25 July 2013

என்னுயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-15


காதல் என்றால் முகம் தொலைவதுதானா?


காதலில் உண்மையாசிப்பூ  விழியில் 
காதலன்  வலி
கண்ணீரில் தந்தானே  இவன் என்பதா?


காதல் நேசமுடன்  இருந்தால் உருகும் 
 காதல் இந்த தேசத்து 
கண்ணீர்  போல
காதல்கதை  தானா?


காதல் என்றால்உண்மையில் இவன் ஒரு 
கடல்கடந்தவன் அன்பில் ,!உறவில்
காதலுக்காக உன்னோடு வருவேன் 
கடல்கடந்து போகும் கலியுக யுத்த
கண்காணிப்பு வந்தாலும்
கவலையில்லாதவன்!
கடந்தகாலம் என என்று கற்றவர்கள்
கதைபோல காண்டம் நீ  வாசி
கட்டுநாயக்கா கடந்து போவாய்!


கண்டிப்பாக பாதுகாப்பு
கைதியாக கடக்கும் போது கையில்
கடுகளவு காசு இல்லாது 
கடனாளியாக கரை தேடுவாய்
கற்றவன் நான் கூறும் வாக்கு!


காகம் பறக்காத ஊரும் இல்லை உன் 
கன்னிப்பருவம் காணாத ஊரும் இல்ல
கல்லாத கடம்பமரம் உன் ஜாதகம் தம்பி
கல்லாதவன்  ஐயா! நான் காற்றில் வரும்
கனசெய்தி கேட்டு கடற்கரை வீதியில்
காண்டம் சொல்லும் வெள்ளவத்தை வீதியில்
காண்போர் அறிந்த பண்டிதர் முத்துசாமி!
கண்டிப்பாக பலிக்கும் இல்லை
கட்டையில் கண்டிப்பாக போவேன்
கடல் கடந்து இந்தியாவில் இருந்து வந்த
காண்டம் வாசிக்கும் இவன் கடவுளின் இன்னொரு அவதாரம்!



  !!! இப்படித்தான் மச்சான் பாபு நேற்று வெள்ளவத்தையில் காண்டம் வாசிக்கும்! மலையாள மந்தீரிகம் முத்துசாமி ஐயா  என் காண்டம் மாலையில் பார்த்து சொன்னார் !

என்ன ஒரு 1500 ரூபாய் போச்சு இரண்டு ஜின் போத்தல் .பத்து போத்தல் கோலா கலக்கும் காசு!ஆனாலும் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்லுது நான் ஒரு வழிப்போக்கன் !

யாரிக்கும் கட்டுப்பட மாட்டேன் என்று !என்றாலும் உன் காதலுக்கு காவடி தூக்க தயார் யார் அந்த காதல் தேவதை! சொல்லு மச்சான் அதுக்கு முன் இன்னொரு ஸ்டவுட் உன் பெயரில் என் காசு ஓக்கே!

ம்ம்!

 நீ எப்போதும்  தண்ணியிலும், நிதானமாக இருப்பாய் அதுதானே உன் நடிப்பு மச்சான் சேகர்!

நீ எப்போதும் கோபக்காரன் என்றாலும் குணத்தில் ஒரு நண்பன்! இந்த என் காதலுக்கு மட்டும் தூதுபோடா!


அது போதும் சேகர்  வெளிக்கிடு போவம் கடல் இன்னும் ஓயவில்லை என் மனம், போல அந்த தேவதை உனக்குத்தெரியும் !
உன் குடும்பம் அறியும் அவள்!


தொடரும்!

6 comments :

MANO நாஞ்சில் மனோ said...

காகம் பறக்காத ஊரும் இல்லை உன்
கன்னிப்பருவம் காணாத ஊரும் இல்ல//

அட இது நல்லா இருக்கே....!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடலுடன் கவிதையும் சூப்பர்...

வெற்றிவேல் said...

அழகான கவிதை நண்பா...

காதலுக்கு காவடி... தூக்கலாமே!!! தூக்கும் போது சொல்லுங்க, நானும் வரேன்...

தனிமரம் said...

காகம் பறக்காத ஊரும் இல்லை உன்
கன்னிப்பருவம் காணாத ஊரும் இல்ல//

அட இது நல்லா இருக்கே....!

25 July 2013 16:06//வாங்க மனோ அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ இளம் சூடாக!ஹீ நன்றி பாராட்டுக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிமையான பாடலுடன் கவிதையும் சூப்பர்...

25 July 2013 17:34 Delete//நன்றி தனபாலன் சார் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அழகான கவிதை நண்பா...//நன்றி இரவின் புன்னகை!

காதலுக்கு காவடி... தூக்கலாமே!!! தூக்கும் போது சொல்லுங்க, நானும் வரேன்...

26 July 2013 08:41 Delete/ஹீ அப்படியா சந்தோஸம் !நன்றி துனை வருகைக்கு !