மூன்றாவது ஈழப்போரை முடிவுகட்டி ,நாட்டு மக்களின் மனதில் இனி யுத்தம் இல்லை என்ற முகமலர்ச்சியைக் கொண்டுவந்த சமாதான தேவதையின் வருகையால் நாட்டில் ஏற்றப்பட்ட அரசியல் ,பொருளாதார சமூக இயல்பு மாற்றங்களில் ஒன்றுதான் தொலைத்தொடர்புத்துறையில் இருந்த அரசகட்டுப்பாடுகளின் தெளிவற்ற பல அழுத்தம் மறுசீரமைப்பு என்ற போர்வையில் வலுக் குறைக்கப்பட்டது!
அந்த வலுக்குறைப்பு என்ற ஆலோசனையின் பின்னனிக் குள்ளநரிகள் அனைத்துலக பன்னாட்டு நாணயநிதியம் என்ற அமைப்பு முக்கிய பங்காற்றியது நம்நாட்டில் என்றாள் மிகையில்லை !
இந்தக்காலத்தில் இணையம் தணிக்கை கடந்து இலங்கையில் இன்று தகவல் தர இந்தளவு புரட்சி செய்ய முதலில் அந்த சீரமைப்பு என்ற சிறுகோடு போட்ட சிங்கள ஆட்சிபீடத்தின் அதிகார மையத்துடன் ,
ஒரு தமிழர் வம்சத்தின் கலப்பு வாரிசு ஊடகசேவையில் தானே உள்நாட்டு ராஜா என்பது போல கொடிகட்டிப்பறக்க !
மேதகு ஜனாதிபதிக்கு மேலதிக வருமானம் கொடுக்க முன்வந்தார் ஒரு பல்தேசிய நிறுவனத்தலைவர் என்று நாட்டின் ஜனாதிபதியே பகிரங்கமாக தேசிய தொலைக்காட்சியில் பேட்டிகொடுத்த நிகழ்வுகளை எல்லாம் மறக்கமுடியாது !
அந்த அரசியல் நினைவுகளோடு வவுனியா இரட்டைப்பெரியகுளத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் இறுதி இன்ரசிற்ரி பஸ்சில் ஏறியமர்ந்தான் சேகர்!
இனி எல்லா பஸ்சும் மதவாச்சி ,,அனுராதபுரம் பகுதியில் இருந்து தான் கொழும்புக்கும் மற்றும் ,புறநகரங்களுக்கும் பயணிக்கும் !இங்கு சட்டமே பாதுகாப்புப்படையினரின் கைகளில் தானே !
!இனி என்ன செய்வது வட்டார அதிகாரியும் முதலில் கொழும்பு வா இங்கிருக்காமல் என்ற நிலையில் நம்விற்பனை நடவடிக்கையில் என்ன இடமாற்றம் செய்யலாம் என்று பிறகு தீர்மானிக்கலாம் என்றநிலையில்!
தமிழன் என்நிலையே எந்தவழி என்று தெரியாத கதியில் ,காதலுக்கு மரியாதை செய்வாயா ?என்று கேட்கும் ஐராங்கனிக்கு எப்படிப்புரியவைப்பேன் என்நிலையை ?நாட்டிலே இனவாதம் போர் உக்கிர முரசுகொட்டுது ,இந்தபூமியில் இருவேறு இனத்தவர்கள் ஒன்றாகி இல்லறம் காணமுடியுமா ?
இந்தப்பேதைக்கு எப்படியுரைப்பேன் அவர்கள் வீட்டில் வேலைநிமிர்த்தம் வந்து தங்கிப்போகும் என்னிடம் என்ன நிறைகண்டாள் ?
தனியாக என்னுடன் அடிக்கடி அனுராதபுரம் வரும் அவளுக்கு வழித்துணையாக வருவது அவர்கள் வீட்டில் வார இறுதியில் உண்டு உறங்கும் கைமாறுக்காகத்தான் .அதுவும் இராணுவத்தின் பாஸ் நடைமுறையினால் வார இறுதியில் வவுனியாவை விட்டுப்போக வேண்டி நிர்ப்பந்தம் தான் பின்னனி !
இந்த நிலையில் அடிக்கடி தன் தொழில் நிமித்தம் என்னுடன் வருபவள் அன்று என் தோலில் சாய்ந்த வண்ணம் நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் சேகர்?
எனக்கு உங்களைப்பிடித்திருக்கு !எப்போது நாம் கலியாணம் செய்துகொள்வோம் ?
இந்தமாதிரி ஒரு பஸ்சில் போனவாரம் சொல்லிய பின் நானும் இதுவரை நேரில் போகவில்லை குருநாகல் !அதுதான் ஐராங்கனிக்கு பூர்வீகபூமி.
மேலதிகாரியான அவளின் மூத்த அண்ணாவோ என்னை வீட்டவா சேர்ந்தே இந்தவருட ஆண்டுக்கூட்டத்துக்கு குதுநாகலில் இருந்து கொழும்பு போவோம் என்று என்னிடம் தொலைபேசியில் நேற்று அழைத்த போதும் நான் சொல்லியது மூன்று நாள் இருக்கு மாத முடிவுக்கு கொஞ்சம் ஜோசிப்போம் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது போல என்று பின்போட்டது ஐராங்கனியை சந்திக்கக்கூடாது என்ற நிலையில் தான்!
இப்ப எல்லாம் அவளின் நினைவுகள் அடிக்கடி மனசுக்குள் மத்தாப்பூ போல "பொங்மாங்குயில் சந்தோஸமாய் பண்பாடுதே "என்று நினைத்தாலும் தீனா பாடல் வரிகள் சொல்லுமே "நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே "என்ற நிலைபோல அவள் என்ன கனவு கண்டாளும் இதுக்கு பெயர்தான் நியூட்டனின் ஈர்ப்போ ?இல்லை உணர்ச்சி வசப்படலோ??
எந்த நிலையிலும் ஐராங்கனி நாடோடிப்பாட்டுக்காரன் ஏழை என்னுடன் கைகோர்க்க முடியாது?
!இந்தச்சிக்கலில் இருந்து மீள இருக்கும் ஒரே வழி மிரூனாவிடம் நேரில் பேசுவதுதான் !
சரி நாளைக்கு கொழும்பில் வேலை முடிந்த பின் மாலையில் அவளைச் சந்திப்போம் அதுக்கு முன் பாபுவுக்கு சொல்லவேண்டும் நாளை இரவுக்காட்சி பார்க்க கொட்டஞ்சேனை செல்வமஹாலில் டிக்கட் புக் பண்ணச்சொல்லி!
!
!
தொடரும்!!
6 comments :
தொடர் கதையா? சில இடங்களில் புரிந்து கொள்ள இடர்படுகின்றேன், கொஞ்சம் அடியேன் விளங்கும்படி எழுதினால் நல்லாயிருக்கும். :)
/// நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே... ///
எப்படி புரிய வைப்பது எனும் தவிப்பும், மிரூனா மூலம் கிடைத்த வழியும் அறிய தொடர்கிறேன்...
நேருக்கு,நேர்!!!!!!!பார்ப்போம்,தொடர்ந்து.
தொடர் கதையா? சில இடங்களில் புரிந்து கொள்ள இடர்படுகின்றேன், கொஞ்சம் அடியேன் விளங்கும்படி எழுதினால் நல்லாயிருக்கும். :)//வாங்க நிரஞ்சன் தம்பி ஐயா இது ஒரு தொடர்தான் முடிந்தளவு முயல்கின்றேன் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே... ///
எப்படி புரிய வைப்பது எனும் தவிப்பும், மிரூனா மூலம் கிடைத்த வழியும் அறிய தொடர்கிறேன்...//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்ளுக்கும் கருத்துரைக்கும்.
நீ இல்லை என்றால் வாழ்க்கையும் இல்லை வானவில்லே... ///
எப்படி புரிய வைப்பது எனும் தவிப்பும், மிரூனா மூலம் கிடைத்த வழியும் அறிய தொடர்கிறேன்...
19 July 2013 18:50 Delete//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment