04 June 2014

தாலியோடு தனிமரமாக தவிக்கின்றேன் ---34

காலச்சக்கரம் என்ற கடுகதி ரயில் காத்து இருப்பது இல்லை. பள்ளியில் பருவ வயது மங்கையாக பன்னீர்ப்புஸ்பங்கள் நாயகிபோல இருந்த ஜீவனி பல காலத்தின் பின் கல்கி நாயகி போல கலங்கிய முகம்..

வெளியில் சமாளிப்புக்கு கண்டிப்பான அதிகாரி போல அந்த சிறுவர் காப்பகத்தில் பார்க்கும் நிலையை எண்ணி மனதுக்குள் முதல் முதல் பார்த்த நினைவை மீட்டிப்பார்த்தான் பரதன் !

 30 பின் ஆண்கள் பலரின் பார்வையிலும் ,ஆளுமையும் ,ஆற்றுப்படுத்தலும் இல்லறத்தின் பின் வந்து விடும் இன்னொரு முதிர்ச்சி எனலாம் !

அன்று இருந்த ஜீவனியும் இன்றைய ஜீவனிக்கும் இடையில் உடலியல் மாற்றங்களும், உறுதியான பார்வைத் தகமைகளும் சிந்திக்கவைக்கின்றது. பொன்னியின் சொல்வன் குந்தவை போல !

 பதுளை மகியாங்கணை வீதியில் இருக்கும் ஜீவனியின் சமூகத்தால் கைவிடப்பட்ட மழலைகள் காப்பகத்துக்கு பரதனை அழைத்துச்சென்ற ஈசன்!

 அங்கே நீண்ட காலத்தின்  பின் ஜீவனியைப் பார்த்த பரதன் அசையாத சிலைபோல இருப்பவனை சீண்டினான் வார்த்தைகளினால்!

 மரண வீட்டிலும் எதிர்க்கட்சி யானைப்பாகனை நகைசுவையில் நாறடிக்கும் முதல் குடிமகன் போல!

 இவனைர்தெரியுதா ஜீவனி ?,உங்கூட நேரில் கொஞ்சம் பேசனும் என்று பிரென்சில் இருந்து நீண்டகாலத்தின் பின் தமிழ்ப்படங்களில் வரும் வெளிநாட்டு மாப்பிள்ளை போல வந்து இருக்கின்றான்!

 ஈசனின் நகைச்சுவையை ரசிக்காத ஜீவனி மின்சாரக்கண்ணா சிடுமூஞ்சி குஸ்பூ போல சொல்லுங்க ஈசன் என்ன அன்பளிப்பா, ??அல்லது நன்கொடையா கொடுக்க வந்தீர்கள்?,, இருங்க என் செயலாளரை கூப்பிடுகின்றேன் என்று பரதனை சோனியாவைப் பந்தாடிய ஜெயலலிதா போல  நடந்து கொண்டாள்!

திமிரும் அரசியல் பின்புலமும் கொண்ட ஜீவனியின் இயல்புப் போக்கினை நன்கு அறிந்த ஈசன் நண்பன் பரதனிடம் .

"இதுக்குக்தான் நான் நீ வருவதையே விரும்பவில்லை மச்சான்" தன்நம்பிக்கை என்ற போர்வையில் ஆடவரின் தன்மானத்தைச் சிதைக்க நினைக்கும் கட்சித்தலைவிகள் இங்கு பலர் இருக்கின்றனர்.

 நீ தான் இன்னும் அனுதாபம் ,முற்போக்கு ,உண்மை நேசிப்பு என்று இன்னும் பிரமிள் எழுதிய லங்காபுரி ராஜா கதை போல .இந்த விபரீதம் எல்லாத்தையும் விட்டுவிட்டு பிரென்சு போகும் நிலையைப்பாரு!

 கொஞ்சம் அமைதிகொள் நண்பா. 

ஒரு பத்து நிமிசம் பேசமுடியுமா ஜீவனி?, உன்னிடம் நிறையப் பேசணும் என்ற ஆசையில் வந்து இருக்கின்றேன். நான் ஜப்பானில் கல்யானராமன் போல இல்லை புரிஞ்சுக்க!

 ஆம்பிள்ளைகளுடன் நிறுவாகம் தவிர்த்து வேற எதையும் பேசும் நிலையில் ஜீவனி இல்லை .யாருடைய அனுதாபமும் ,பச்சாதாபமும் எனக்குத் தேவையில்லை.

 நீங்கள் போகலாம் என்றுவிட்டு ஜீவனி எழுந்து சென்றாள் தன் தனிமை போக்கும் சிறுவர் கூடத்திற்கு .

என்ன சார் இங்க கலாட்டா என்ற வண்ணம் செயலாளர் பிரசாந்தி வந்தாள்!

 ஒண்ணுமில்ல இல்ல மேடம்.

 மிஸ்ரர் கஜபதியை சந்திக்கவேண்டும் என்று கூறிய பரதனின் வார்த்தை கேட்டு அதிர்ந்து நின்றாள் பிரசாந்தியும் இடையில் இருந்த நண்பன் ஈசனும்!

 இங்கு வருவோர் எல்லாம் ஐயா கஜபதி என்று தான் அழைப்பார்கள். இவன் மிஸ்ரர் என்று ஏகதாளத்தில் விழிக்கின்றானே?? இவன் யார் என்று தன் மூக்குக்கண்ணாடியை உயர்த்தி  இலங்கை திட்ட அமுலாக்கல் அதிகாரி போல பார்த்தாள்!


இன்னும் தவிக்கின்றேன்......

11 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்தது அறிய ஆவலுடன்...

ஒன்னும் தெரியாதவன் said...

மனசு பிறந்த இடத்தை விட்டு வரமாட்டேன் என்கிறதா நேசன் ம்ம்..!

Unknown said...

ம்..........தன்மானம்!தொடர்க.............!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பதிவை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

unmaiyanavan said...

அடுத்து என்ன சொல்லுங்கள். தொடர்கிறேன்

தனிமரம் said...

அடுத்தது அறிய ஆவலுடன்...//வாங்க தனபாலன் சார் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்..

தனிமரம் said...

மனசு பிறந்த இடத்தை விட்டு வரமாட்டேன் என்கிறதா நேசன் ம்ம்..!// ஹீ பிறந்த இடம் இல்லை சகோ ஹீ பரதன் பாத்திரம் பொழுது போக்க போன இடம் நட்பு சொல்லியதை எழுதுகின்றேன் ! நன்றி இலியாஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ம்..........தன்மானம்!தொடர்க.............!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்
நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பதிவை..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அடுத்து என்ன சொல்லுங்கள். தொடர்கிறேன்//நன்றி சொக்கன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் நண்பரே