03 July 2013

என்னுயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-10


கருத்துப் பிறள்வுகள் வரும் போது அதனைக் களைவதுக்கு உரியவர்களுடன் பேசுவதே சிறப்பான விடயம் எனலாம் .இல்லையோ சர்வதேச அனுசரனையில்  பேச்சுவார்த்தை என்று வேடதாரிகளிடம் நம்பிப்போய் கடைசியில் நட்டாட்டில் விடப்பட்ட நம் இனம் போலத்தான் ஏற்படும் என்ற வரலாற்றைப் பார்த்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கைப்பாதையில் சேகரும் ஐராங்கனியிடம்  பேசமுன் ஒரு கணம் சிந்தித்தான் !


மீண்டும் மிரூனாவுக்கு அழைப்பு எடுக்க.

என்ன இருந்தாலும் சேகர் அண்ணாவுடன் சண்டை போட்டு இருக்கக்கூடாது .ஏற்கனவே அவரு பிடிவாதம் என்றாள் பிடித்தவர்கள் சாவு வீட்டுக்குக்கூட கோல் எடுக்க மாட்டார் .அப்படி ஒரு இரும்பு மனுசர்!!

 என்றாலும் குணத்தில் அவர் எனக்கு தங்கம் தான் .

பாபு மீதான  கோபம் அவர் பக்கம் திரும்பி விட்டது .மீண்டும் எடுப்பாரா அழைப்பு ??என்று காத்து இருந்தாள் !

அதே நேரம் கோபம் தணிந்து கொழுந்து இலை போல சிரிக்கும் அவள் முகம் நினைவில் வர மீண்டும் அழைப்பினை எடுத்தான் சேகர் .

ஹாலோ மிரூனா என்னாச்சு?
சாரி சேகர் அண்ணா
!என்னால் எல்லாம் உங்களைப்போல பிடிவாதம் பிடிக்க முடியாது !

ம்ம் தெரியும் !
அதுக்காக நான் பிடிவாதக்காரன் இல்லை !

பிரியம் வைத்தவர்கள் பிடிக்காத செயல் செய்தால் தலைவரின் செயல் பிடிக்காமல் தனிக்கட்சி தொடங்கும் தொண்டன் போலத்தான் தனிவழியில் நடைபயில்வேன் .

அது நமக்குப்பிடிக்காதவங்கள் திமிர் பிடித்தவன், எல்லாவற்றையும் மறந்திட்டான் என்றாள் நான் என்ன சொல்ல?

சரி அதைவிடு அடுத்த ஆட்சி நம் ஆட்சி என்று ஏங்கும் எதிர்க்கட்சிக்காரன் போல இருந்துவிட்டுப்போறனே:))


இப்ப சரி சொல்லு என்ன தான் கருத்துப்பிழை பாபுவுடன்!

அண்ணாவுக்கு நம் காதல் முதல்ச் சந்திப்பு நினைவு இருக்கா ?

எந்த திரையரங்கில் என்று சொல்லுங்க ,எந்தப்படம் ,நாம எத்தனை மணிக்காட்சி என்று தெரியுமா ??

ஹீ என்ன எனக்கு தண்ணியில் நிதானம் இல்லை என்று  பரீட்சித்துப்பார்க்கின்றாயோ??
ஹீஹீ !

நான் பனங்காட்டு நரி ஆத்தாடி எங்க கம்பனியில் என் விற்பனையின் ஊழல்  என்று என் உயிர் அதிகாரிகாரி ஊத்திக்கொடுத்து விசாரித்த போதும் உண்மை இல்லை அது சினிமா கிசுகிசு போல அப்படிப்போட்டால் தானே!
பத்திரிக்கை விற்பனை  ஆமோக விற்பனை ஆகும் என்பது போல அவருக்கே தண்ணி காட்டி என் விற்பனைத்திறன் என்ன என்று சொல்லாத என்னிடம் நீ கேட்கின்றாய் நினைவு இருக்கா என்று??

என் பாட்டி சொல்லுவா காவோலை  உதிர  குருத்தோலை சிரிக்கும் என்று! இருந்தாலும் நீ என் நாட்குறிப்பில் நான் எழுத மறந்தாலும் என் நினைவு மீது குண்டு போட்டு விட்டாய் நவாலியூர் சேச்சில் இலங்கை விமனப்படை போட்ட குண்டுபோல!

சேகரின் நினைவுகள் செந்தூரப்பூவே படம் போல மீண்டும் அசைபோடுகின்றது! 1999!



  தொடரும்!

14 comments :

MANO நாஞ்சில் மனோ said...

செந்தூரப்பூவே படத்தை திகிலுடன் அமர்ந்து பார்த்ததுண்டு, அதுவும் சண்டை காட்சிகளில் புதுமை, வில்லியின் நடிப்பு, அழகு என்ற அடியாளின் குற்றாலம் துண்டு என்று, ஆபாவாணன் படம்னு நினைக்கிறேன்.

நிரோஷாவை நினைத்து இப்போதும் மனம் கலங்குவது உண்டு அப்பிடி ஒரு நடிப்பு...!

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

தொடர்கிறேன்...

sathishsangkavi.blogspot.com said...

மிகவும் ரசிச்ச பாடல்... நிரோசாவின் அழகு... ம்ம்ம்ம்...

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///அந்தப் பிடிவாதக்காரன்..........ஹ!ஹ!!ஹா!!!///அந்தப் படத்தில்(செந்தூரப் பூவே)அவர்கள் இருவருமே(ராம்கி&நிரோஷா) தங்கள் உண்மைக் காதலை வெளிப்படுத்தினார்கள்!நாங்க தான் கண்டுக்கல!!!!

Anonymous said...

vanak annaa ....

Anonymous said...

இங்கட எல்லாருமே கதை படிச்ச மாறி தெரியலையே ...நிரோஷாவை லுக் விட வந்தவிங்க போல இருக்கே ....

Anonymous said...

..
மிருனாவும் பிரபுவும் காதலர்களோ ...


இப்பம் பிரிஞ்சி விட்ட்னல்மோ ....

சேகர் அன்னன் மிருனவின் அண்ணனோ ...

தனிமரம் said...

செந்தூரப்பூவே படத்தை திகிலுடன் அமர்ந்து பார்த்ததுண்டு, அதுவும் சண்டை காட்சிகளில் புதுமை, வில்லியின் நடிப்பு, அழகு என்ற அடியாளின் குற்றாலம் துண்டு என்று, ஆபாவாணன் படம்னு நினைக்கிறேன்.

நிரோஷாவை நினைத்து இப்போதும் மனம் கலங்குவது உண்டு அப்பிடி ஒரு நடிப்பு...!

3 July 2013 18:05 //வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!ம்ம் ஆபாவாண்ன் இயக்கம் தான் அது மெய்சிலிர்க்கும் படம். அவரின் எல்லாப்படமும் பார்த்து விடுவேன் அப்படி அருமையான இயக்கம் இப்போது! ஏது!ம்ம் நிரோசா அது ஒரு காலம்!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும் இணைப்புக்கும்.

தனிமரம் said...

மிகவும் ரசிச்ச பாடல்... நிரோசாவின் அழகு... ம்ம்ம்ம்...

3 July 2013 21:56 //நன்றி சங்கவி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///அந்தப் பிடிவாதக்காரன்..........ஹ!ஹ!!ஹா!!! வணக்கம் யோகா ஐயா ! அவன் நான் இல்லை!ஹீ அது என் நட்பு ஒருவன் முகம்!ம்ம்

///அந்தப் படத்தில்(செந்தூரப் பூவே)அவர்கள் இருவருமே(ராம்கி&நிரோஷா) தங்கள் உண்மைக் காதலை வெளிப்படுத்தினார்கள்!நாங்க தான் கண்டுக்கல!!!!ம்ம் நிஜம் தான் யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

3 July 2013 22:28 //

தனிமரம் said...

vanak annaa ....//வணக்கம் கலை நலமா??

தனிமரம் said...

இங்கட எல்லாருமே கதை படிச்ச மாறி தெரியலையே ...நிரோஷாவை லுக் விட வந்தவிங்க போல இருக்கே ....

4 July 2013 03:17 //ஹீ ஒரு சில நினைவுகள் அசைபோடுவதும் ஒரு சுகம் தானே கலை!

தனிமரம் said...

மிருனாவும் பிரபுவும் காதலர்களோ ...//இல்லை!


இப்பம் பிரிஞ்சி விட்ட்னல்மோ ....

சேகர் அன்னன் மிருனவின் அண்ணனோ !தொடரை தொடர்ந்து படியுங்கோ புரியும் வாத்து!ஹீ நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் ...

4 July 2013 03:19