கண்டிப்பான கங்காணி
களையும், கலையும்
கழுவியூற்றிய!
கவ்வாத்துக்கத்தியும்
கறுப்புக்குடையுடன்!
கண்டி ஞானம் சஞ்சிகையில்
கடைசிக்கவிதை எழுதியவர்!
கந்தப்பொல வெற்றிலை போல
கன்னம் சிவந்த
களிப்புடன்,
கந்தானை சன்முகத்தின் சம்மந்தி!
கடுகாகும் கோழிக்கட்சியின்
கடைசி நேர வாக்காளர்!
கடும் குளிரிலும் முகநூலில்
கருத்திடுவார்!
கடும் வெயில் கணடாவில் என்று
கனீர் என்றழைத்தார் காலையில்!
கண்டியளோ? கொர்னா உதவி
காசாக 5000 ரூபாய்
கண்ணிலும் படவில்லை!
காய்ந்துபோன கொழுந்தாக!
கையாடல் கதை எல்லாம்
காட்சியில் வராத
கடும் போராட்டம்!
கண்டு கொள்ளாத ஊடகம்!
கறுப்பு யூலையில்
கடும் நெருக்கடியில்
கட்சி மொட்டுக்கு
கடன் தீர்க்க வரும்
கனம்கோட்டார் பஷில் அவர்களை
கண்டா வரச்சொல்லுங்க பாடல்போல
கசங்கிய கனவுகளுடன்,
கடைசி நேயராக
கலந்தது காற்றலையில்!
கங்காணியின் காத்திருப்புபாடல்
கப்பல் ஏறிப்போயாச்சு!
( யாவும்கற்பனை)
2 comments :
நேசன் நலம்தானே? வக்சீன் எல்லாம் போட்டிட்டீங்களோ? வீட்டில் குட்டீஸ் இருவரும் எப்படி இருக்கினம்.. 3 வது விசேசம் ஏதும் இருக்கோ?.. ஆஆஆ இன்று நிறையக் கேள்விகள் கேட்டுவிட்டேன் ஹா ஹா ஹா காத்திருப்புக்கள் தொடரட்டும்.
நல்ல சுகம் அதிரா!ஊசி இரண்டும் போட்டுவிட்டேன் .மூன்றாவது மகள் பிறந்து 3 வயதாகி விட்டது இந்த செப்டம்பரில் பள்ளிக்குச்செல்லபோறாள்!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
Post a Comment