02 November 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -31

"எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமானே" என்று திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் .ஈழத்தில் தமிழனாக பிறந்து இருந்திருந்தால் ,அகதியாக பல அவஸ்த்தைப்பட்டு இருந்திருந்தால், எப்படி நெஞ்சுருகிப் பாடியிருப்பார் ???
"பொல்லா வினையே இனவாத சதியே ஏன் படைத்தாய் பரம தாயாளனே "அப்பாவியாக எங்களை ஈழத்தில் என்றா??!

நான் அறியேன் ! குரவர் அவர்கூட யுத்தத்தில் இருந்து தன் உயிர்காக்க அடைக்கலம் கிடைக்கும் நாட்டுக்கு அகதியாக சட்டவிரோதமாக கப்பலில் பயணம் செய்து இருந்தால் அனுபவித்து கண்ணீர்மல்கி இருப்பார் ஈழத்தவனின் வலிகளின் தாக்கம் யுத்தம் தந்த பக்கவிளைவு என்ன என்று?
போதுமடா ஈழத்தின் வாழ்வு என்று நினைத்து கப்பல் பயணத்தில் கடலில் முகம் தொலைந்து ,உயிர் துறந்து தண்ணீரில் கலந்து போனவர்கள் பற்றி எந்தப்பாட்டுக்காரி நடுநிலமையோடு கருத்துச் சொல்லி இருப்பாள் ??

கருத்துச்சுதந்திரம் என்றும் பாட்டுக்காரிக்கும் ,அவர் பரம எதிரிக்கும் ஏழுதுகோல் எடுப்பவர்கள் எல்லாம் ஏன் யுத்த , பொருளாதார , அபாயத்தில் இருந்து தங்களைப்பாதுகாக்க ஆபத்தான கடலில் கப்பல் பயணம் மூலம் என்றாலும் உயிர் தப்பிவிடலாம் ,உயிரோடு வாழமுடியும் என்று நம்பி உயிர்காக்க அகதியாக கப்பலில் பயணம் செய்து இயந்திரக் கோளாறில் அலைகடலில் தத்தளித்தும் ,அலைகடலில் நடுவில் ஒன்றாக வந்தவர்கள் கண்முன்னே உயிர் பிரிந்த போதும் .


கையறு நிலையில் கரை சேர்ந்து அனுபவித்த சுமைகளையும் நினைவுகளை பாவச்சுமையாக இன்னும் சுமக்கும் பலரில் வெளியுலகிற்கு வெளிச்சம் போடமுடியாமல்?? இருப்போர் பற்றி ஏன் ஊடகவியலாளர்கள் எழுத மறுப்பது?

இந்த இரட்டைவேடம் கானலைத்தேடும் மான்களா ??ஹிட்சை நாடும் நவீன ஊடகவியளார்களோ?

ஒருவேளை இதுஎல்லாம் பிரபல்யம் இல்லையோ கைது செய்யும் அளவுக்கு போக??

இப்படித்தான் அன்று குமார் 65 நாட்களின் பின் வந்தார் சிவதாஸ் சகிதம் .


கைபேசி சிணுங்கியது. இடையில் எங்களுக்கு சாப்பாடுச் சாமான்கள் இல்லை என்று தொலைபேசி அழைப்பு எடுத்துச் சொன்னபோது தன் நண்பரிடம்(சிவதாஸ்) பொருட்கள் கொடுத்து அனுப்பியதுடன் சரி குமார் வரவில்லை .தான் ஐரோப்பாவுக்கு போவதாகவும் சில நாட்களில் வந்து விடுவேன் என்றதும் அதன் பின் 65 ஆம் நாளின் பின் இன்று வந்தார் அழைப்பில் .

"ஹலோ
ஜீவன் அங்க தர்சன் மற்றும் புவி,ஞானம்,கபிலன்,அண்டனி,நீயும் ஆக 6பேரும் உங்கட பைகளை எடுத்துக்கொண்டு மாடியின் கீழே வாங்க "

இன்னும் ஒரு 3மணித்தியாலத்தில் நம்ம தோஸ்த்தும் வருவார்."

இன்று உங்கள் பயணம் சரி வந்திருக்கு மற்றவர்கள் பின்தான் போவார்கள் என்றுவிட்டு தொடர்பை துண்டித்தார்.

"இத்தனை நாளாக ஒரே வீட்டில் இருந்தாலும், எல்லாரும் தனித்தனி தீவுகள் தான் யாரும் உண்மையுடன் தாங்கள் எங்கே போகின்றோம் என்றோ .தங்களின் முக்கிய பயணமுகவர் யார் ?அவரின் அல்லக்கை ஓட்டி யார்? என்றோ சொல்லியது இல்லை. ."

சொல்லியது சொல்லிய வண்ணம் வாக்குத் தவறாமல் தெய்வ வாக்குப் போல 3மணித்தியாளத்தில் குமார் வந்தார் .

நாங்களும் மீண்டும் A 9 பாதை திறந்துவிட்டதும் . இடம்பெயர்ந்து வெளியிடத்தில் இருந்தவர்கள் மீண்டும் ஊர் பார்க்கப் போன சந்தோஸம் போல இருந்தோம் .

"தர்சனும் ,ஜீவனும் முன்னாடி காடியில் ஏறுங்க என்றார் குமார் அண்ணா."

மற்றவர்களை4 பேரும் சிவதாஸ் காடியில் ஏறுங்க.

இருகுழுவாகிய நிலையில் கார் தன் பயணத்தைத் தொடர்ந்தது.

"ஏப்பா ஜீவன் அதில் போற 4 பேரும் இன்று மலாக்காவில் இருந்து இந்துனேசியாவுக்கு கப்பலில் போறாங்க."

தர்சன் கிளாங்க ஏயாப்போர்ட்டில் இருந்து ஏறப்போறான்.

அங்க ஐரோப்பாவில் நம்ம பார்ட்ணர் பிக்கப் பண்ணூவார் .

அப்புறம் ஜீவன் உங்கட ஐரோப்பா முகவர் காசு இன்னும்செட்டில் பண்ணவில்லை.

உங்களை இன்னொரு ஓட்டியுடன் தான் அனுப்ப வேண்டும். அதனால் வேற இடத்தில் இந்தவாரம் தங்க வைக்கின்றேன் என்றார் குமார் காரினை செலுத்தியபடியே.

உங்கட ரூமில் மற்ற 4 பசங்கள் வந்து 4 மாதம் ஆச்சு ஆனால் அவங்க ஐரோப்பிய பார்ட்ணர் இன்னும் பைசா கொடுக்கவில்லை.

இவங்களுக்கு என் செலவில் தான் எல்லாம் கொடுக்கின்றேன்.

இன்னும் புத்தகம் செய்ய ஓட்டியை ஒழுங்கு படுத்த என்னிடம் அதிகம் காசு இல்லை. இதை எப்படி டீல் பண்ணலாம் என ஜோசிக்கின்றேன் என்ற போதே இந்த ஓட்டியும் எங்களை தங்க முட்டையிடும் வாத்துப் போல எண்ணிவிட்டார் என்று புரிந்தது.

ஏமாற்றங்களும் சந்தோஸமும் ஒரே மாதிரி வரமுடியுமா? என்றால் ஆம் என்று சொல்ல முடியும்!

சிவதாஸ் காரில் போனவர்கள் முன்னால் வந்த பெருந்தெருவில் பிரிந்து செல்ல குமாரின் காரில் தர்சனுடன் போனது உள்ளூரில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்தை அடையும் கிளாங்க விமானநிலையத்திற்கு.

" ..ஜீவன் நீங்க இந்த காடியில் இருங்க நான் தர்சனனை அனுப்பிவிட்டு வாரன்"

".சந்தோஸமாக போய்ச் சேருடா தர்சன் என்று வாழ்த்தியது மட்டும் தான் எங்கள் இருவருக்குமான கடைசிச் சந்திப்பு"

.ஓட்டிகள் ஆட்களிடம் பொறுப்பு கொடுப்பதுடன் சரி.

அவர்கள் விமானநிலையத்தில் காத்திருப்பது இல்லை. காரணம் இது சட்டவிரோத செயல் கையும் களவுமாக பிடிபட்டாள் எல்லாரும் மலேசியன் சிறையில் சீட்டு ஆடவேண்டும். என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

"ஜீவன் நண்பர் வீட்டில் இருங்க இந்த வாரம் உங்களை ஏற்றிவிடுவேன்.!

வரும் வழியில் இருப்பது என் பிரெண்டு தான். பேரு ஆறுமுகசாமி என்றவாரே தன் கைபேசியில் தொடர்பு எடுத்துவிட்டு அவரின் வரவிற்காக காத்திருந்தது ஒரு மெக்டொனால்ஸ் விற்பனை நிலையத்தில்.

குமாரின் நண்பர் பார்க்கும் போது தலைவாசல் விஜய் போல இருந்தார். மறுநாள் காலையில் தர்சன் ஐரோப்பா போய் விட்டான் என்ற இனிய செய்தியை பகிர்ந்தார் குமார் .

நானும்
விரைவில் போய் விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கையில் அவர் கூறிய இன்னொரு செய்தி திகைப்பில் ஆழ்த்தியது!
தொடரும்!ம்ம்ம்ம்ம்

8 comments :

Angel said...

நேசன் நலமா இருக்கீங்களா

சில இடங்களில் வலி படிக்கும்போது ..
ஒவ்வொருமுறையும் எதிர்பார்ப்புடன் முடிக்கிறீங்க

Angel said...

நேசன் யோகா அண்ணா நலமாக இருக்காரா ..

திண்டுக்கல் தனபாலன் said...

வரிகளில் வலிகள் உணர முடிகிறது...

தொடர்கிறேன்...
tm2

K.s.s.Rajh said...

ஜ ஆம் வெயிட்டிங்
அடுத்த பகுதிக்கு என்ன நடந்தது என்று அறிய

”தளிர் சுரேஷ்” said...

வலி ஏற்படுத்தும் பதிவு! தமிழராய் இருந்தும் தமிழருக்கு உதவ முடியாத வலி! கவிதை அருமை!

Anonymous said...

anna eppadi irukeenga ...


ennmo romba sogamave irukkutthu ella idamum...


வெற்றிவேல் said...

வலிகள் மிகுந்த வார்த்தைகள்...

Seeni said...

mmm....
sollunga sonthame...