புனைபெயரில் புனைந்தீர்கள் புகழ்
பூத்த பாக்கள் பல திரையில் ,
புன்சிரிப்புடன் புதுப்பொழிவுடன்
புத்தகம் என்று பொய்க்கால்குதிரை முதல்
பாண்டவர் பூமி ,அவதார புருஷன் என
பத்திரிகை வட்டத்திலும் ,வாசகர்களிடமும்
பதிந்தது ரங்கராஜன் திருநாமம்
புகழில் இருந்தாலும் ,
புறம்பேசாத குணம்
பாட்டு எழுதும்போதும் வெற்றிலை ததும்ப
பார்த்துக்கொண்டே நீங்கள் வெண்பாவில்
பாவாக எழுதியது ஏராளம்!
பாவைக்குப் பிடித்த காற்றில்வரும் கீதமே பாடல்போல
பரந்தாமா?சிறிரங்கா?என !
பா என் பாடல் எல்லாம் நீயே பதியே பார்த்சாரதி !
பலவழியில் பாட்டில் நீ கண்ணனை பாடியது !
பத்தியுடன் அறிவேன் பாமரன் யான்!
பத்தியுடன் அறிவேன் பாமரன் யான்!
பகலில் பார்த்த பத்திரிக்கையில்
பதிந்த செய்தி பார் போற்றிய!
படகோட்டிப்ப்பால் ஆசிரியர்
பரலோகம் பறந்துவிட்டார்!
பரந்தாமனிடம்
பரந்தாமனிடம்
பாடல்ப்பிரியன் என்ன செய்வேன்!
பாடல் கேட்டு இரங்குகின்றேன் வாலிக்காக
பாடல் கேட்டு இரங்குகின்றேன் வாலிக்காக
பதிவுலகில் இரங்கல் பா இந்தப்
பாடல் எனோ இன்னும் பிடிக்கும் இவர்
பாடல் ஆசிரியர் பட்டம் பெற்றபின்!
பகல்பொழுதில் பல பா
பாடல்கள் இன்னும் என் காதில் பாடும் ஆஹாஅஹா பரவசம்
படித்தவர்கள் ,பார்த்தவர்கள்,
பிடித்தவர்களுக்கு, வெண்பா அமுதம்!!
பண் வழியே பற்றீனீர்
பரந்தாமன் பாதம் சிறிரங்கன் தாள்!
பலரும் கேட்டபோது பாட்டு எழுதுவது பணத்துக்கு
பால்குடித்த தமிழுக்கு
பதிப்பு நூலில் பயம்மில்லாது!
பத்திரிக்கையில் பதிந்த வள்ளளே!
பாட்டாளியும் ,பண்டிதர்களும்
பாடிமகிழ்ந்தது உங்கள் பாக்கள்
பலதில் இருக்கும் படிப்பினை வரிகள்
பாட்டில் வரும் பூக்கள் எல்லாம் அவன்
பாதம் போற்றி
பாடமறவாத பாட்டிசைப்புலவா ?
பார்த்த பலரில் வாலிபக்கம்பன் வாலி
பலகாலம் வாழ்வான் என்றும்
பாட்டில்இன்று இந்த
பார்போற்றும் பூமியில்
பதினெட்டில் இன்று இளைப்பாறினாலும்
பல பாடல் இன்னும் இதயத்தில்!
பார்த்த செய்தி இன்னும்
பகல் கனவா?நம்பவில்லை
பாடல் ஆசிரியரே!
பரந்தாமன் பாசத்தின் வாலியே
பாடலில் இந்த இழப்பை
பல இயற்ற அதிகம் இருக்கு
படிக்காதவன் இரங்கல் பா!
பாடல் தந்த வாலிக்கு .
பாடுவோம் இரங்கள் பா!
அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்!
7 comments :
வாலிக்கு எனது கண்ணீர் அஞ்சலி.
வணக்கம்!
வாலி பிரிந்தமையால் வாடும் தமிழுலகம்!
வேலி இழந்த விளைவு!
தமிழ்மணம்
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...!
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...!
ஆழ்ந்த இரங்கல்கள்...
அமரர் வாலி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
காலத்தால் அழியாப் பாடல்கள் தந்த 'வாலி' புகழ் இகம் உள்ள வரை நிலைத்திருக்கும்!
வாலி அவர்களின் ஆத்மா சாந்தியடை இறைவனருள் கிட்டட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
ஆழ்ந்த இரங்கல்கள்!
Post a Comment