   இவனும்

உலர்ந்த   காதலுடன்!





யாவும்கற்பனை)

5 comments :

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா எத்தனை வயதானாலும் இந்தக் காதலை மட்டும் மறக்கவே மாட்டினம் போல கர்ர்ர்ர்ர்ர்:)
அதுசரி நேசன், உமையாள் பேர்த்தி எனில் முருகனின் மகளாகவெல்லோ இருக்கும்🤪🤪🤪🤪

வலிப்போக்கன் said...

அருமை..

தனிமரம் said...

ஆஹா எத்தனை வயதானாலும் இந்தக் காதலை மட்டும் மறக்கவே மாட்டினம் போல கர்ர்ர்ர்ர்ர்:)/இதிகாசங்கள் அப்படித்தான் போலியாக போதிக்கின்றது![[

அதுசரி நேசன், உமையாள் பேர்த்தி எனில் முருகனின் மகளாகவெல்லோ இருக்கும்🤪🤪🤪🤪
//ஆன்மீகத்தில் அப்படி வரும் நான் ஊர்பெயரையே இங்கு சூட்டினேன்![[ நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமை../நன்றி வலிப்போக்கன் வருகைகும், கருத்துரைக்கும்.

putthan said...

கொரனா காதலர்களையும் விட்டு வைக்கவில்லை போல இருக்கு கவிதைக்கு பாராட்டுக்கள்