23 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-14

பெளர்ணமி முன் இரவில் கடல்கரையில் இருந்து அழகிய தமிழ்க்கவிதையைக் வானொலியில் அமைதியாக கேட்டாள் எப்படி இருக்கும்! மந்தமாருதம் இலங்கை ஒலிபரப்பில் என்றால் என்ன .கவிச்சோலை சக்தி Fm என்றால் என்ன .சூரியன் FM நேற்றைய காற்று .இதயராகம்  சக்திfm என்று தொடங்கி இன்றைய இணைய லங்காசிறியின் டினேசின் இமையும் இசையும், கடந்து ,நம் புரட்சியின் தூவானம் போல !



மனதில் கடல் அலைகள் வந்து ஓயாமல் கரைமீது சீறுவது போல ஒவ்வொரு மனதிலும்  பகல் எல்லாம் இருந்த அவசரங்கள் குறைந்து அந்தி சாய்ந்து அமைதியான இரவுப்பொழுதுக்கடல் போல இருக்கும் கோல்பேஸ் என்றழைக்கும் காலிமுகத்திடலில் இருந்து நிலாச்சோறு கவிதை நிகழ்ச்சியோடு நேரடி நிகழ்ச்சியூடாக காற்றலையில் வரும் குரல் S. T ராஹூப் என்றாலே சக்தியின் பண்பலையில் இதயராகம் இன்றும் கடல்கடந்து புலம்பெயர்ந்தவர்கள் பலரின் ஞாபகத்தில் வந்து செல்லும் வானொலி நேயர்களுக்கு !





அறிவிப்பாளர்கள் குரல்கள் வரும் நிலையங்கள் திடீர் திடீர் என்று சினிமா நட்சத்திரங்களின் காதல் அறிக்கை போல மாறினாலும் நிஜமான குரலின் சாயல் சிலருக்கு மாற்றமுடியாது !

கவிதை நேசிப்பை யாசிக்கும் வாசகர்கள் போல அது சித்திரம் போல படிந்துவிடும் இனவாத புலனாய்வாளர்கள் நீ புலிகளுக்கு வேவு பார்த்தாயா ?,என்று தமிழ்  அப்பாவிகள் புறமுதுகில் கூறிய ஆயுதங்களினால் கீறி அடையாளம் இட்டது போல !

அப்படித்தான் அன்றைய சனிக்கிழமை 1999 ஒக்டோபர் மாத  இரண்டாம் வார இரவுப்பொழுது பாபுவுடன் சேர்ந்த சேகரும் காலி முகத்திடலில் மணலில் இருந்து வானொலியை காதில் கவிதையை இசைக்கவிட்டுவிட்டு நிலாவைப்பார்த்துக் கொண்டு நீண்ட பெருமூச்சு விட்டார்கள் நாளைய பொழு ஞாயிறு விடுமுறை என்பதால்!


 கடற்கரையின் அமைதியை அந்த இரவு நிசஸ்ப்பத்தை குழப்பும் சுண்டல் விற்போரின் உச்சஸ்தாயிக்குரல் காதில் ஒலிக்கும் கவிதை நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் ஊறுவிளைவித்தது.
கடலைரசிக்கும் ,தமிழினையும், சிங்களவனையும் ஒன்றாக இருக்கவிட்டு விட்டு தமிழன் என்ற ஒரு காரணத்திற்க்காக அவனை மட்டும் தனியாக விசாரிக்கும் சிங்கள பொலிஸ்க்காரர்  போல!

ஆமா பாபு என்ன பேசணும் என்றாய் நேற்று ?
பேசணும் அதுதான் எப்படித்தொடங்குவது என்று புரியவில்லை மச்சான் !
என்னடா இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வுத்திட்டமா நாம் பேசப்போறம்,பண்டா -செல்வா  ,திம்பு பேச்சுவார்த்தை ,பிரேமதாச -புலிகள்,சந்திரிக்கா -புலிகள் பேச்சுவார்த்தை போல இல்லையே?


ம் ம் எங்களிடம் இருக்கும் ஏதாவது தனிப்பட்டநலன் சார்ந்த எதிர்பார்ப்புக்கள் ,எதிர்கால திட்டம் பற்றித்தானே இருக்கும் !
இல்லை சுயநலமாக நாம் அப்படித்தானே இருக்கின்றோம் !

நம்ம வீட்டில் நெருப்பு எரியும் வரை எதையும் பார்த்து ரசிப்போம் ;பின் நமக்கு என்று வரும்போது அண்டை வீட்டைக்கூப்பிடுவதும் அயல்நாட்டு குள்ளநரிகளை நம்புவதும் நம் இயல்பாகிவிட்டதே  !


நாம் போய் வால் பிடிச்சுக்கொண்டு தொப்புள்கொடியாம் என்று நினைச்சு தமிழர் என்று  சொல்லிக்கொண்டு அவங்க வல்லரசு கனவுக்கு நாங்க ஜால்ரா அடிக்கணும்!

போடா உந்த நாதாரி அரசியலைவிட்டுவிட்டு நீ  ஏதாவது புத்தகம் சுதந்திரமாக எழுதப்போறீயா ??

அதுக்கு யாராவது விளம்பரதாரர்களை ரெக்கமண்டேசன் செய்யணுமா பாபு ?

அது எல்லாம் இல்லை சேகர் !
இது என் தனிப்பட்ட விடயம் !
ஓ அப்படி என்றால் அதில் நான் எப்படி உள்ளே வரமுடியுமா??

 உள்ளே வெளியே ஆட இது என்ன பார்த்தீபன் படமா??

கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இரேண்டா !
அது எப்படிடா பேசாமல் ஊமையா?
ஐயோட சேகர் !

நானே குழப்பத்தில் இருக்கின்றேன் .

ஓ அப்படியா ?அப்ப குளம்பிய குட்டையில் மீன்பிடிக்க முடியாது ,
வா ஒரு பியர் அடிக்கலாம் கொஞ்சம் சுருதி சேரும் பேச்சுத்துணைக்கு என்று இருவரும் அருகில் இருந்த காலிமுகத்திடல்  விடுதியில் நுழைந்த போது அவர்களை வரவேற்ற வரவேற்பபாளர் முன்னம் இவர்களை அறிந்தவர் என்பதால் !
இருக்கையை ஒதுக்கிவிட அதில் அமர்ந்து கடலைப்பார்த்தான் சேகர் !

சொல்லு மச்சான் அந்த கடல் அலைகள் போல உன் மனதில் விடாது அடிக்கும் பிரச்சனை என்ன ?
என்னால் முடிந்தளவு இதுக்கு உதவி செய்கின்றேன் .
இரு என்ன லயன் லாகர் எடுப்போமா ,,
இல்லை ஸ்டவுட் எடுப்போமா ??
எனக்கு வேண்டாம் நீ குடி எனக்கொரு கொக்கா சொல்லு  !

சரி சொல்லு காதல் பற்றி எண்ண நினைக்கின்றாய் ?


என்னடா ;ஸ்டவுட் ,ஜின் ,ஓல்ட் அறக்கு ,,ஜெனிவோர்கர்ஸ் பற்றி கேளு இல்லை ;பனம் கள்ளு; கித்துள் கள் பற்றிக்கேளு!

 இந்தக்காதல் அனுபவம் எனக்கில்லை!  நான் ஒரு விற்பனைப்பிரதிநி வேசம் கட்டும் ஒரு வெட்டிப்பயல். என்னை எல்லாம் காதலுக்கு காவடி தூக்கும் அளவுக்கு நடிகன் ஆக்காத பாபு!

ஏன் விற்பனை பிரதியுடன் ,ஊடகவிளம்பர சேமிப்பாளர் .என்று இரண்டு மொழி ஊடகதத்தில் நீ செய்யு பிரதியோக வேலை எல்லாம் நான் அறிய மாட்டேனே சேகர் ??

அந்தளவு அன்பில்லாதவன் போல நானா?? இவ்வளவு தானா நம் நட்பு?
நட்பு வேற,காதல் வேற.


கடமை வேற.  போகும் பாதை வேற நான் ஒரு மரம்போல! எனக்கு என் வளர்ச்சி முக்கியம் தேவையில்லாத உறவை வெட்டிப்போகும் ஒரு சாமனியன் பாரம் என்றால்! அது உறவாக இருக்கலாம் நட்பாக இருக்கலாம் ! நான் ஒரு சுயநலவாதி தான் ராகுல் போல இல்லை!

முகம் தொலைய !


எனக்கு உறவு ஒரு சிறை அல்ல!

தொடரும்

11 comments :

MANO நாஞ்சில் மனோ said...

தமிழன் என்ற ஒரு காரணத்திற்க்காக அவனை மட்டும் தனியாக விசாரிக்கும் சிங்கள பொலிஸ்க்காரர் போல!//

இங்கே மும்பையிலும் அதே நிலைமைதான், எல்லாரையும் விட்டுட்டு தமிழனைத்தான் பிடிப்பார்கள், அவர்கள் கேட்க்கும் முதல் கேள்வியே நீ விடுதலை புலிதானே என்றுதான் ஆரம்பிக்கும் எனக்கும் அனுபவம் உண்டு....!

MANO நாஞ்சில் மனோ said...

இளம் சூட்டில் ஒரு காபி....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//நம்ம வீட்டில் நெருப்பு எரியும் வரை எதையும் பார்த்து ரசிப்போம் ;பின் நமக்கு என்று வரும்போது அண்டை வீட்டைக்கூப்பிடுவதும் அயல்நாட்டு குள்ளநரிகளை நம்புவதும் நம் இயல்பாகிவிட்டதே //
உண்மை இது எல்லோருக்கும் பொருந்தும்

திண்டுக்கல் தனபாலன் said...

எரியும் வரை எதையும் ரசிப்பது உண்மை...

தொடர்கிறேன்...

Unknown said...

என்ன ஒரு டைமிங் பஞ்ச்!///காதலுக்கும் ஆலோசகராக...............ம்..ம்....நடத்துங்க!

தனிமரம் said...

தமிழன் என்ற ஒரு காரணத்திற்க்காக அவனை மட்டும் தனியாக விசாரிக்கும் சிங்கள பொலிஸ்க்காரர் போல!//

இங்கே மும்பையிலும் அதே நிலைமைதான், எல்லாரையும் விட்டுட்டு தமிழனைத்தான் பிடிப்பார்கள், அவர்கள் கேட்க்கும் முதல் கேள்வியே நீ விடுதலை புலிதானே என்றுதான் ஆரம்பிக்கும் எனக்கும் அனுபவம் உண்டு....! வாங்க மனோ அண்ணாச்சி! ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!ஆஹா அண்ணாச்சிக்கும் இதே நிலையா!ம்ம் என்ன செய்வது பார்வைகள் அப்படி!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இளம் சூட்டில் ஒரு காபி....

23 July 2013 16:21 Delete//தாராளமாக முதல்பால்க்கோப்பி இளம் சூடாக நிச்சயம் கிடைக்கும்!ஹீஈஈஈஈஈஈஈ!

தனிமரம் said...

/நம்ம வீட்டில் நெருப்பு எரியும் வரை எதையும் பார்த்து ரசிப்போம் ;பின் நமக்கு என்று வரும்போது அண்டை வீட்டைக்கூப்பிடுவதும் அயல்நாட்டு குள்ளநரிகளை நம்புவதும் நம் இயல்பாகிவிட்டதே //
உண்மை இது எல்லோருக்கும் பொருந்தும்

23 July 2013 18:08 Delete//நிஜம் தான் முரளிதரன் சார் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எரியும் வரை எதையும் ரசிப்பது உண்மை...

தொடர்கிறேன்...

23 July 2013 18:35 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்ன ஒரு டைமிங் பஞ்ச்!///காதலுக்கும் ஆலோசகராக...............ம்..ம்....நடத்துங்க!

23 July 2013 23:18 Delete//வணக்கம் யோகா ஐயா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

மதுரை சரவணன் said...

வரிக்கு வரி வாரியிரைத்துள்ளீர்கள் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் ஆனாலும் தொப்புள் கொடி உறவு துரோகம் மட்டும் மனதிலிருந்து விடுப்படவில்லை...