22 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-13


கிராமங்களையும் ,நகரங்களையும் ஒன்றினைக்கும் தேசிய அரசியல் போல நாட்டின் தலைநகர வாழ்க்கையும் ஒரு அரசியல் ஜீவஜோதி !

இந்த ஜோதியில்  சங்கமிக்க சிற்றூரில் இருந்தும் ,சிறுநகரத்தில் இருந்து கனவுகளுடனும் ,கற்பனைகளுடன் வருவோரின் கன்னத்தில் முதலில் கைவைப்பது இந்த தலைநகரில் ஒதுங்கிக்கொள்ள ஒரு முகவரியுடன் மூன்று நேரச்சாப்பாடு இல்லாவிட்டாலும் ,முகம் தொலையாத நிம்மதியுடன் இருக்க ஒரு வாடகை அறை .

அறை கிடைத்துவிட்டாள் அடுத்த கட்ட அரசியல் என்ன ?என்பதையும் ,ஆலோசனை செய்யும் வசதி வந்துவிட்டும் ..துணிவே துணை என்பது போல அப்படி ஆலோசனை செய்ய அறிமுகமான நல்ல நண்பர்கள் இருந்தால் இந்த தலைநகரம் கொழும்பில் ஒரு போக்கிடம் அமைக்க முடியும்.

அந்த கொழும்பு நகருக்கு வவுனியா இன்ரசிற்றியில் இருந்து சேகர் போய்ச்சேர்ந்தது முதலில் பாபு இருக்கும் வாடகை அறையான கொழும்பு -13 இல் ஜம்பட்டாவீதியில் இருக்கும் தொடர்மாடி ஒன்றில்  நண்பனின் அறைக்கு!

அன்று மலர்ந்த தாமரைபோல அவனை வரவேற்றான் பாபு .
வாடா மச்சான் .என்னாச்சு ? நீபோகும் இடம் எல்லாம் இட மாற்றமும், விருப்பு மாற்றலும் விரைந்து வருகின்றதே ?நாடாளுமன்ற தேர்தல் போல அடுத்த விற்பனைப்பிரதிநிதியாக இனி எந்த ஊர் போகப் போறாய் சேகர்?

இந்தநாட்டில் யுத்தம் ஓயாது !நாங்களும் ஓடுவம் ஓடும் வரைக்கும் ஒரு எல்லை இருக்கும் தானே ?

நிஜம்தான் மச்சான் சேகர்.

பஸ்ஸில் வந்த களைப்புக்கு ஒரு தேனீர் குடி தேவாமிர்தம் போல இதுதானே நமக்கு! 

ஆமா உன் வேலை எப்படிடா போகுது பாபு ?சந்தோஸமாக போகுது சேகர் .
எல்லாம் உன் சாமர்த்தியம் தான் முதலில் பஸ் நீண்ட பயணக்களைப்புக்கு ஒரு குளிப்பு போடு .

நான் பரோட்டா கொத்துக் கட்டிக்கொண்டுவாரன் .

சரிடா மிச்சம் உங்கூட பேசணும் என்று இருந்தன் சேகர் .நீ படத்துக்கு புக் பண்ணச்சொல்லியும் அதைச்செய்யல ,உன் கூட அவசரமாக  ஓய்வாக இருந்து பேசணும்!

இன்று மாலையில் எத்தனை மணிக்கு வருவாய்?
 மாலையில் 6 மணிக்கு .

ஓக்கேடா சேகர் நாங்கள் கோல்பேஸ் போவம் சாய்ந்திரம்.

 சரி நானும் மிச்சம் பேச இருக்கு உன்னோடு பாபு.

ஆமா சேகர்!நீ எப்ப பதுளை போறாய் ??ஏண்டா  பாபு காலையில் என் வாயைக்கிண்டாத !

ம்ம் உன் பிடிவாதம் கூடாது மச்சான் .வீணா நம்நட்பை சோதிக்காத தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கையில் பாராளமன்றத்தைக் கலைச்சமாதிரி இல்லை நான் .ஆட்சியும் வேண்டாம் அவதூறும் வேண்டாம் என்று நிற்கும் சுஜேட்சை உறுப்பினர் போல எப்ப போகணுமோ அப்ப அந்த ஊரைப்பார்க்கின்றேன் .

சரிவிட்டுவிடு சேகர் நம்ம பதுளை நண்பர்கள் எல்லாம் உன்னைக்கேட்கின்றாங்க?
மச்சான் பாபு மூடியபாதையால்  முன்னேற வெளிக்கிட்டால் ஆபத்து அதிகமாக இருக்கும் .நான் ஆபத்தை நேருக்கு நேர் சந்திக்கவிரும்பவில்லை .

இந்த விற்பனைப்பிரதிநிதி வேலையே எனக்குப் போதும்.

இன்று தலமைக்காரியாலயம் போனால் தெரியும் !
இனிமேல் வவுனியா நிலமை சரியாகும் வரை வேற இடங்களில் தற்காலிகமாக வேலை செய்யலாம் ,இல்லை யாராவது புதிய இடத்தில் புதிய ஏகவினியோகஸ்த்தர்கள் கிடைத்தால் இருக்கும் பகுதியை இரண்டா பிரித்து விற்பனையை அதிகரிக்க வழிகோலுவார்கள் வடகிழக்கு மாணசபையை இரண்டாக்கியது போல தலைக்காரியாலயம் போனால் தெரியும் கண்டி ,திருகோணமலை ,வவுனியா என்று ஒவ்வொரு பகுதியும் பார்த்தாச்சு ,இனி எந்த இடம் வருமோ ?எப்படி விதி எழுதியதோ யாருக்குத் தெரியும் .

வருங்காலம் எல்லாம் வெல்ல இணைந்த கைகள் நீ இருக்கும் போது எனக்கு என்ன குறை மச்சான் பாபு.

ஆமா என்னை பினாமியாக்கி நீ பல இடத்தில் தப்பிவிடுவாய் .நான் தான் வாய் இருந்தும் ஊமைபோல நடிக்க வேண்டும் !

நண்பேண்டா நீ !

ஆமா நண்பன்தான் இல்லை என்றாள் நமக்குள் எப்படி இப்படி ஒரு புரிந்துணர்வு ?மலையகத்தில் பிறந்த நானும் ,வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்த நீயும் இணைந்தது 'புரிந்துணர்வில் தானே ?
நிஜம் தான் பாபு .

ஆமா நம்ம ராகுலைப் பார்தாயா ?


அவன் குருநாகல் போய் இருக்கின்றான் உனக்குத் தெரியாதா ?

இல்லடா என் கைபேசி வேலை செய்யவில்லை நேற்றுமுதல் அதனாலஅவன் சொல்லாமல் போய் இருப்பான் .

 இருக்கும்டா சேகர்.

அவன் உங்கள் கம்பனி வட்டார அதிகாரி வீட்டில் தானே தங்குவான் .
ஆமா அந்த ஐராங்கனி எப்படி இருக்கின்றா ?
உங்கள் நட்பை ராகுல் விரும்பவில்லை என்று மட்டும் நேற்றுக்கூட என்னோடு பேசினான் .

அவனைவிடு லூசன் ,அப்படிச் சொல்லாத மச்சான் அவன் தான் நாம ஒன்று சேர மூலக்காரணம் .

அவனை மீறி நான் உன் வழியில் வர ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கு கைவசம் !


தொடரும்!

12 comments :

MANO நாஞ்சில் மனோ said...

தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கையில் பாராளமன்றத்தைக் கலைச்சமாதிரி//

ஆங்காங்கே அரசியல் எடுத்துக்காட்டு சூப்பர் மக்கா ரசித்தேன்....!

MANO நாஞ்சில் மனோ said...

முதல் காப்பி எனேக்கே எனக்கு, சூடா வேண்டாம் இளஞ்சூடாக வேண்டும்.

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள். தொடந்து வாசித்தாலும் கருத்திடும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கிறது.
இனிமேல் அந்த குறையையும் விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடருங்கள் வருகிறேன்

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

// நண்பேண்டா நீ ! //

ரசனையுடன் தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றாக தொடர்கிறீர்கள்.தொடருங்கள்,தொடர்வேன்/வோம்!

தனிமரம் said...

தேர்தலில் வெல்வோம் என்று நம்பிக்கையில் பாராளமன்றத்தைக் கலைச்சமாதிரி//

ஆங்காங்கே அரசியல் எடுத்துக்காட்டு சூப்பர் மக்கா ரசித்தேன்....!

22 July 2013 15:27 Delete// வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி முதலில் குடியுங்கோ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

முதல் காப்பி எனேக்கே எனக்கு, சூடா வேண்டாம் இளஞ்சூடாக வேண்டும்.

22 July 2013 15:28 Delete//உங்களுக்குத்தான் மனோ அண்ணாச்சி இதோ இளம் சூடாக உடனே ஒரு பால்க்கோப்பி! ஹீ

தனிமரம் said...

வாழ்த்துக்கள். தொடந்து வாசித்தாலும் கருத்திடும் சந்தர்ப்பங்கள் குறைவாகவே இருக்கிறது.
இனிமேல் அந்த குறையையும் விடக்கூடாது என்று நினைக்கிறேன். தொடருங்கள் வருகிறேன்

22 July 2013 15:35 Delete//நன்றி நெற்கொழுதாசன் வாழ்த்துக்கும் .வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்கிறேன்

22 July 2013 16:40 Delete//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நண்பேண்டா நீ ! //

ரசனையுடன் தொடர்கிறேன்... வாழ்த்துக்கள்...

22 July 2013 18:08 Delete//நன்றி வாழ்த்துக்கு தனபாலன் சார் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றாக தொடர்கிறீர்கள்.தொடருங்கள்,தொடர்வேன்/வோம்!//நன்றி வாழ்த்துக்கு யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.