22 March 2013

விழியில் வலி தந்தவனே -14




நாரணன் நம்பி வருவானா? நான் அவனுக்கு மாலை சூட்டுவேனா ?நான் வணங்கும் கடவுள்போல என் 
நாயகன் அவன் முகம் மீண்டும்  ஒரு முறை பார்க்கமாட்டேனா ,என்று சுகி ஏங்கிக்கொண்டு இருந்தால். விதியின் கட்டளையில் பயணிக்கும் சாமனிய மனிதர்களால் விதியினை மீறமுடியுமா?தலைவிதியை மாற்றமுடியுமா ??இந்திரலோகத்தில் அழகப்பன் போல நம் தலையில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும் .என்று விதியின் மேல் பாரத்தை போட்டுவிட்டு காத்திருந்தாள் சிறைச்சாலை படத்தில் தபூ போல!


காதல் என்ற சொல்லின் அர்த்தம் 
என்ன என்று அறிய வைத்தவன் நீ
என் நுரையீரல்களில் சுவாசமானவனே
இதய நாளங்களின் நாட்டியமாடியவன்

உயிர்த்துளி உன்னை சேர துடிக்கும் போது
ஒரு துளிஅன்பை கூட தர மறுப்பது நியாயமா?இலங்கை  சட்டமூலம் 13 வது சரத்துப்போல!
நாணம் விட்டு சொல்கின்றேன் அன்பே
என் பெண்மனம் உன்னை தினம் சமாதானத்தை யாசிக்கும் தமிழச்சிபோல அழைக்கின்றது.
உன் அன்பில் அது ஆயுள் கைதிபோல அனுபவித்து சாக துடிக்கின்றது.

என் கண்கள் சிந்தும் கண்ணீரில் கூட
உன் மேலான நேசம் தான் இருக்கின்றது!
புரிந்துகொள்ளடா என் யாசிப்பை 
ஒர் நாள் ஏனும் உன்னோடு வாழபிரியாத
வரம் கொடு தென்னவனே!

இப்பிறப்பில் என் இதயம் நுழைந்தவன் நீதான்
இங்குமட்டும் இல்லை !
இந்த பூமியில் எங்கும் சொல்வேன் நீ என்னுடன் இருந்தால். 
இணையத்திலும் 
இந்தக்காதல் இசைமீட்ட
 இதயராகம் காற்றில் வருவது போல விரைந்து வா. !


 சுகியின் சுவாசத்தை சுவாசி .
என் உயிர் நீதானே என்பாயா?
 என் இதய ஏட்டில் 
உருகிப்போகின்றேன் .
ஒவ்வொரு வீரச்சாவிலும் உன் பெயரைப்போல
 இன்னொரு உருவம் ஈழத்தில் வித்தாகிப் போவதில் .
நானும் வீழ்ந்தேனே !
வீரம் விளைந்த மண்ணில் 
விவசாயிமகன் வீழியில்
விதியது போர் என்றது 
விடியலை நோக்கி நீ
நானும் !
வீதியில் நிற்கின்றேன்

.ஒரு விடியல் வருமா?
 மஞ்சல் கயிறு நீ கட்ட 
விடியும் ஒரு பொற்காலம் வீட்டில் மட்டுமா?

வீதியில் ,ஊரில், நாளு பேர் ,நம் உறவை
விளம்பரத்துடன் வீதிகடந்து .
நாயாறு கடந்து
நல்ல சந்தோஸம் காண்போமா ?
சர்வதேசம் என்று ஊர் சுற்றி!
நாம் மட்டும்
விதியின் கையில் நாதியற்ற  தமிழர் ஆவோமா நல்ல தீர்வு கிட்டவில்லை .
நாம் பார்த்த ச்ர்வ்தேச் அனுசரனையில் ஆலவட்ட சமாதான
நாடகத்தில் என்று நம்மை நாமே நொந்து கொள்வோமா ???
நாட்டுக்காக போராடாப்போனவனே !நல்லவனே !!
நமக்கு மட்டும் இந்த
 நாட்டில் விடியல் எப்போது என்று
நானும்சுயநலத்தில் சுருண்டு போகின்றேன் !

.உன்னோடு வாழும் ஆசையில் ஆமி சுட்டாலும் 
உன் முன்னால் வீழ்ந்து போகணும் பாடையில் ,போகாமல் ,புதைக்கவும் முடியாமல்,எரிக்கவும் முடியாமல் ,இனவாத போர் பார்த்துப் புலம்புவாயா ??
எங்காவது புலம் தாண்டி வாழ்வாயோ ?
என்று நான் எல்லாம்  சிந்திக்க வைத்தவனே!



 மீண்டும் சந்திப்போனே??????
உன்னை நிந்திப்பேனா நினைவில் என்றும் நீயடா
நெருப்பில் என் நினைவுகள் சுடுகின்றது.
நாட்குறிப்பில் சிந்தும் விழிநீரும்
விடைகிடைக்குமா என்றல்லவா 
விளித்து நிக்கின்றது!

  ( சுகியின் நாட்குறிப்பில் இருந்து)



8 comments :

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஒரு விடியல் வருமா?
மஞ்சல் கயிறு நீ கட்ட
விடியும் ஒரு பொற்காலம் வீட்டில் மட்டுமா?///

விடியல் வந்துதோ? ஆவலை அதிகமாக்கிட்டீங்க...

பொற்காலம்.. மறக்க முடியாத படமும் பாடல்களும்.

திண்டுக்கல் தனபாலன் said...

/// இலங்கை சட்டமூலம் 13 வது சரத்துப்போல! ///

ரசிக்க வைக்கும் வரிகள் பல... இணைத்துள்ள பாடலும் அருமை...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///உவமானங்களுடன் விழியில் வலி.................. வாழ்த்துக்கள்!

பூ விழி said...

.உன்னோடு வாழும் ஆசையில் ஆமி சுட்டாலும்
உன் முன்னால் வீழ்ந்து போகணும் பாடையில் //,
திக்கற்ற துக்கதிலும் காதலின் தாகம் ..........என்று தணியும் ......

தனிமரம் said...

ஒரு விடியல் வருமா?
மஞ்சல் கயிறு நீ கட்ட
விடியும் ஒரு பொற்காலம் வீட்டில் மட்டுமா?///

விடியல் வந்துதோ? ஆவலை அதிகமாக்கிட்டீங்க...

பொற்காலம்.. மறக்க முடியாத படமும் பாடல்களும்.

22 March 2013 15:30 //வாங்க அதிரா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இலங்கை சட்டமூலம் 13 வது சரத்துப்போல! ///

ரசிக்க வைக்கும் வரிகள் பல... இணைத்துள்ள பாடலும் அருமை...

22 March 2013 19:11 //நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

24 March 2013 13:04

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///உவமானங்களுடன் விழியில் வலி.................. வாழ்த்துக்கள்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

24 March 2013 13:04

தனிமரம் said...

உன்னோடு வாழும் ஆசையில் ஆமி சுட்டாலும்
உன் முன்னால் வீழ்ந்து போகணும் பாடையில் //,
திக்கற்ற துக்கதிலும் காதலின் தாகம் ..........என்று தணியும் ......

23 March 2013 04:35 //நன்றி பூவிழி வருகைக்கும் கருத்துரைக்கும்.