02 March 2015

முகம் காண ஆசையுடன் -3

                       
முகம் காண ஆசை-1
முகம் காண ஆசை..-2
               
இனி....




வார்த்தைகள்  பேசாநிலையை மெளனம் என்று சொல்லும் சமூகம் ஊடகத்தணிக்கை என்ற கவசம் போடும் ஆட்சிநிலை  பற்றி  பொதுவில் பேசாத நிலையை யாரும் அதிகம் பொதுவெளியில்  முக்கியத்துவம் கொடுப்பதில்லை. முகநூலில் அன்றாடம் கழுவி ஊத்துக்கின்ற  அற்ப சந்தோஸத்தில் நாடு போகும் நிலை பற்றி, பேச மறுப்பதும் ஒரு கோழைத்தனம் எனலாம்!


 எப்போதும் சமூகம் என்ற கூட்டில் வாழும் நிலையை தொடர்கின்றது தானே நம் இயல்பு. !

புதியதாய் ஏதாவது  ஊடகத்தில் எழுதினால். பேசினால். ஊர் வம்பு என்று எத்தனை அன்பு மிரட்டல்கள் .விசாரணை என்ற ஆசைக்கவனிப்பு எல்லாம் நான் பார்த்தவன்  ஊடக சுதந்திரம் இல்லாத நாட்டில் நிவேதா !


அதுதான் மெளனமாக  இப்போது இருக்கின்றேன் . எங்கே அசுரன் ஸ்கைப்பில்  பதில் வரவில்லை என்று  நிவேதா கேட்ட விசாரணைக்கு மேல்கண்டவாறு பதில் கொடுத்தான் அசுரன்.

ஆமா சுமாவுக்கு கலியாணமா  ?,யார் சொன்னார்கள்,? நிவேதா வினோதமானவளே பாடல்போல வினோதமாய் கேட்டான் அசுரன்.

 நட்புக்கள் எல்லாம் எல்லா நேரத்திலும் உண்மையாக இருப்பது இல்லைத் தானே நண்பா . சுமா என்னோடு ஊடக நெறியில் இடையில் வேலை பழக வந்த இடத்தில் பிரியமான தோழி போல நட்பானவள்

 நீயோ என்னுயிர் தோழன் போல முன்னம் பள்ளிக்காலத்தில்  முகம் அறிந்தவன். இப்போது புலம்பெயர் தேசத்தில் தொலைவில் இருக்கும்   நாடோடி தென்றல் பாண்டியன் போல என்று சொல்லமா?, அசுரன் !

ஹீ ஹீ   என்ன நேற்றைய நடிகன் தள பதிவை என்னிடம் கோடிட்டுக் காட்டுகின்றாயா நிவேதா ?

அட பதிவு எல்லாம் ஞாபகம் இருக்கா?, எல்லாம் நேரில் பார்த்த மக்களின் வாழ்வியலைத்தானே என் தளத்தில் நடிகன் எழுதுவது.

 ஆமா நடிகன் தளத்தில்  யார் அந்த நடிகை போல  பின்ணணி நாயகி.


 அது அடுத்த தொடர்கதைக்கு ஒரு முன் விளம்பரம் தோழி.  . ஓ அப்படியா ! நேற்றுத்தான்  சுமா என்னிடம் கலியாண அழைப்பிதழ் கொடுத்தாள்    அப்போது அவள் முகநூலை பார்த்த போதுதான் உன்னுடனும் அவள் நட்பில் இருப்பவள் என்று அறிந்தேன்.

 இருந்தாலும் ஒரு உந்துதல் அவள் இதுவரை உன்னைப்பற்றி ஒரு வார்த்தையும் என்னிடம் பேசியதில்லை. ஒரு வேளை சுமாவுக்கு நீ என் நட்பு என்று அறிந்து இருக்க சந்தர்ப்பம் அமைந்து இருக்காது என்று ஏன் நீ சிந்திக்கக்கூடாது நிவேதா.

எது எப்படியோ கலியாணம் நல்லவிடயம் தானே ஊடகத்தில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று நீ அறிந்தவள்.  இப்படி எல்லாம் பேசலாமா?,

  நாடு விட்டு வந்து இப்ப 5 வருடம் போய் விட்டது . சாரிடா உன்னை ஏங்க வைத்திட்டன் கோவிக்காத  .

நான் வெளியில் போகவேண்டி இருக்கு பின் உன்னிடம் பேசுகின்றேன் என்று தொடர்பை துண்டித்தால் நிவேதா. மீண்டும் பேசுவோம் என்று இலங்கை பேச்சுவார்த்தை நாடகம் போல அசுரனும் கலைந்து சென்றான் ஸ்கைப்பின் தொடர்பை நிறுத்தி!....



 இன்னும்  முகம் காண ஆசை ........

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

இயல்பு சரி தான்... தொடர்கிறேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே
தம +1

Unknown said...

மீண்டும் எப்போ ,காத்திருக்கிறேன் :)
த ம 4

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்கையின் இயல்பு நிலையம் இதுதான் !

Yarlpavanan said...

கதை நகர்வு நன்று
படிக்க தூண்டும் பதிவு
தொடருங்கள்

KILLERGEE Devakottai said...

தொடருங்கள் ஆவலுடன்...
தமிழ் மணம் 5

Thulasidharan V Thillaiakathu said...

....அடுத்த முகம் காண காத்திருக்கின்றோம்.....தொடர்ந்து....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பல விஷயங்களை பேசுகிறது பதிவு .