தெரிந்தவர்களை கண்டுவிட்டு காணாதவர் போல போவது சிலரின் குணம் .அவருக்கும் ஆயிரம் சோலி இருக்கும் என்று அவரைப் பற்றி மனதளவில் புறம் பேசுவோரும் நம்மில் உண்டு! அதுபோலவே !
என்ன ரகு ?பார்த்தும் பாக்காதது போல போறீங்க! அதே பாசத்துடன் கூடிய ஏக்கம் கலந்த தொனியில் கேட்டாள்.

பஞ்சாயத்தில் நிற்கும் சின்னக்கவுண்டர் விஜய்காந்து போல அவன் நிலையை எண்ணி கையை விடுங்க சுகி .
"யாரும் பார்த்தால் என்ன நினைப்பினம்.நீங்க அங்கால வாங்க கதைக்கலாம் என்று அன்னதான மண்டபத்தின் பின் இருப்பது கோயிலுக்கு சொந்த மான பூந்தோட்டம் ."
காலை மாலை பூஜைக்கு பூக்கள் தரும் நந்தவனத் தெரு என்று நண்பர்கள் சொல்லும் .பின்புறமாக அவளை அழைத்துச்சென்றான்.

அவனைபார்த்ததும் வான்கதவு திறந்த மூன்றாம் வாய்க்கால் போல தேம்பித் தேம்பி அழுதால் .
அழாதீங்க சுகி யாரும் பார்த்தால்என்னையும் வட்டுவாய்க்காலில் பச்சை மட்டை அடிவாங்க வழி செய்துவிடுவினம்! அப்புறம் பிரச்சனையாகிவிடும்

அழாமல் என்ன செய்ய சொல்லுறீங்க ரகு ?,என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாமல் போயிட்டீங்களே போராட்ட களத்திற்கு.அவ்வளவு நான் தகுதியில்லாதவளாகப் போயிடேனா?
கதைக்காதீங்க ரகு என்று அவன் கன்னத்திலும் ,மார்பிலும் மாறி ,மாறி காதல் போதையில் அடித்தாள்.
பின் திருமாலின் திரு மார்பில் சாய்ந்த ஶ்ரீதேவி போல அவன் மார்பில் அப்படியே சாய்ந்து கொண்டாள். ரகுவும் அவளை தடுக்கவில்லை ஆற்றுப்படுத்த முன் அவள் கோபம் தணியட்டும் என்று சிறுது நேரத்தின் பின் சொரி ரகு ஏதோ கவலையில் அடித்துவிட்டேன் .வலிக்குதா ?என்று பூமழை பொழிகின்றது பட நதியா போலஅப்பாவியாக கேட்டாள்.
அவன் மார்பில் சாய்ந்த படியே.உள்ளமே என் கோயில் உன் உடல் அல்ல என்ற நிலைஅவளிடம்.

விடுங்க சுகி என்று சாய்ந்து இருந்தவளை விலக்கிவிட்டு ரகு சொற்பொழிவுக்கு வரும் பேச்சாளர் சோடா குடித்துவிட்டுப் பேசுவது போல பேசத்தொடங்கினான்.
இன்னும் என்னை நினைச்சுக்கொண்டு இருக்குறீங்களா சுகி??
.நான் அப்ப சொன்னதைத்தான் இப்பவும் சொல்லுறேன். உங்களை என்னால் விரும்ப முடியாது.
இன்றைய நம்தேசத்தின் நிலையை நினைச்சுப்பாருங்க ??எந்த நேரம் என்ன நடக்கும், யார் உயிர் எப்ப போகும் எங்கு இருந்து விமானக்குண்டுவீச்சு வரும் எந்த வழியால் இராணுவம் முன்னேறும் என்றும் தெரியாத பயப்பிராந்தியில் மக்கள் !

வாழ்வாதாரங்கள் எல்லாம் யுத்த முனைப்பின் பலனாக மூடிய நிலையில் வாழ்வே போராட்ட சூழலில் யார் ?யார் மரணிப்போம் என்று தெரியாத நிலையில் ஏன் இந்த காதல்???
இந்த ஊரில் எத்தனையோ பேர் காதலித்து இருப்பார்கள். பின் பிரிந்து தேசத்துக்காக போய் கல்லறையில் வித்தாகிப் போனவர்கள் பின் எழுதக்கூடிய நம்பகத்தன்மையான நாவல்களாகக் கூட இருக்கலாம் .
இது எல்லாம் யார் அறிவார் ??எங்கள் மண் இன்னும் பல சுவையான, சுகமான ,சோகமான வரலாற்றை என்றாவது காலச்சரித்திரத்தில் பதிவு செய்யலாம்!இது எல்லாம் நாம் பலருக்கு சொல்லவேண்டிய விடயங்கள்.
இந்த நிலையில் தான் போராட்ட களத்திலும் சிறப்பாக இயங்கும் இலக்கியம் நெஞ்சங்களுக்கு பாராட்டு விழா ,பொற்கிளி என்று எல்லாம் நம் தலமை ஊக்கிவிக்கின்றது .
நானும் எழுதும் ஆர்வத்தில் இருக்கின்றேன் அன்பைத்தேடும் தனித்தீவு போல இப்போது இல்லை புரிஞ்சுக்க சுகி!

நீ மாறவே மாட்டியா ரகு சற்று உரிமையுடன் கேட்டாள்.இல்லை சுகி என் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படித்தான் நடக்கும்.அதே போல உங்கள் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன் படிதான் நடக்கும்.
ஆமா ஏ.எல்(உயர்தரம்)என்ன பாடம் படிக்கிறீங்க என்று பேச்சை மாத்தினான் ரகு.
மெட்ஸ்(கணிதப்பிரிவு) படிக்கிறன்.
அப்ப இஞ்ஜினியர் தான் போங்க !!
"நம்நாட்டுக்காசில் படித்து பட்டம் பெற்றுவிட்டு வெளிநாட்டில் போய் வேலை செய்யப் போறீங்க .அப்படித்தானே.???
அங்கே போய் நம்மண்ணில் இருந்து வருவோர் மனித வலுவில் வேலைக்கு வருபவர்களிடம் .திமித்தனத்துடன் கோப்பை கழுவ வந்தனீயா ??என்றும் குப்பை கூட்ட வந்தனீயா ??என்றும் குதர்க்கம் பேசப்போறீங்களாக்கும் என்று ரகு சொல்லவும்.

சோர்ந்து போயிருந்த அவள் முகத்தில் ஒரு புன்னகையை உதிர்ந்தாள் நீங்கள் எப்போதும் அமைதிப்படை சத்யராஜ் போல் ஜொல்லுப் பாட்டிதான் !
உங்களுடன் கதைச்சிக்கொண்டு இருந்தால் எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா? ரகு என் கூடவே நீங்க இருந்தா எப்படி இருக்கும்.!
ஓக்கே சுகி நான் வீட்ட போகணும் !
ஓக்கே சுகி நான் வீட்ட போகணும் !
நாளைக்கு போராட்டகளத்துக்கு மீண்டும் போகப்போறேன் என்று ரகு அவளிடம் சொல்ல. மீண்டும் வேலைக்கு போகும் தாயைப்பிரிந்து செல்லும் குழந்தை போல அழத்தொடங்கினாள்!
தொடரும் விரைந்து!!!!!!
//
தொடரும் விரைந்து!!!!!!
//
வட்டவாய்க்கால்-வன்னியில் சமூகவிரோத செயல் என்றால் தீர்ப்பு அங்குகிடைக்கும்!
14 comments :
mmm...
thodatkiren....
வாங்க சீனி அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாழ்வாதாரங்கள் எல்லாம் யுத்த முனைப்பின் பலனாக மூடிய நிலையில் வாழ்வே போராட்ட சூழலில் யார் ?யார் மரணிப்போம் என்று தெரியாத நிலையில் ஏன் இந்த காதல்???//
தமிழன் தமிழன் என்று குரல் கொடுக்கும் மானமுள்ள தலைவனுக்க இங்க ஒன்னுக்கு மூணு நாலு காதல் செய்து ஒளித்து வைத்து வாழுகிறான் சந்தோஷமாக, ஆனால் தமிழர்களின் வலிகளை இவர்கள் புரிந்து கொள்ளாமல் நாடகம் ஆடும் விந்தையை என்னான்னு சொல்ல...!?
யாழ்ப் பாண நடை இனிக்குநடை!
நலமா நண்பரே!
யுத்த முனையில் கூட காதல் போட்டி போடுகிறது யாழ்ப்பான நடை எழுத்துக்கு அழகு சேர்க்கிறது. நல்லா இருக்குங்க.
அங்கங்கே பாடல் வரிகள் இனிக்கின்றன...
ஆவலுடன் தொடர்கிறேன்...
பகல் வணக்கம்,நேசன்!நலமா?நன்றாகப் போகிறது,வலி!
வலியிலும் சுக வலி படம் உயிர்குழிகளில் பிள்ளைகள் அல்லவா இருகிறார்கள் அய்யோ ......
தூக்கத்தை தொலைத்தேனே
வாழ்வாதாரங்கள் எல்லாம் யுத்த முனைப்பின் பலனாக மூடிய நிலையில் வாழ்வே போராட்ட சூழலில் யார் ?யார் மரணிப்போம் என்று தெரியாத நிலையில் ஏன் இந்த காதல்???//
தமிழன் தமிழன் என்று குரல் கொடுக்கும் மானமுள்ள தலைவனுக்க இங்க ஒன்னுக்கு மூணு நாலு காதல் செய்து ஒளித்து வைத்து வாழுகிறான் சந்தோஷமாக, ஆனால் தமிழர்களின் வலிகளை இவர்கள் புரிந்து கொள்ளாமல் நாடகம் ஆடும் விந்தையை என்னான்னு சொல்ல...!?
29 March 2013 17:06 //ம்ம் உண்மை தான் மனோ அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
யாழ்ப் பாண நடை இனிக்குநடை!
நலமா நண்பரே!
29 March 2013 19:13//நன்றி புலவரே வருகைக்கும் கருத்துக்கும் நாம் நலம் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.
யுத்த முனையில் கூட காதல் போட்டி போடுகிறது யாழ்ப்பான நடை எழுத்துக்கு அழகு சேர்க்கிறது. நல்லா இருக்குங்க.//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் பூந்தளிர்!
அங்கங்கே பாடல் வரிகள் இனிக்கின்றன...
ஆவலுடன் தொடர்கிறேன்...
30 March 2013 00:42 //நன்றி தனபாலன் சார் வ்ருகைக்கும் கருத்துரைக்கும்.
பகல் வணக்கம்,நேசன்!நலமா?நன்றாகப் போகிறது,வலி!
30 March 2013 03:27 /வணக்கம் யோகா ஐயா நான் நலம்!ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வலியிலும் சுக வலி படம் உயிர்குழிகளில் பிள்ளைகள் அல்லவா இருகிறார்கள் அய்யோ ......
தூக்கத்தை தொலைத்தேனே
30 March 2013 07:43 //ம்ம் என்ன செய்வது தூக்கம் தொலைத்தவர்கள் ஈழத்தவர் பலர் தோழி!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment