23 September 2013

பிரெஞ்சுக்காதலியை பிரிகின்றேன்!


ஆப்பில் பெண்ணே
அகதியின் காதலியே
பாரிசில் பார்த்தேன்
பார்த்ததும் பிடித்தது பித்து
பிரியமாக உருகினேன்
உருவிப்போனான் உன்னையும் ஒரு
கறுவல் கலங்காத மரமே
காப்புறுதிக்கார கறுப்பி
கையில் தந்தால் உன்னை!
கறுப்பான ஐபோன் !


கைபிடித்தேன் ஓடும் ரயில் தொடர்
கதை என்று நொந்துபோன இதயம்,
காதலில் முகம் தொலைந்தவன்,
கடமையில் ,உருகும் பிரெஞ்சுக்காதலி
கண்ணில் வலியை விழியில் வலி தந்தவனே.
காத்திருந்த நேரத்தில்  என்னுயிரே என்னில் இருந்து விலகும் நொடி
கதை என்றும் ,கவிதை என்றும் எழுத்துப்பிழையாக
என்னையும் திருத்தாத உதவாத காதலியே!

உள்குத்தே உன்னால் தானடி!
உருகும் காதலியே உனக்கும் விடுதலை
உனக்காக நான் கொடுத்த சீதனம்
பல நூறு ஈரோ பாவியடி அப்பாவியடி நான்.!
உனக்கு செலவிட்டத்தில் உண்மையில்
உன் பாட்டி ஊரில் உனக்கும் ஒரு உறையில்
உன் பெயரில் ஒரு வசந்தமாளிகை
உண்மையில் கட்டி இருப்பேன்!
உனக்கு தெரியாது உன் முன்னே
உன்தேசம் பாரிசில் உண்மையில்!நான் அகதிபோல
உன் பின்னே ஒரு வழிப்போக்கன் நேசிப்பில்!!ம்ம்

பலரை உறவு என்று முகநூல் ஒரு பெயர்,
வலைப்பதிவு வேற நாமம் என்று நேசனுக்கும்
நேசம் கொண்டாடா வந்தாயே?


நேற்றும் பல சந்தோஸம் தந்தாய் வாழ்த்தி  நேசத்தில் தங்கை கலை, மகிஅண்ணா  என உள்ளங்கள் வருகை தந்த குடும்பங்கள் என என்னையும் என் தூக்கத்தையும் 
உன்னோடு கட்டிலில் போட்ட சண்டைகள் பல!


 சாப்பாட்டுக்கடையில் வேலையில் பல நிரூபனிடம் ,மணியிடம், துசியிடம்,
ஏதோ கிறுக்கன் என்று சிலர் என்ற போதும் 
எனக்கு கேட்ட பாடல் தரும் நேயர் நேரம்
என்னையும் தாலாட்டுது.


நேற்றும் வந்தாள் முன்னம் தெரிந்த ஒருத்தி நேசனிடம் நிறைய மாற்றம்! 
வெளியூர் வாழ்வில் நீங்க வந்த ராசி போலும்
நெளியவேண்டிய நிலையில்  நீண்டகாலத்தின் பின் பதின்ம வயதில் பார்த்தவள் இவள் என் பள்ளித்தோழி பகிர்ந்தேன் பாரியருடன்!:)))!




மரத்தையும் மறந்திடாத அங்கும் வருவேன் கீதமாக  இப்படி முடிப்பாய் என்று நானும் நினைக்கவில்லை! நான் வாசிக்கும் போது!
உனக்கு  எப்போதும் அவரசரம் அதிகம் என் அப்பா இப்போதும் சொல்வார் நேசன் !நீ அவருக்கும் அடங்காத வழிப்போக்கன்
அவரும் இப்போது உன் வழியில்!ம்ம்

எனக்கு ஒரு உண்மை தெரியணும் ஐயப்பசாமி ஈஈஈஈஈஈ!:))))
உருகும் காதலியாரு நண்பா ?
எனக்கும் தெரிந்தவளா ?
எங்க பதுளை ஊரில் முன்னம் நடந்தவளா?
உன்நண்பன் 
முகம் தொலைந்தவனையும் மறக்கவில்லை!
முன்னம் நீ எல்லோரையும் அரசியலில் அறிந்தவன்.,!
மறுபடியும் வருவாயா நாட்டுக்கு!
மெளமாக மூடிவிட்டேன் !

மணி அடிக்குது வேலைக்கு போகும் நேரம் தோழி !


விட்டு விடப்போறன்  ஐபோனை 
நல்லா ஜோசி நேசன் எத்தனை உறவு உனக்கு இப்ப !

என்னால் பதிவு எழுதவந்த நீ என்னைவிட அதிக உறவுகள் உனக்கு !


உண்மைதான்  இப்போது எல்லோரையும் தற்காலிகமாக பிரிகின்றேன் !மீண்டும் வருவேன் அது வலையில் இன்னொரு ரயில்ப்பயணம் போல  தோழி!


இன்னொரு  தொடர் தொடர்வேன் !இந்த பதுளையில்
இருந்து!


அது வரை சற்று என் அடுத்த தொழில் மாற்றம் அதுவும் கடந்து நிச்சயம் வருவேன் !!!அனுபவம் போல ஆசான் யார் தோழி!

 ஆடிப்பார்ப்போம் வாழ்க்கை ஒரு வட்டம்!
உனக்கு புரியும் நேசன் பிடித்தால் யாரோடும் சேர்ந்து இருப்பான் பிரிந்தால் உருகவும் மாட்டான் !பிரெஞ்சுக்காதலி என்றாலும்!
இன்னும் வெற்றிலை போட்டு வாழும் வழிப்போக்கன் இந்த ஐபோனும் பிரிந்து பார்ப்போம் எல்லாம் இன்னொரு வெற்றிக்கு!நன்றி தோழி!


நானும் விடைபெறுகின்றேன் நான் தனிமரம் அல்ல இப்போது தோப்பு மீண்டும் வருவேன்!
நட்புடன் தனிமரம்  நேசன் !

சும்மா ஒரு தோழி போல ஐபோன் தொடர்பு இடைநிறுத்துவிட்டேன் தனிப்பட்ட காரணங்களிணால் இன்றுடன்!24/9/13!

ம்ம் என் வலையுலக உறவுகளே!


மீண்டும் தனிமரம் துளிர்க்கும்  உங்கள் அன்பில் அதுவரை இந்தப்பாடலுடன் சிறு ஓய்வு!



24 comments :

Seeni said...

nalla padiyaaka kadamaikalai mudithuvittu vekamaaka vaanga...
sako...

தமிழ்வாசி பிரகாஷ் said...

நேசன் மீண்டும் வருக... காத்திருக்கிறோம்....

கவியாழி said...

மனம் மாறி இன்புற்று மீண்டும் வருக

reverienreality said...

Bye iPhone and come back soon Nesare...

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் வரவிற்காகக் காத்திருக்கின்றோம்

aavee said...

வாங்க, பாஸ்

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் மீண்டும் வருக... காத்திருக்கின்றோம்...

MANO நாஞ்சில் மனோ said...

என்னய்யா ஆச்சு....எல்லாரும் இப்பிடியே போயிகிட்டு இருந்தால்....? சீக்கிரம் திரும்பி வாங்க...!

இப்போதைய இலங்கை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்.

Unknown said...

ம்.................ஆன்மீகப் பயணமோ?சென்று வாருங்கள்,காத்திருப்போம்!!!

சீராளன்.வீ said...

தங்கள் பயணங்கள் மகில்வாகட்டும் மீண்டும் வருக...!

வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என் ஆரம்ப காலப் பதிவுகளில் எனக்கு கருத்திட்டு ஊக்குவித்த நண்பரே!
விரைவில் மீண்டும் வருக .
காப்புறுதிக் கார பெண்மணி உருவிப் போனதை மீட்டுக் கொண்டு வாரும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என் ஆரம்ப காலப் பதிவுகளில் எனக்கு கருத்திட்டு ஊக்குவித்த நண்பரே!
விரைவில் மீண்டும் வருக .
காப்புறுதிக் கார பெண்மணி உருவிப் போனதை மீட்டுக் கொண்டு வாரும்.

வெற்றிவேல் said...

சீக்கிரம், நல்லா ஓய்வு எடுத்துட்டு வாங்க... எல்லாம் நல்லதிற்க்கே...

மகிழ்நிறை said...

இந்த பெயரால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்தேன்.இது ஒரு பிரிவு விழாபோல இருகிறதே!உலகில் இன்னொரு மனிதன் இருக்கும் வரை யாரும் தனி மரம் ஆகமுடியாது நேசன் .ஒரு தோப்பாக திரும்பிவருவீர்கள் ,நிட்சயமாக மனிதத்தின் மீதான நம்பிக்கையோடு ஒரு சக மனுசி

Tamil Bloggers said...

இனி தமிழ் பதிவாளர்களும் (Tamil Bloggers), ஆங்கில பதிவாளர்களுக்கு (English Bloggers) இணையாக வருமானம் பெற முடியும்.

தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in ல் பதிவுசெய்து, Ad30days Network விளம்பரங்களை தங்கள் தலத்தில் காண்பிப்பதன் மூலம் மாதம் நிரந்திர வருமாணம் பெற முடியும்.

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே உங்கள் தளத்தை பதிவு செய்யுங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php .

பதிவுசெய்துவது முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம். ( Bank Transfer, Paypal)

Dino LA said...

வாங்க, பாஸ்

அ.பாண்டியன் said...

தங்கள் பயணம் இனிமையாய் அமைந்து மீண்டும் புத்துணர்ச்சியோடு வருகை தர வாழ்த்துக்கள். நன்றி..

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தனிமரம் நன்றே தழைத்திட! தாயே
இனிஉரம் செய்க இசைந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

G.M Balasubramaniam said...


நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவில் உங்கள் பின்னூட்டம் கண்டு விந்தால் இது நீங்கள் விடை பெற்றுப் போகும்போது எழுதினது. என் பதிவில் பின்னூட்டம் உங்கள் வரவைக் குறிக்கிறதா.? வாழ்த்துக்கள்.

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரர்
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

அம்பாளடியாள் said...

இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ !

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : செல்வி காளிமுத்து அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : என் மன வானில்

வலைச்சர தள இணைப்பு : வெள்ளியின் விடியல்கள்

yathavan64@gmail.com said...


வண்ணமிகு வலைச் சரத்தில்

வாசமிகு பூ வானீர்!
அருந்தேன் அமுதமென அற்புத
படைப்பினை படைத்தமைக்கு!

வாழ்த்தும் நெஞ்சம்;
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.FR