போராட்டங்களில் பெரிது எது என்றால் ??தன் மனதோடு போடும் யுத்தம் தான் !எது சரியான தேர்வு?? எது மெளனிப்பு ??
என்று எடுக்கும் தீர்மானம் தான் அடுத்த கட்ட காய்நகர்த்தல் எனலாம்! ஆனாலும் அதன் பலாபலனை அனுபவிப்பது?
தன் காலத்திலேயே அனுபவிப்பது என்பது மிகவும் தற்கொலைக்கு ஒப்பான செயல் ஈழத்தின் இன்றைய நிலைபோலத்தான்!
நிர்க்கதியான கையறு நிலை!
என் எதிர்காலம் எப்படி இருக்கணும். என்று ஒரு முடிவோடு இருந்த என்னையும் .மனதோடு போராடு என்றல்லா துன்பியலில் பரதன் தள்ளிவிட்டான். படிக்கும் காலத்தில் எப்படி துடிதுடிப்போடு காதல் கடிதம் தந்தானோ !அப்படியே தான் மீண்டும் இன்று மறுமணம் பற்றி பேசினான் !
அவனால் மட்டும் எப்படி அடிக்கடி என் வாழ்வில் இடையில் வந்து போக முடிகின்றது?,, சினிமாவில் வரும் நகைச்சுவைப்பாத்திரம் போல!
மறுமணம் சாத்தியமா ??என்ற சிந்தனையில் இருந்த ஜீவனியை நோக்கி தாய் மீனாட்சி வந்தாள்!
என்னமா வாழ்க்கைக்கப்பல் தத்தளிப்பது போல கடும் சிந்தனையில் இருக்கின்றாய்?
அது வந்து... இதை பாரு ஜீவனி !நீ தான் தீர்மானிக்க வேண்டும் உன் பாதையை ஒரு முறைப்பரீட்சையில் தோற்றுவிட்டோம் என்பதுக்காக் மீண்டும் பரீட்சைக்கு முயற்ச்சிக்காமல் இருந்தால் பட்டப்படிப்பு எப்படி படிக்க முடியும்?
தோல்வியும் வெற்றியும் சேர்ந்தே இருப்பது இல்லறத்திலும் தான்.... நானும் படித்த வாழ்க்கையின் அனுபவத்தில் சொல்லுகின்றேன்.
நீ பரதனை ஏற்றுக்கொள்வதில் தப்பிள்ளை !மறுமணம் என்பது ஒன்றும் சாத்தியம் இல்லாத விடயம் இல்லை நவீன உலகில்! இந்த ஊர். இந்த சமூகம் என்று நீயும் ஒரு வட்டத்துக்குள் நின்றுவிடாத.
நாங்கள் இருக்கும் காலம் வரை உனக்கு துணையிருப்போம். அதன் பின் உன் வாழ்க்கை குழந்தைகள் காப்பகத்தோடு முடியத்தான் முடியுமா??
இன்றைய இனவாத நாட்டில் அமைதியான சூழல் சாத்தியமா?, பூவெல்லாம் வாசம் ஜோதிகா போல பிடிவாதம் வேண்டாம். உனக்காக காத்து இருக்கும் பரதனை ஏற்றுக்கொள்!
தாயின் ஆலோசனையை வழிமொழிந்தார் எதிரில் வந்த முத்தையாவும்!
உன் ஆசைக்கு நான் தான் அரசியல் குறுக்கீட்டைப்போட்டு விட்டேன். பரதன் அப்பனிடம் அரசியல் அதிகாரம் கொண்டு பணியவைத்து, இந்த ஊரைவிட்டு போக வைத்த எனக்கு கடவுள் கொடுத்த நீதிக்குத்தண்டனை போலத்தான் உன் வாழ்வில் நடந்த துயரங்கள்.
எது எப்படியோ மீண்டும் பரதன் வந்து இருப்பது உன் மீதான நிலையான அன்பில் அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என் மகள் என்று கூறிய தந்தையின் முகத்தை பார்த்த ஜீவனிக்கு அன்புள்ள அப்பா பட நடிகர்திலகத்தின் முகம் போல தோன்றியது!
என்னால் ஒரு முடிவுக்கும் வரமுடியுது இல்லை அம்மா. என்னோட உலகம் போல இருக்கும் குழந்தைகள் காப்பகத்தை விட்டுப்பிரிய மனசு நெருடல் போல இருக்கு.
பொதுச்சேவைக்காக உன் தனிப்பட்ட எதிர்கால வாழ்க்கையை சீரழிக்காத இது என்ன தன் இனம் அழிக்கப்படும் போது இனவாத அரசுக்கு வாக்காளத்து வாங்கும் இலங்கை முஸ்லிம் காங்கிர்ஸ் போலவா?,
ஜீவனி ஏற்கனவே பொதுச்சேவைக்குப் போய் தன் சுயத்தை இழந்து போய் இருக்கும் உன் அப்பா நிலை பார்த்துமா?? இன்னும் ஜோசிக்கின்றாய் !
எந்த வயதிலும் சமூகப்பணி செய்ய முடியும்! ஆனால் பரதன் போல ஒருத்தன் கிடைப்பது அத்தி பூத்தால் போல இனி உன் தீர்மானம் என்றுவிட்டு மீனாட்சி எழுந்து செல்ல!!!
ஜீவ்னி வேலைக்களைப்புக்கு ஏற்ப நித்திரா தேவியும் தேடிவர இப்பவே இதுக்கு ஒரு முடிவு காணவேண்டும் பரதன் நாளை வருவானா ??
காத்து இருக்கின்றேன்! ஜீவனி
காதலில் உருகும் காதலி
காணாமல் போன
காதல் கதை உண்மையில் மின்நூல்
காணாத பலரைபோல இல்லை!
காதல்க் கதை எழுத்தில். பிழைக்கலாம்!
காற்றில் பாடல் தேர்வு
காதில் ஒலிக்காது இணையத்தில்!
காலத்தால் இன்னும் உன்னோடு
காலம் மாறி வந்த கதை போல!.
காலம் எல்லாம் கடல் கடந்து
காதோடு காதல் பேசி வாழ்வோம்!...
இன்னும் தவிக்கின்றேன்.
8 comments :
வணக்கம்
அண்ணா.
கதையின் நகர்த்தலும் அதற்குரிய எடுத்துக்காட்டுக்கள் எல்லாம் உரிய இடத்தில் அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கதையோடு கதையாய் நாட்டு நடப்பையும் அழகாய் இணைத்துள்ளீர்கள்
நன்றி நண்பரே
அருமை... வாழ்த்துக்கள்...
காதலிலும் அரசியல் கலந்து ஜொலிக்கிறது கதை! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!
தங்களின் நடை அழகு.
ஆஹா என்ன ஒரு எழுத்து வெறி.. வர வர உங்கள் கதையில் அதிக முதிர்ச்சி தெரியுது நேசன்... கீப் இட் மேலே..
ராமன் தேடிய சீதை.. படம் பார்க்கோணும் என நினைப்பேன் இன்னும் பார்க்கவில்லை.. பாட்டு அருமை மிகுந்த பொருத்தமும்கூட கதைக்கு..!.
வெளி நாடுகளில்,மறுமணம் ஒரு பொருட்டே இல்லை.நம் கலாச்சாரம் தான் ......................தீட்டு!நல் முடிவு கிட்டட்டும்.
Post a Comment