23 September 2014

நான் ரெடி! நீங்கள் ரெடியா????

வணக்கம்  தனிமரம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே??

எனக்குப்பிடித்தை என் பாணியில் ஏதோ எழுதும் ஒரு எழுத்தாணிக்கும் எழுதும் தகுதியிருக்கு என்று ஒரு விருதினை நண்பர் அரும்புகள் வலைப்பதிவாளர் திரு பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் வழங்கியிருந்தார் ..விருது பெறுவது சந்தோஸம் எழுதி என்னத்தைக் கண்டாய் என்று கேட்கும் சிலருக்கு நானும் விருது பெற்றதை  ஞாபகப்படுத்தலாம்:))).http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-award.html

 சில விருதுகள் மேலும் மேலும் எழுதும் ஆர்வத்தைத்தரும் இன்னொரு உற்சாக மருந்து என்றாலும் விருதுகள் ஒரு படைப்பை தரமானது. தரமற்றது என்று இடைபோடும் தராசு அல்ல என்று
 விருதுகள் மீதான விமர்சனங்கள் இன்னும் விலகாத மேகமூட்டங்கள்.

 எனினும் பொருளாதார தேடலினாலும் தனிப்பட்ட வாழ்வியல் மாற்றத்தினாலும் இந்த ஆண்டு அதிகம் பதிவுகள் இப்போது தனிமரம்  வலையில் அதன் பதிவாளர்  தி.சிவநேசன் அதிகம் எழுதும் சூழ்நிலையை காலம் தரமறுக்கின்றது :)))

எழுதவில்லை என்றாலும் ஒரு தொடர் மூலம் நண்பனின் நெஞ்சின் பாரத்தை இந்தாண்டு  இறக்கி வைத்து இருக்கின்றேன்.இங்கே

. இந்த தொடருக்கு இந்த விருந்து என்ற எண்ணத்தில் பாண்டியனின் பரிசினை ஏற்றுக்கொள்கின்றேன். பரிசளித்த வாத்தியாருக்கு தனிமரம் நேசனின் நன்றிகள் .

.
விருதின் போது விருது பெறும் பதிவர்/பதிவாளினி இரண்டு கட்டளைகளுக்கு பதில் சொல்லணும்.

 ஒன்று எனக்குப்பிடித்த எழு  விடயங்கள் எழுத வேண்டும் என்பது ஒரு கட்டளை. மற்றது நமக்குப்பிடித்த பதிவர்களுக்கு/பதிவாளினிக்கு இந்த விருதினை வழங்கி ஊக்கிவிக்க வேண்டும்.


 பெறும்  பதிவர்/பதிவாளினி மற்றவர்களுகு வழங்கி தொடர் சங்கிலியை பின்னவேண்டும்:))

கோர்த்துவிட நான் ரெடி நீங்கள் ரெடியா??:)))

அதற்கு முன் எனக்குப்பிடித்த ஏழு  விடயம் பல பிடித்தாலும் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமாம்:))))


  விடிகாலைத்தூக்கம் பிடிக்கும்
  விடிந்ததும் பால்க்கோப்பி பிடிக்கும்
  விடியவிடிய பாடல்கேட்கப்பிடிக்கும்
  வியக்க வைக்கும் வாசிப்புப்பிடிக்கும்
விரும்பிய ஊர்சுற்றப்பிடிக்கும்
விதிவழிப்பாதை ஆன்மீகம்பிடிக்கும்
வீட்டில் புட்டுப்பிடிக்கும்:)))
விடுகதை போல சினேஹா பிடிக்கும்!
.

விருதுக்கு நான் அழைப்போர்


அரசியல் கட்டுரைக்கு அண்ணாச்சி-http://maruthamuraan.blogspot.fr/2014/05/blog-post.html
அருமையான் பாடல் நினைவுகளுக்கு இவர்http://www.radiospathy.com/2014/09/blog-post_19.html
அன்பான அதிகாரி அவர்http://nanjilmano.blogspot.fr/2014/09/blog-post.htm

அழகு தமிழுக்கு அம்மு நிலா-http://kuzhanthainila.blogspot.fr/
அருமையான ஆரூடம் இவர்http://ilyas7032.blogspot.fr/2014/09/blog-post.html
ஆனாலும் இன்னும் இருக்கும் இவர் நூல் ஆசிரியர்.http://netkoluvan.blogspot.fr/2014/09/blog-post_20.html

அதிகம் இப்போது எழுதாத அன்புத்தம்பி ராஜ்http://cricketnanparkal.blogspot.fr/2014/08/blog-post.html


அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


 அவர்கள் விருதினை  ஏற்று
அவர்கள் தளத்தில் பகிர் அண்போடு அழைக்கின்றேன்..

10 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

இராஜராஜேஸ்வரி said...

விருது பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சசிகலா said...

இது விருது பெறுவதும் பகிர்வதுமான மாதம் போல... வாழ்த்துக்கள் சகோ.

வை.கோபாலகிருஷ்ணன் said...

விருது பெற்றதற்கு நல்வாழ்த்துகள்.

ஆத்மா said...

வாழ்த்துக்கள் அண்ணா

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் நண்பரே!

”தளிர் சுரேஷ்” said...

வாழ்த்துக்கள் நண்பரே!

Muruganandan M.K. said...

விருது பெறுபவர்களுக்கு நல் லாழத்துக்கள்

தனிமரம் said...

வாழ்த்தியோர் அனைவருக்கும் நன்றிகள்