ஈழயுத்தம் முடிந்த பின் துரிய முன்னேற்ற வளர்ச்சி, புதிய பாதை திறப்பு,
பாதுகாப்பு முன்னேற்றம் என்று எல்லாம் பத்திரிகை செய்தி காற்றைப்போல பரவி நின்றாலும் வளர்ச்சியில் பங்கை பாதீட்டு வெற்றி என்று பாராளமன்றத்தில் மாலுப்பாணுடன் ஏப்பம்விட்டு மாண்புமிகு மந்திரிகள் பொய்மாலை சூட்டினாலும்!
வளர்ச்சிக்கு திட்டமிடவேண்டிய நேரத்தை எல்லாம் அடையாத வல்லூறு அயல் ஓநாய் வல்லரசுகளின் அன்னக்காவடிகளுக்கு ஆத்திரத்தில் அல்லிவிடும் குப்பைத்தொட்டி உரைகள் போல அல்ல!
ரகுபதி ஐயாவின் பேச்சுக்கள் கடமையை கடவுளுக்கு செய்யும் பணி போல இருப்பதனை இணையத்தின் வருகை மூலம் நேரடியாக தனிப்பட்ட முறையில் அறியும் வசதியை இன்று இறைவன் தந்து இருப்பது இந்த பிரசாந்தி அறியாத செயல்போல!
சிலரின் சிந்தனை இன்னும் 13 வது சரத்துக்குள்ளும் அண்டைநாட்டின் காலில் சாமியே என்று விழுந்துகிடப்பது போலத்தான் நமக்கான தெளிவான சிந்தனையை உருவாக்காத நிலை இப்போது தென்னாபிரிக்க நாடகம் இன்னொரு புதுமை! .

எனக்கு ரகுபதி ஐயாவுடன் இப்ப பேசணும் என்ன செய்யலாம் மேடம் பிரசாந்தி ?
அதுக்கு ஜீவனிதான் பொறுப்பு சார்!
ஓ அந்த மேடத்திடம் சொல்லுங்க நான் இப்பவே இங்கயே பேசவேண்டும்.
இருங்க சார் நான் ஜீவனியுடன் வருகின்றேன் .சாருக்கு குடிக்க ஜீஸ் ஏதாவது ஒன்றும் வேண்டாம் உபகாரத்துக்கு நன்றி பிரசாந்தி..
மச்சான் பரதன் நீ ரொம்பவே மாறிவிட்டாய். எப்படி இப்படி திடீர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல திடீர் என்று எல்லாம் பேச முடியுது?
ஒரு கணிப்புத்தான் மச்சான் இப்ப நாம் வெல்வோம் என்ற தன்நம்பிக்கைத்தான்.
ஆமா யாரு இந்தப்பிரசாந்தி தெரியுமா உனக்கு . ?
தெமோதர கங்கானியின் மகள் !ஜீவனியோடு ஒன்றாக பல்கலைக்கழகம் வரை படித்து வந்தவள் .
நல்ல சம்பளத்துடன் வேலையில் இருந்தால் யாழ்பாண பொடியனை விரும்பி ஏற்றவள் வாழ்க்கையும் முறிந்த பனைமரம் போலத்தான் இனவாதம் இவள் தாலிக்கும் விலங்கிட்டு விடுதலைப்புலி என்று !
இன்னும் முடிவில்லை இருக்கின்றானா ?இல்லையா ?என்றுதான் இது எல்லாம் உளவியல் சிக்கல் இன்னும் எழுத வேண்டும் ஈழத்தின் துயரங்கள் தொடராக யார் யார் இன்னும் சொல்லாத ரகசியங்கள் பொதுவெளியில் பேசுவார்களோ?? வெளிநாட்டில் இருப்போர் தான் இனி படைக்கவேண்டும் புதுப்படைப்புக்கள்.
இப்ப இங்கு நிம்மதியாக யுத்தம் எல்லாம் இல்லை காலம் மாறிப்போச்சு!வன்முறை புது வழியில் பெருகிவிட்டது என்று பெருமூச்சுவிட்டபடியே ஈசன் சொல்லி முடிக்க !ஜீவனியுடன் சேர்ந்து பிரசாந்தியும் வந்தாள் !
சார் சொல்லுங்க என்ன விசயமாக ஐயாவைப் பார்க்கணும்?
நான் ஒரு செல்வத்தை என்னோடு எடுத்துச் செல்ல வந்தேன் அது விடயமாக´ முதலில் அவரிடம் பேச வேண்டும் .
புரியல அதாவது தத்து எடுக்கப்போறேன் பரதனின் வாத்தைகள் ஜீவனியின் முகத்தில் ஆச்சரிக்குறியீடுகள் கீறியது கோட்டோவியும் போல!
ஈசனுக்கும் அவன் வார்த்தைகள் தென்னையில் விழுந்த ஷெல் போல சிதறியது சிந்தனை !
ஏன் பரதன் ?நீ பேசாம் இரு மச்சான் .
தத்து எடுக்க பல நடைமுறை செயல்பாடு இருக்கு பரதன் ஓ அப்படியா ஜீவனி அது பற்றி விளக்கமாக சொல்லுங்க தத்து எடுக்க உங்க சம்சாரம் ஒத்துக்கிட்டாங்களா???!!
தாலியோடு தனிமரமாக எத்தனை காலம் ஒரு பெண்ணுடன் இருக்க முடியும் ஒரு மழலை இல்லாத நிலையில் அக்கம் பக்கம் என்ன சொல்லும் என்று புரியுமா உனக்கு??,
அந்த கவலை எல்லாம் பெண் அதிகாரிகளுக்கு புரியாது!
ஏன் ஆண்மகன்களுக்கு நிஜமா யாரிடம் குறை என்று உண்மை மோகமுள் நாவல் போல பலருக்கு புரியுமோ ?,
சே நீயும் ஒரு சாதரண மனுசனா பரதன்??
ஹா ஹா உன்னோடு பேச வேற வழி!
இந்த உலகில் எல்லோரும் புதியபாதை போட முடியாது! முதலில் யாதார்த்தம் தெரிய வேண்டும் ஜீவனி.
ஊரோடு ஒத்தோட வேண்டும் இல்லை சதிகளும் ,கழுத்தறுப்புக்களும், விலைபேசலும்,,மறைகரங்களும் வாழ்க்கையில் மண்னை அள்ளிப்போடும் மரணங்கள் மலிந்த பூமியில் வீரங்கள் சதியால் வீழ்த்தப்பட்டது விடுகதைகள் போல பல இருக்கு புரிஞ்சுக்க!
//////////
10 comments :
"//தாலியோடு தனிமரமாக எத்தனை காலம் ஒரு பெண்ணுடன் இருக்க முடியும் ஒரு மழலை இல்லாத நிலையில் அக்கம் பக்கம் என்ன சொல்லும் என்று புரியுமா உனக்கு??,//"
- உண்மையான வரிகள்.
நானும் காத்திருக்கிறேன்.
நன்று..........தொடரட்டும்,ரணகளமாக்கும் உண்மைகளுடன்!
வணக்கம்
சிந்தனையை ஊட்டும் செழுந்தமிழை நன்றாக
எந்நாளும் செய்வீா் இனித்து!
நெகிழ்ந்தேன்...
கடும் மெனக்கடல் உள்ள பதிவு..
நிறைய படங்களை சிரத்தையோடு இணைத்திருப்பது அருமை..
தொடர்க
http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html
தாலியோடு தனிமரமாக எத்தனை காலம் ஒரு பெண்ணுடன் இருக்க முடியும் ஒரு மழலை இல்லாத நிலையில் அக்கம் பக்கம் என்ன சொல்லும் என்று புரியுமா உனக்கு??,//"
- உண்மையான வரிகள்.
நானும் காத்திருக்கிறேன்.//நன்றி சொக்கன் ஐயா முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் ஒரு பால்க்கோப்பி பரிசாக குடியுங்கோ ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்று..........தொடரட்டும்,ரணகளமாக்கும் உண்மைகளுடன்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்
சிந்தனையை ஊட்டும் செழுந்தமிழை நன்றாக
எந்நாளும் செய்வீா் இனித்து!//நன்றி ஐயா வருகைக்கும் கவிதைக்கும்.
நெகிழ்ந்தேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
கடும் மெனக்கடல் உள்ள பதிவு..
நிறைய படங்களை சிரத்தையோடு இணைத்திருப்பது அருமை..
தொடர்க
http://www.malartharu.org/2014/03/jameen-and-palani-murugan.html//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment