19 May 2020

சினேஹாவும் சிலிர்ப்பும்!

புளிக்கவில்லையா ?
புன்னகைஅரசியின்
புலம்பல்க்காட்சி!?
புளித்தகள்ளும்,
புளிச்சல்  பணியாரமும்,
புத்துணர்ச்சி  தருவதுபோல
புத்தூரிலும்  புது  மயானம்போல
புதியமன்னர்கள்  படம்போல 
புதினம்   கேட்காத
புதியகொர்னா 
புலம்பெயர்  வாழ்க்கைபோல
புதியபாடல்   கேட்காத 
புதியவார்ப்புக்கள்   காலம்போல
புதிர்போடும்
புதிய முகநூல்நங்கையே!))!


புளிக்காத இசையானியின் பாடல்போல
புதுநெல்லும் புதுநாற்றும் படம்போல
புன்னகையின்  பின்னே
புனைபெயரில்  புதுமடம் 
புழுதிவாரித்  தூற்றினாலும்,
புதுப்பயணம்  போல
புரண்டு அழுத  காதல்  எல்லாம்
புஸ்ஸல்லாவா  வீதிபோல
புறமுதுகில்  குத்தினாலும்!
புதிய  மாஹாத்தயா,
புலத்சிங்களவில்இருந்து
புரட்டிஅனுப்பிய
புதுக்கதையிலும்!
புட்டுவைப்பேன்  பிடித்த பாடல்தாராது
புதிய  அறிவிப்பாளர் 
புன்னகையுடன்  முகநூல் வந்தாலும்,
புன்பட்ட  நெஞ்சம்!


புட்டகபர்த்தி  போனாலும்!
புதுமனிதன்  பாடல்போல
புண்ணியம்  தேடவில்லை.
புதுமாப்பிள்ளை   தேடுகின்ற
புலம்பெயர்  மாமாவும்,


புதிராதபுதிர்  போல
புன்னகைக்கும்  மரத்தில்!
புதுக்கள்ளுக்கும்.
புதுவிளக்கம் தரும்
புத்தியும்  இன்னும்
புகுந்து  கொள்ளாத  அலரிமாளிகைபோல!

புழுக்கம்   இல்லாத  அடுப்படியில்
புதிய  அலைவரிசையும்
புத்துயிர்பெற்றது!
புறப்படுங்கள்  புதிதான  வாழ்வுக்கு!
புன்னகையுடன்   
புதிய தேடல்!



(யாவும்கற்பனை)
Mm

14 May 2020

என் காலம் சொல்லிய வெண்பா நீ!

ஒருநாட்டின் முதன்மையான  , கலை, கலாச்சாரம், பண்பாடு,சுற்றுலாத்தலங்கள், என்பவற்றை  மக்களிடம்கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஒரு  தூய்மையானசினிமாக்கலைஞன்  சிந்திப்பான்என்றால்!     அவன் படைப்பை சினிமாப்பிரியர்களும்  வரவேற்று,அக்கலைஞனை  தொடர்ந்து  ஊக்குவிக்க வேண்டியதார்மீக  கடமையும்  மக்களுக்கு  இருக்கவேண்டும்    என்பது  என்  தனிப்பட்ட  கருத்து! 

தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

அப்படி  ஒரு  அற்புதமான  படைப்பாளிகளைவிரல்விட்டு  எண்ணி   விடலாம்  .

மலேசியா  என்றாலே  தமிழ்ப்படங்களில்  போதைவஸ்த்துப்பாவனை, குழுவன்முறை, கடத்தல்கூடாரம், என்று  ஒருகண்ணோட்டத்தில்  மட்டுமே  பலதமிழ்ச்சினிமாப்படங்களில்  காட்டப்படும்    ஒருநிகழ்வு! 

திரைப்படபாடல்களுக்கு   மட்டும்  அழகிய  சுறுற்றுலாப் பூமி  என்று   பலபாடல்கள்  மலேசியாவில்  காட்சிப்படுத்தி  இருப்பார்கள்! 

ஆனாலும்  மலாய்தேசம்  மூவினமக்களும்  வாழும்   அழகியதேசம்  அந்ததேசத்தின்  காதல்,நட்பு,இசை, அழகிய  காட்சிகளை  பார்க்கும்  ஆவலுக்கு  விடையா





! இந்ததேசத்தில்குறிப்பிட்டமாதங்கள்   தங்கியிருந்த  அனுபவங்களை   தொடர்கதையில்  எழுதியிருக்கின்றேன்.https://thanimaramnesan.blogspot.com/2012/11/31.html


இனியமையான  பாடல்களும்  நேற்றில்இருந்துகேட்டுக்  கொண்டேயிருக்கின்றேன்  ஏதோ   ஒருநினைவுகள்  தாலாட்டும்  இசைக்காக!))இப்பட இசையமைப்பாளர் வர்மன் பற்றிய பாடல்களும் பதிவாக இருக்கின்றது!

சமூகத்தளமான யூப்டிப்பிள்  முழுத்திரைப்படமும்   இருக்கின்றது.



 தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

கொர்னா  உள்ளிருப்புக்  காலத்தில்  நல்லபடம்  பார்த்ததிருப்திக்கு   தனிமரம்   நிச்சயம்   உத்தரவாதம்தருகின்றேன்!


இதைக்கண்டுகளிக்கலாம்.!