19 May 2020

சினேஹாவும் சிலிர்ப்பும்!

புளிக்கவில்லையா ?
புன்னகைஅரசியின்
புலம்பல்க்காட்சி!?
புளித்தகள்ளும்,
புளிச்சல்  பணியாரமும்,
புத்துணர்ச்சி  தருவதுபோல
புத்தூரிலும்  புது  மயானம்போல
புதியமன்னர்கள்  படம்போல 
புதினம்   கேட்காத
புதியகொர்னா 
புலம்பெயர்  வாழ்க்கைபோல
புதியபாடல்   கேட்காத 
புதியவார்ப்புக்கள்   காலம்போல
புதிர்போடும்
புதிய முகநூல்நங்கையே!))!


புளிக்காத இசையானியின் பாடல்போல
புதுநெல்லும் புதுநாற்றும் படம்போல
புன்னகையின்  பின்னே
புனைபெயரில்  புதுமடம் 
புழுதிவாரித்  தூற்றினாலும்,
புதுப்பயணம்  போல
புரண்டு அழுத  காதல்  எல்லாம்
புஸ்ஸல்லாவா  வீதிபோல
புறமுதுகில்  குத்தினாலும்!
புதிய  மாஹாத்தயா,
புலத்சிங்களவில்இருந்து
புரட்டிஅனுப்பிய
புதுக்கதையிலும்!
புட்டுவைப்பேன்  பிடித்த பாடல்தாராது
புதிய  அறிவிப்பாளர் 
புன்னகையுடன்  முகநூல் வந்தாலும்,
புன்பட்ட  நெஞ்சம்!


புட்டகபர்த்தி  போனாலும்!
புதுமனிதன்  பாடல்போல
புண்ணியம்  தேடவில்லை.
புதுமாப்பிள்ளை   தேடுகின்ற
புலம்பெயர்  மாமாவும்,


புதிராதபுதிர்  போல
புன்னகைக்கும்  மரத்தில்!
புதுக்கள்ளுக்கும்.
புதுவிளக்கம் தரும்
புத்தியும்  இன்னும்
புகுந்து  கொள்ளாத  அலரிமாளிகைபோல!

புழுக்கம்   இல்லாத  அடுப்படியில்
புதிய  அலைவரிசையும்
புத்துயிர்பெற்றது!
புறப்படுங்கள்  புதிதான  வாழ்வுக்கு!
புன்னகையுடன்   
புதிய தேடல்!



(யாவும்கற்பனை)
Mm

3 comments :

putthan said...

இப்படி ஒரு எழுத்தை வைத்து பெரிய கவிதை படைப்பது என்பது மிகவும் கடினம் பாராட்டுக்கள்

vetha (kovaikkavi) said...

ஓ!...நல:ல நகைச்சுவையாக உள்ளது.
புலத்சிங்கலவில் 17 வருடங்கள் வாழ்ந்தோம்.

vetha (kovaikkavi) said...

I am also in blogspot.com