31 January 2012

விண்ணைத் தாண்டிய என் காதல் -நிறைவு

 இந்தத் தொடரின்  முன் பகுதியை இங்கே பார்க்கலாம்.http://www.thanimaram.org/2011/10/3_12.html

மற்றவர்களும் ஊர் பார்க்க வேண்டும் என்பதே நோக்கம் அன்றி தற்பெருமைக்காக அல்ல இந்தத் தொடர்!




நகரங்கள் பல கதை சொல்லும் ஒரு புரியாத புதிர் .யார் யாருக்கு துணிவு இல்லையோ !இந்தப் பட்டினம் அவனை ஒரு பரதேசியாக்கி பரிகாசிக்கும்.

 புதிய உறவுகளைத் தேடி பட்டணம் வரும் பலர் .முகம் தெரியாத ஊர்களில் பிறர் குணம் தெரியாமல் மீண்டும் கிராமத்துக்குப் போய் விடுவோமோ என்று பயத்தைக் கொடுக்கும் .

பெற்றோலின் மூச்சுக்காற்று முகத்தை மூடி நிற்கும்!
நகரங்கள் மீதான காதல் எனக்கு  சிறுவயது முதல் இடப்பெயர்வுகளினால் பல நகரங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் இருந்த பால்யகாலம் போய் !

தொழில் நிமித்தம். இலங்கையின் வடக்கு முதல் தெற்கு,  மேற்கு  என பல நகரங்களையும் 8 வருடங்கள் தினமும் ஒவ்வொரு நகரங்களை அளப்பதே வேலையாகிப் போனது.

திருகோணமலை,மூதூர்,எனவும் என் பயணம் இருந்த படியால் நகரங்கள் எனக்கு ஒரு ஈர்ப்பைத் தந்தது!

இதனால் எனக்கு ஒவ்வொரு நகரங்களில் சில நல்ல நண்பர்கள் வந்து போனார்கள்.இலங்கையைச் சுற்றிக்கொண்டிருந்த என் நகரங்கள் பார்க்கும் காதல் .

புலம் பெயர்ந்தும் சிங்கப்பூர்,தாய்லாந்து,மலேசியா,லண்டன் ,ஜேர்மனி என்று நீண்டு செல்லும் பட்டியயில் இப்போது தொடராக சென்னை ஈர்த்து வருகின்றது.

 சென்னையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த என் சுற்றுலா .

இந்த முறை கொச்சின் நகரையும் பார்க்கும் ஆசையை தூண்டியதால் ஆழாப்புலா பீச்சின் தொடர்ச்சியாக கொச்சின் நகரைப் பார்க்கப் போனோம் .

மிகவும் சுற்றுச் சூழல் துப்பரவாக இருக்கின்றது .பல தனி கட்டிடங்கள் போய் ஐரோப்பிய தேசத்தின் முறையில் தொடர்மாடிக் கட்டிடங்கள் வரவேற்கின்றது .
முக்கிய வீதியூடாக நாம் போனது கொச்சின் துறைமுகத்திற்கு .

கடலின் இன்னொரு தேசம். இயற்கையான துறைமுகத்தில் சுற்றுலாவாசிகளைக் கவர படகுகள் வட்டம் இடுகின்றது.

 பலர் குழுவாகவும் தனித்தனியாகவும் போய் வர  விசைக்கப்பல்கள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

தலைக்கு 50 ரூபாய்க்கு 1 மணித்தியாலம் கடலில் வலம் வரலாம் .

காற்று வாங்குவோரும் ,காதலியின் கைபிடித்தோரும் ,கப்பலில் கதைகள் பேசுகின்றார்கள்.
அரச அலுவலகங்களிற்கு
 தூரத்துக் கிராமத்தில்  இருந்து வந்தோர்  தம்    காரியம் முடியும் வரை அரச அலுவலகங்களில் காத்திராமல்.

 இந்த கப்பலில் வந்து கடலைப் பார்த்துச் செல்கின்றார்கள் .வழி நெடுகவும் சாஸ்த்திரம் சொல்லுவோர் கூவி அழைக்கின்றார்கள் .

இந்த கப்பலுக்கு காத்திருக்கும் பாதை ஓரம் அழகிய சோலையாக காட்சியளிக்கின்றது .

காதல்தேசத்தில் தபு  முதல் காட்சியில் நடந்து வருவதைப் போல!

 அழகிய அமைதியான கடல்துறைமுகம் பார்க்க பள்ளிக்கூட மாணவர்கள் ,மாணவிகளை குழுவாக பாடசாலையில் இருந்து அழைத்து வந்து காட்டுகின்றார்கள் ஆசிரியர்கள் .

நம் தேசத்தில் பள்ளிக்கூடத்தில் சுற்றுலா அழைத்துச் செல்வது மிகவும் குறைவு .பாதுகாப்புக் காரணங்களால்

 கப்பல்துறைமுகத்தை நாமும் சுற்றிப்பார்த்தோம் .மிகவும் ரம்மியமாக இருந்தது.

 மலையாள பாடல்களை ஒலிக்கவிட்டார் அருகில் இருந்த வானொலியைக் காதலிக்கும் ஒரு நண்பர் .

எங்கே போனாலும் எனக்கும் தாய்வானொலி இலங்கை ஒலிப்பரப்பின் ஞாபகம் கூட வருகின்றது  .

இந்த காட்சிக்கு நம் அறிவிப்பாளர்கள் என்ன பாட்டு ஒலிக்கவிடுவார்கள் என்று என்னவளுடன் ஒரு சம்பாசனை செய்தேன்.

 என்னவளோ நீங்களும் உங்கள் பாடல் ரசனையும் என்று கடலில் தள்ளாத குறையாக ஒரு பார்வை பார்த்தாள்!


அங்கிருந்து வெளியேறி பாதை ஓரம் இருக்கும்  கடைகளை நோட்டம் இட்டவாரே கொச்சின் நகரை வலம் வந்தோம் .

சேட்டன் அழகிய இனிய உணவகத்திற்கு அழைத்துச் சென்றான் .மூவரும் உணவருந்தியதும் நம் பயணங்கள் முடியும் நேரம் வந்துவிட்டது.

 சென்னை செல்லும் பஸ் நிறுத்தும் பகுதிக்கு சேட்டன் காரினைச் செலுத்தினான்.

 பல இடங்களில் வீட்டுத்தளபாடங்கள் சிறப்பு விலைக்கழிவில் மடைபரப்பி இருக்கின்றது. விரும்பியோர் வாங்கிச் செல்கின்றனர். கொச்சின் நகரங்கள் மிகவும் சுத்தமாக இருக்கின்றது ஆபரணங்கள், ஆடையகங்கள் ,உணவகங்கள் எங்கும் அதிக மக்கள் .

ஒரு உணவகத்தில் காப்பி குடித்தோம் அங்கே சேவையாளராக திபெத் இனத்தவர்  மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கின்றார்.

பாரிஸ் வந்த புதிதில் இவர்களுடன் நானும் தொழில் புரிந்திருக்கின்றேன்.

இவர்கள் தமிழகத்து உணவகங்களிலும் பல இடங்களில் பணிபுரிகின்றார்கள்!

கொச்சின் அழகில் இருந்து மீளவும் மனம் இல்லாவிட்டாலும் நம் பயணம் திட்டமிடப்பட்டவை. அதிகம் தங்குவதற்கு அடுத்த கட்ட திட்டங்கள் தடம்புரண்ட ரயில் போலாகிவிடும். என்பதால் .

தியேட்டர் பக்கம் ஒதுங்கனும் என்ற கனவு மட்டும் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. நம் இரவுப் பயணம் மீளவும் சென்னையை நோக்கி போவதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னே ஏர்ணாகுளம் பஸ்தரிப்புக்கு வந்தடைந்தோம்..


தனியார் துறையின் பேரூந்து நிறுத்தும் தரிப்பிடத்திற்கு  நாங்கள் பதிவு செய்த நிலையத்தின் காரியாலயத்தினை  சென்றடைந்தோம் .

அங்கே ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் தமிழ் நகைச் சுவைக் காட்சிகள் போய்க் கொண்டிருந்தது .

அப்போது ஒரு முக்கிய பெரியவர் வந்தார் .கையில் கணனியும் தன் காரியாலய பயணப்பையுடன்.

எனக்கு இவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் .அவர்தானா இவர் என்று சிறு தயக்கம் அவரும் என்னைப் பார்த்துவிட்டு கதிரையில் அமர்ந்து நகைச்சுவை காட்சிகளை அலைவரிசை மாற்றி மாற்றி நேரத்தைக் கடத்தினார்.

அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் கூடவே அவள் அப்பனும் நோக்கினார் என்று ஒரு கவிதை சொல்லும் .
அதைப் போல் நானும் இருந்தேன் எங்கள் வாகனம் வந்துவிட்டதை அவர்கள் கூறவும் நாமும் வாகனத்தில் ஏறும் போது அவரும் பின் தொடர்ந்து ஏறினார் யார் அவர்???

10 comments :

ஹாலிவுட்ரசிகன் said...

இனித் தான் தொடரை வாசிக்கவேண்டும்.

ப்ரைட் கலர்கள் போடுவதை கொஞ்சம் தவிர்க்கலாமே? வாசிக்க கடினமாக உள்ளது.

தனிமரம் said...

வாங்க ஹாலிவுட் ரசிகன் ஒரு பால்கோப்பி குடியுங்க முதல் வருகைக்குப் பரிசாக.ஹீஹீ
நன்றி வருகைக்க கருத்துரைக்கும் இனி வரும் பதிவுகளில் கலரினை தவிர்க்கின்றேன் சகோ.

Yoga.S. said...

வணக்கம் நேசன்!அருமையாக எழுதுகிறீர்கள்.அனுபவங்கள் சுகமானவை!நண்பர் சொன்னதுபோல் வர்ணம் தீட்டலைத் தவிர்க்கலாம்!நான் காலையில் கோப்பி குடித்து விட்டேன்,நன்றி!ஹ!ஹ!ஹா!!!!!!!!

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா..
இனி வரும் பதிவுகளில் வர்ணத்தை தவிர்க்கின்றேன். காலை எழுந்ததும் பால் கோப்பி என்று பழக்கப்படுத்தி விட்டோம் ஹீ ஹீ 
முதலில் வருவோருக்குத்தான் தனிமரம் பால் கோப்பி கொடுக்கும் தொடர்ந்து பின் வருபவர்களுக்கு எல்லாம் கொடுக்க முடியாது சார்க்கோஸி எல்லா வரிகளையும்
 உயர்த்திப் போட்டார் .ஹீ ஹீ
நன்றி வருகைக்கு ஐயா.

Yoga.S. said...

தனிமரம் said...

வணக்கம் யோகா ஐயா..
இனி வரும் பதிவுகளில் வர்ணத்தை தவிர்க்கின்றேன். காலை எழுந்ததும் பால் கோப்பி என்று பழக்கப்படுத்தி விட்டோம் ஹீ ஹீ
முதலில் வருவோருக்குத்தான் தனிமரம் பால் கோப்பி கொடுக்கும் தொடர்ந்து பின் வருபவர்களுக்கு எல்லாம் கொடுக்க முடியாது ///சார்க்கோஸி எல்லா "வரி"களையும்
உயர்த்திப் போட்டார்.////ஹீ ஹீ
நன்றி வருகைக்கு ஐயா.§§§§நீங்களும் தான் அதிகமான"வரி"கள் எழுதுகிறீர்கள்!சார்க்கோசி வரி உயர்த்தியது நுகர்வோருக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்கிறார்கள்,பார்க்கலாம்!

தனிமரம் said...

யோகா ஐயா நுகர்வோருக்கு சம்பளம் கூடினால்தானே வாங்கும் சக்தி அதிகரிக்கும் அடுப்படியில் இப்போது நாங்க ஈ ஓட்டுகின்றோம். ஹீ ஹீ .

Anonymous said...

நிறைவு என்று நினைத்தேன்...நினைவுகள் தொடரும் போல...ரசித்தேன்...நேசரே..

தனிமரம் said...

நன்றி ரெவெரி வருகைக்கும் கருத்துரைக்கும் இன்னும் சில விடயங்களை இந்த பயணத்தில் சொல்லுவேன் எதிர்காலத்தில்.

ஹேமா said...

உங்கள் அனுபவங்கள் எப்போதும் ஒரு கதையோடுதான் இருக்கிறது நேசன்.சொல்லுங்கோ அவர் யாரென்று !

தனிமரம் said...

நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும். வாழ்வு அனுபவங்கள் கதை பல சொல்லும் அதுதான் உண்மை . விரைவில் அவர் யார் என்று சொல்லுகின்றேன்.