மூத்த மாமா 1983 இன் முதற் பகுதியில் ஊருக்குத் திரும்பி வந்தார்.
அந்த நேரத்தில் தாத்தாவுடன் ,சின்ன தாத்தாவும் தந்தைக்கு உதவியாக கல்லாப் பெட்டியில் (காசுப்பெட்டி) 4 சின்ன மாமாவும் 5 சின்ன மாமாவும் இருந்தார்கள் .
. பதுளையில் 2 சின்னமாமா படித்ததும் வாத்தியார் வேலை பார்த்ததும் அந்த நகரில் பிரபல்யமான கல்லூரியில் .(இந்தக்கல்லூரி இரு மொழிக் கல்வி போன பின்
நாளில் சிங்களம் மட்டும் என முடிவானது( பிரிவினை விதைக்கப்பட்டது) .
இன்றும் சகோதர மொழி நண்பர்கள் படிக்கின்றார்கள் அங்கு . அருகில் பிரபல்யமான சினிமா தியேட்டர் இருக்கின்றது .ராகுலின் முகம் வெளிவரும் போது தியேட்டர் கனவிடயம் சொல்லும்))
மூத்தவன் வந்திட்டான் !
மணலை மீன்வாங்கியாருங்கோ மருமகனே என்று வேலைமுடித்து வந்த ராகுலின் தந்தையை ஓட்டிவிட்டா பங்கஜம் பாட்டி.
முற்றத்தில் நின்ற வெடக்கோழி சட்டிக்குள் போனது .
வேலியில் படர்ந்த குறிஞ்சாய் சுண்டல் ஆனது.
அதுவரை அடுப்பிலே சுழலும் ராகுல் அம்மாவுக்கு விடுமுறை .
தன் மகனுக்கு தான் தான் சமைப்பன் என்று மணலை மீன் குழம்பு, மீன் பொரியல் , முட்டைப் பொரியல் ,சூடமீன் சொதி .
பத்தியத்திற்கு அரைப்பதைப்போல அம்மியில் இஞ்சிச் சம்பல் அரைப்பதும் என வேகமாக சுழலும் பாட்டி.
அத்தனையும்
விறகடுப்பில் செய்து முடிக்கும் போது புழுங்கல் சோறு வெந்துவிடும்.
இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆத்தை( தாத்தாவின் தாய் ) பாக்குரலில் பாக்கு இடித்த வாறே.
உந்த எடுப்பு எல்லாம் எண்ணத்துக்கு உனக்கடி? இப்படி அவிச்சிக் கொட்டித்தான் அந்த பயல்கள் இரண்டும் சந்தி சிரிக்க வைத்து விட்டான்கள் .
எங்க பரம்பரையில் இப்படி ஒரு மானத்தை வாங்கிப் போனாங்களே! என்று பழைய கதையைக் கிளறியபோது.
மூத்த மாமா முகத்தில் வெடிக்கும் எள்ளும் கடுகும் .
உங்க வார்த்தையைக் கேட்கமுடியாமல் தான் ஐயா ஊருக்கு வராமல் இருக்கின்றார்
. அவங்கள் புரியாமல் இப்படிச் செய்த தற்கு எங்க அம்மா என்ன செய்யும் என்று பாட்டிக்கு ஆதரவாக மூத்தமகன் சண்முகம் மாமா ஒரு புறம் சண்டை போட .
என்ற மோனுக்கு (தாத்தாவிற்கு) புள்ளையை வளக்கத்தெரியல .
அவன் இல்லாத வீட்டில் நான் இருக்கமாட்டன் .என்று சொல்லி .
பொல்லு ஊண்டிக்கொண்டு வேலிதாண்டிப் போய் சின்னத் தாத்தா குடியிருக்கும் நாற்சாரம் வீட்டு முன் விறாந்தையில் .
அடியேய் செல்லம்மா
அந்த ஓலைப் பாயை கொடுண்டுவாடி. உன்ர சகளி என்னை வீட்டை விட்டு ஓட்டிப் போட்டாள்.
என்று ஒப்பாரி வைக்கும் ஆத்தை.
இது 3 மாத்ததிற்கு ஒரு முறை நடக்கும்.
ஆத்தை அங்கே போவதும் .பிறகு பாட்டி கோயில் திருவிழாவைச் சாட்டி கூட்டிக்கொண்டு வந்து விடுவா (தாத்தாவின் தாய்) இப்படி ஒரு புறம் நாடகம் நடிக்கும் ஆத்தை என்றால் !
பாட்டியின் பல்லவி இன்னொரு வகை. பொடியங்களை மயக்கிப் போட்டாளே .
படுபாவிகள் நாசமாகப் போவாள்கள் .என்று முற்றத்து மண் அள்ளி தூற்றிய போது .!
அப்பாவின் மடியில் இருந்து
அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல் .
.அத்தனையும் நடக்கும் போது அந்த வீட்டில் ஒரே ஒப்பாரி. அதைக் கேட்டு அடுத்த வளவில் இருக்கும் மூத்தமாமியின் தாய் முத்தாச்சி வேலிதாண்டி ஓடிவாந்தா !
மூத்தமாமியின் தாய் ( தாத்தாவின் தங்கைகளில் மூத்தவர் )
அந்தக் கிராமத்தில் மச்சாளைத் தான் மச்சான்கள் முடிப்பது நடை முறை மாமன் மார்களும் தங்கள் வீட்டுக்கு மருமகள் ஆக்குவது தன் தங்கையின் மகள்களை தான்.
வெளியில் பலர் சொல்லுவார்கள் சொத்து போய் விடும் என்றுதான் தீவான்கள் இப்படி செய்கின்றார்கள் .என்று உண்மை அதுவல்ல .
உறவுகள் சூழ்ந்து இருக்கும் போது உதவி இருக்கும்., ஒட்டு இருக்கும், சண்டை போட்டாலும் நாலு சபையில் ஒன்றாக பந்தியில் இருப்பார்கள் என்று பின் நாளில் ராகுலின் அண்ணனுக்குப் புரிந்தது..
.ஆத்தை அடுத்த வீட்டுக்குப் போனதும்
வேலிதாண்டி ஓடிவாந்த மூத்தமாமியின் தாய் ..
என்ன மருமகன் சண்முகம் பிரச்சனை.?
ஒன்றும் இல்ல மாமி .
என்றுவிட்டு மாமா எழும்ப்பிப் போனார்.
கோடியில் இருந்த சைக்கிளை எட்டி ஒரு தட்டுத் தட்டினார் .
வாடா மாப்பிள்ளை என்று ராகுல் அண்ணன் யோகனை கூட்டிக் கொண்டு போனர் .
நாங்க பாக்கியம் பாட்டி வீட்ட போறம் .. (பாக்கியம் தாத்தாவின் பெரிய தாய் )
என்றதும் .
ஊர் சுற்றும் மருமகன் தந்தையின் மடியில் இருந்து இறங்கி ஓடிப்போய் ஏறிக் கொண்டான்.
.ரல்லி சைக்கில் முன் பாரில் மாமாவுடன் போறது என்றால் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம் .
காற்றினைக் கிழித்துக் கொண்டு அவர் ஒட்டும் வேகத்திற்கு யோகனின் தந்தையும் சரி கடைசி 9 மாமாவும் சரி ஈடு கொடுக்க மாட்டினம்.
அதைப் பார்த்துக் கொண்டு இருந்தான் தாயின் சேலைத் தலைப்பில் ஒளிந்து நின்ற ராகுல்.
.
.என்ன மச்சாள் பேசாமல் இருக்கிறீங்க? மருமகன் ஊருக்கு வந்திருக்கும் போது அவனுக்கு வாய்க்கு ருசியா என்ற மோள் சமைப்பாள் தானே ?
நீங்க ஏன் இங்க சாப்பாடு சமைக்கின்றீங்க ?
என்று மச்சாளான பாட்டி மீது கதை கொடுத்தா முத்தாச்சி!
அவன் அங்க வாய்க்கு ருசியா சாப்பிட்டிருக்க மாட்டான்
.என்ற மூத்தவனுக்கு இன்று நான் சமைக்கின்றன் .நாளை மருமகள் சமைக்கட்டும் என்று தன் சேலையில் மூக்கைச் சீறீய படி பங்கஜம் பாட்டி கிணற்றடிக்குப் போனா........
வருவான் முகம் தொலைத்தவன்......

18 comments :

அருமையான நினைவுகள்..
அண்ணே தொடர் அருமையாக செல்கின்றது.எளிதாக ராகுல் பற்றிய அறிமுகம் இருக்கலாமே ஏன் அவரின் தாத்தா காலத்து கதைகள் எல்லாம்?இது தொடரினை மிகவும் நீட்டிச்செல்லும் என்பது என் கருத்தாக இருக்கின்றது ஒருவேளை அதில் ஏதும் விடயங்கள் இருக்கோ?அப்படி இருந்தால் சரி.
அருமை தொடருங்கள் தொடர்கின்றேன்
வாருங்கள் இராஜராஜேஸ்வரி அம்மா முதல் பால்கோப்பி உங்களுக்குத்தான்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும். சில உறவுகள் முகத்தை (தாத்தாவின் )முதலில் சொல்லிவிட்டால் ராகுலின் இனி வரும் செயல்களின் உண்மைத்தண்மை அறிந்து கொள்ள பெரிந் தேவை புரியும். அதுவரை பொறுமை மக்கா. ஹீ ஹீ
கதையோடும் படங்களோடும் ஒன்றி விட்டேன் அங்கேயே இருந்த மாதிரி இருந்தது அருமை தொடருங்கள்
வநக்கம் நேசன்!ச்சே,இண்டைக்கும் கோப்பி ஆரோ ராசேஸ்வரிக்காம்!கத நல்லாப்போகுது நேசன்!கொஞ்சம் அவசரமாக தட்டுவீர்களோ?அங்கங்கே பிசிறு................எழுத்தில் மாமன்மாரைக் குறிக்காமல் இலக்கத்தில் குறிப்பதால்.................!?
நன்றி சசிக்கலா வருகைக்கும் வாழ்த்துக்கும் .
வணக்கம் யோகா ஐயா.
இனிவரும் தொடரில் மாமாக்களின் பெயர்கள் வரும் .இதுவரை அவர்களுக்கு புனை பெயர்களைக் கொடுத்தால் தொடரில் வரும் பதுளையில் பகுதியில் இருந்து வாசிக்கும் ஒரு உறவு கல் எறியும் என்ற பயத்தில் இலக்கைத்தை தந்திருந்தேன் .அதையும் தாண்டி அடுப்பில் கோழி ஆக்கனும் அடிக்கடி வரும் முதலாளிக்கு தண்ணி காட்டனும் என்ற அவசரம் ஒருபுறம் . ஹீ ஹீ இதையும் தாண்டி வரனும் தனிமரம். அவசர உலகம் பாரிஸ் .இந்த ஒப்பாரியை ஒரு பதிவாக்கனும் பார்ப்போம். ஹா ஹா.

பரவாயில்லை நேசன்!தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டியது என் கடமை என நினைப்பதால் கொஞ்சம் அதீத உரிமை எடுத்துக் கொண்டேனோ என்று................புலம்பெயர் வாழ்வு புரியாதது அல்ல.

//
யோகா ஐயா உங்களுக்கும் செங்கோவி அண்ணாச்சிக்கும் என்றும் அந்த அதீ உரிமையுண்டு என்னை தட்டிக்கொடுக்கவும் மெருகூட்டவும் நேற்று பதிவை எழுதும் போது கொஞ்சம் வேலைப்பளு அதையும் தாண்டி சிலவிடயங்களை எழுதும் போது அடிக்கடி வரும் எழுத்துப்பிழையை சரி செய்ய முடியாமல் திண்டாடுவதைத் தான் இன்னொரு பதிவில் சொல்வதாகச் சொன்னேன் . மனசு சஞ்சலம் ஆகும் வண்ணம் சின்னவன் ஏதாவது சொன்னால் பெரியவர் நீங்கள் கோபிக்கலாமா. முருகனுக்கு இன்று விசேஸம் பதிவு போடக்கூட முடியவில்லை. போவோம் பழனிக்கு ஹீ ஹீ தைப்பூசம்.
நல்ல தொடர்..இப்பொழுதுதான் படிக்க நேரம் கிட்டியது.நன்றி.
நன்றி குமரன் தொடர்ந்து கருத்துக்களுடன் வாருங்கள்.
உறவுகளோடு பிணைந்து உணர்வோட்டமான தொடர்.அந்தச் சூழ்நிலையில் நானும் இருப்பதுபோல இருக்கு நேசன்.படங்கள் மலையகத்து என் நினைவுகளைக் கொண்டு
வருகிறது !
அருமையான நினைவுகள் நேசன்...தொடருங்கள் தொடர்கின்றேன்...
நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும் மலையகம் என்று இனிய சுகமான கதைகள் சொல்லும் இடம்.
நன்றி ரெவெரி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் தொடரும் ஆதரவுக்கும்.
நிறைய கதாபாத்திரங்களுடன் பெரியதொரு குடும்பத்தில் நடைபெறும் சம்பவங்களை அப்படியே கண்முன் கொண்டுவருகிறீர்கள்.
Post a Comment