குளிர்பாணங்களும், குளிர்சாதனங்களும்
குறைந்த விலையில் வாங்கி
குந்தியிருந்தேன் !
குடிகாரன் உங்கப்பன்
குறிகட்டுவான் குடுமி பாரிஸ் வாழ்
குடிக்காதவன் கதை போல!
குளிர்நாட்டில் கூட்டிவிற்கும்
குமாரவேல் முதலாளி போல!
குளத்தில் கல் எறிந்த
குழந்தை போல சிரிப்பழகியே!
குடைக்குள் மழைபோல
குதுகல கோடைகாலத்தில்
குதித்து வருவாயே ஐரோப்பிய
குனவதி பேர்த்தியே?
குறிப்பாக கொர்னா !))
குறித்த பாடல் பூவே பூச்சூடவா?
குறுகிய நேரம்!
குடுக்கவில்லை !
குற்றாலம் குற்றலாம் பாடல்!
குறுக்கு வழியில்
குடுக்காத வரிப்பட்டியல்!
குற்றம் என்று
குந்தியிருக்கும் உன் என்ஜினியர்
குடிகார மாப்பிள்ளையும்
கும்பிடுகின்றார் !
குறை ஏதும் இல்லை பட்டதாரி நான்!))
குலமகள் ராதை என்று
குடிபெயர்ந்தேன்
குடிவகை மிளிரும் பிரேஞ்சு!
குலசாமி போல வேண்டுகின்றேன்!
குறிகட்டுவான் போகும் வழிகாட்டு
குடுக்கின்றேன் !
குறைதீர்க்கும் அமைச்சு!
குளியாப்பிட்டி வாசிக்கு!))
குடும்ப நலத்துறை அமைச்சும்!
குற்றம் கடிதல் போல
குறுநகையில் அவள் ஒரு
குழந்தைபெறாத மலடி
குறித்துக்கொள்!
குறிப்பில் கூட செவ்வாய் தோஷம்
குதறியள் தாயும்
கும்பிட்டால்!))
குளிர்ந்தது நெஞ்சு
குதிக்கட்டும் !))
குற்றாலம் போல துங்கிந்த ஆற்றில்
குதித்தது பொங்கும் பூம்புனல்
குறித்துக்கொண்டேன்!
குற்றியலுகரம்!26:7/2021!)))
குப்புறப்தூங்கும்
குளிர் கால நேரமாற்றம் போல
குளிருது நெஞ்சில்!))
குறுக்கால போவான்
குறுஞ்செய்தியை
குப்பையில் போடு
கும்மிருட்டில்
குடிபெயர்ந்தவன்
குதுககலத்துடன்!
குதிக்கின்றேன்!))
)(யாவும் கற்பனை)!!படமும் சுட்டது!))
2 comments :
அருமை நண்பரே!!
இரசித்தேன் நண்பரே...
Post a Comment