08 September 2014

தேடலும் நினைவுகளும்!-1

வணக்கம் உறவுகளே நலமா?? மீண்டும் தனிமரம் ஒரு நினைவுகளை மீட்டிப்பார்க்கும் ஆசையில் பாடல் பற்றிய தொடர்பயணம் இது.


வானொலி அறிவிப்புக்கு ஆசைப்பட்டது வாலிபத்தில்!.ஆனால்  அந்த ஆசையில் இனவாதம் தீயிட்டு இலங்கையைவிட்டு இடம்பெயர, புலம்பெயர வழிகாட்டாடினாலும், வாடிப்போகமல் மனசைத் தாலாட்டியது பாடல்கள்தான்!

 .
பல பாடல்கள் என் நினைவில் வருவதுக்கு வழிகாட்டிய தாய் வானொலி இலங்கை வானொலிக்கு  முதலில் ஒரு நன்றிகள்.


.இந்த ஆசைப்படகில் ஏறும் என் பதிவில் எத்தனை எழுத்துப்பிழை வரும் என்று உள்குத்து போட எண்ணும் பண்டிதர்களுக்கு பணிவோடு சொல்வது ஐயா தனிமரம் படிக்காதவன் .பாடல் பிரியன்!! என் வலையில் எனக்குப்பிடித்ததை எழுகின்றேன். ஏற்பதும், தூற்றுவதும் எதுவும் உங்கள் விருப்பம். எனக்குத் தெரிந்ததை எழுதிவைக்கின்றேன் எதிர்கால சந்ததிக்கு ஏதிலிகள் எதுவும் பதிவு செய்யவில்லையே என்ற வரலாற்றுத்தவறினை தவிர்ப்பதற்காக.:)))

சினிமாவிற்கு இசையமைக்கவும், பாடல் பாடவும் ,கவிதை அறிந்து பாடல் எழுதும் கனவுகளுடன் கோடம்பக்கம் வந்து போன சிலரின் நினைவுகள் என்னோடு இன்றும் பாடல்களில் பயணிக்கின்றது .

சிலர் நீங்கள் அறிந்து இருக்கலாம் மறந்து இருக்கலாம் என்றாலும் ஞாபகம் மீட்டுவோம். இசைக்கும் இனிய பாடல்களில் இன்னும் வாழ்வோர் பலர் இணையத்தில் தேடலாம் முகங்கள்.


 செளந்தர்யன் -



 தமிழ் சினிமாவில் இளையராஜா ,சங்கர்-கணேஸ் இருவரும் கோலோட்சிய மேடையில் 90 இன் ஆரம்பத்தில்  தனித்துவமாக இசை மீட்டிய படம் சேரன் பாண்டியன் இதில் பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் சக்கைபோடு போட்டது .!



காதலின் பிரிவுக்கு வானொலிகள் தேடும் முதல் பாடலாக வா வா எந்தன் நிலவே  வெண்ணிலவே ஒரு புறம் என்றால்! தங்கை பாசத்துக்கு சின்னத்தங்கம் எந்தன் செல்லத்தங்கம் இன்னொரு புறம். .( நல்லெண்ணை சித்தாரா மீதுதான் கிசுகிசு எல்லாம் ஏன் நமக்கு!)

அதே நேரத்தில் காதல் அரும்பும் பருவத்துக்கு இன்று முகநூல் வழி என்றால் அன்று கடிதம் எழுதிய கடைசித் தலைமுறையின் காதல் கீதம் இது எனலாம்!

 அதுவும் கிராமியக்காதல் பல கருக்குமட்டையாலும்,இயந்திர துப்பாக்கிகளும் இடம் மாறிய கதைகள் இன்னும்  பகிராத படலங்கள் ஈழத்தின் இலக்கியத்தில்.



ஒரே படத்தில் பல சூழ்நிலைக்கு ஏற்ற களம் கிடைத்த போது கச்சிதமாக தன் திறமையை மடைதிறந்த செளர்ந்தர்ஜன் .


பின் நீண்ட காலத்தின் பின் சிந்து நதிப்பூவே படத்தில் இசைராகம் மீட்டி சில பாடல்கள் இலங்கையின் அரச,தனியார்  .பண்பலையிலும் அடிக்கடி ஒலித்தது !




2000 ஆண்டின் பின் வந்த ஆண்டுகளில் அவரின் இசையைக்கேட்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை பொருளாதார தேடலில்.தொலைத்துவிட்டேன் .



இசை ஆர்வத்தை இன்று மீண்டும் தேடிப்பார்க்கின்றேன் என்னிடம் ஏதும் செளந்தர்ஜன் இசை தென்படவில்லை!



 தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லித் தாருங்கள் சின்னத்திரைப்பக்கம் இன்னும் இருக்கலாம் இவரின் முகவரி!


இன்னொரு தேடலுடன் நிணைவுகளும்

தொடரும்.....



3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களின் இசைப் பயணம் அருமை
தங்களை நானும் தொடர்கிறேன்
நன்றி நண்பரே

Yoga.S. said...

தமிழ்த் திரையுலகும்,அரசியல் மேடை தான்,நேசரே!தடுக்கி விழுந்தவர்கள் பலர்.

அ.பாண்டியன் said...

வணக்கம் சகோதரர்
உங்கள் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் ஒரு விருதினைத் தங்களோடு பகிர்ந்திருக்கிறேன். அன்போடு பார்க்க அழைக்கிறேன் http://pandianpandi.blogspot.com/2014/09/the-versatile-blogger-