27 April 2013

அந்தநாள் ஞாபகம் -10


வணக்கம் உறவுகளே நலமா??

அந்தநாள் ஞாபகம் ஊடாக  திரையரங்களில் ஒவ்வொரு பல்லிலும் சிரித்த காலத்தை அசைபோடுகின்றேன் உங்களுடன்.

 அதில் பார்த்ததில் பிடித்த படம் , அதன் பாடல் ,தாண்டி அந்த அந்த ஊரில் எல்லாம் ஒரு வழிப்போக்கனாக என் விற்பனைப்பிரதிநிதிப்பயணத்தில்  போன பாதையில்!


 விழியில் வலி இல்லை ,முகம் தொலையவில்லை, யாரைப்பார்த்தும் உருகவில்லை காதலியே என்று:)))


நொந்துபோகவும் இல்லை விடலைப்பையனாக :))))!

முதல் வேலைகிடைத்த போது   விண்ணுக்கும் மண்னுக்கும் குதித்த காலத்தில் எந்த உள்குத்தும் இல்லை மனதிலும் உடலிலும்:))) !


காலத்தின் கோலம் கடல் கடந்து வந்தலும்!கொஞ்சம் வார இறுதி  தொடங்கும் வெள்ளி மாலையே நண்பர்கள் சகிதம் சினிமா திரையரங்களில் விசில் ஊதுவோம் ஜாலியாக அப்போது கட்டுப்பாடு இல்லாமல் காரணம்  வேலைத்திமிர்:)))!

அது 1999/2000  அப்போது எல்லாம் எந்த தலையீடும் எனக்கு இல்லை சுதந்திரப்பறவை .

நண்பர்கள் சேர்ந்தால் எந்த படம் முதலில் பார்க்கலாம் என்று ஒரு குட்டி நீயா ?நானாவே ,நடக்கும் மும்மொழி பேசும் கொழும்பு சூழலில்.

 முந்துவது எப்போதும் தமிழ்ப்படம் பார்ப்போம் என்று போகும் காசு எல்லாம் கவலையில்லாத நாட்கள்:))))

அப்போது தான் மருதானை சினிசிட்டி குளிர் ஊட்டப்பட்ட பல்தொகுதி ,பார்க்கிங் வசதியும், பல்கனி வசதியும் ;கொண்ட பார்வையாளர்களை ஈர்க்கும் வண்ணம் உருவாக்கப்பட்டது .

இந்த சினிசிட்டியில் முதலில் வந்த தமிழ்ப்படம் இந்தப்படம் .

இலங்கையில்தான் ஹிட்சு அதுக்கு இந்தப்பட நட்சத்திரங்களை இலங்கைக்குஅறிமுகவிழாவுக்கும் மற்றும் அதனோடு விளம்பர விடயங்களுக்கும் வந்து சென்றார்கள் என்பதும் பதிவுக்குரியது .அவர்களை நேரில் பார்த்தேன் என்பதும் இன்றும் சந்தோஸம்!ஹீ ஆனால் செலவுக்கணக்கு எல்லாம் வேண்டாமே!ஹீ!

அப்போது இருந்து இந்தப் பாடல் எனக்கு அதிகம் பிடிக்கும்.

இந்தப்படம் என்னோடு சேர்ந்து பார்த்த ஒரு நட்புக்களின் கடந்தகால நினைவுகளை மீட்கும் காதல் ராகம் சொல்லும் ஒரு தொடர் உங்களை நாடிவரும் விரைவில்!

இதன் முதல் பதிவுகளில் இதுவும் படிக்கலாம்!http://www.thanimaram.org/2013/02/7_7281.html.

தொடரும் அந்தநாள்  ஞாபகம்.....!

8 comments :

MANO நாஞ்சில் மனோ said...

பாய்ஸில் பாய்ஸ் படம் பார்துருக்கீங்க சொல்லுங்க சொல்லுங்க...

Seeni said...

mmm....!

sollunga....!

கரந்தை ஜெயக்குமார் said...

மலரும் நினைவுகள் அருமை

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
நலமா??

மகேந்திரன் said...

மறக்க முடியுமா அந்த தருணங்களை...
சிறகு விரித்து சிட்டாக பறந்த
காலங்கள் அல்லவா..
அருமையாக தொடுத்திருக்கிறீர்கள்.

Unknown said...

வணக்கம்,நேசன்!நலமா?///இனிமையான நாட்கள் அவை,மீண்டு(ம்)வராது!

முற்றும் அறிந்த அதிரா said...

என்னதான் நடந்தாலும், சுனாமியே வந்தாலும் ஸ்நேகாவை விடுவதாக இல்லைப்போல:)..

மறக்கமுடியா நினைவலைகள்..

reverienreality said...

நலமா நேசரே....மலரும் நினைவுகள் எனக்கும்...தொடருங்கள்...