02 March 2021

கவிதை போல கிறுக்கல்.

 விரும்பியவள்

விலக்கிச்சென்றவள்!

விதைக்காத   நிலம்   போல

விலாசம்   மாறி   வந்தவள்

விழியில்   கண்ணீரும்

விம்மலுடன்   அதிகாலை

விறைத்த  நீர்  போல!

விழாங்கு   மீன்  போல

விடலைக்   காதல்   என்றவளே!

விடுதலைப்பாதையில்

விழுப்புன்    ஏந்திய

வீர    நங்கையே!

விதானையார்   பேர்த்தி

விடத்தல்    தீவாளே!

விலங்கு   பூட்டிய

விதேசி   நங்கையானவளே!




விழியோரம்   நீதொட்ட

விரும்புகின்றேன்   படம்    பார்த்த

வில்சன்    தியேட்டரும்

விழ்ந்ததாம்    தொல்பொருள்   ஆராய்ச்சியில்

விடியாதபூமியில்!





விலங்குடன்   புத்தன்   தேசத்தில்

விழிகள்   அற்றவன்

வீழ்ந்து   கிடக்கின்றேன்!!( யாவும்கற்பனை)

4 comments :

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

வழமைபோல கவிதை அழகு நேசன், ஆனா ஸ்நேகா மிஸ்ஸிங்:))

தனிமரம் said...

வழமைபோல கவிதை அழகு நேசன், ஆனா ஸ்நேகா மிஸ்ஸிங்:))/வாங்க அதிரா நலமா !இங்கு அரசியல் முக்கியம் என்பதால் சினேஹாவுக்கு இடமில்லை![[ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

வலிப்போக்கன் said...

கவிதை கற்பனையாக எனக்கு படவில்லை.....

தனிமரம் said...

கவிதை கற்பனையாக எனக்கு படவில்லை...../!! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வலிப்போக்கன்.