23 March 2015

கவிதை போல கிறுக்கல்.


பூக்களும் பேசிடும் மெளனம் கலைத்து
 நீயோ பேசாமல் கொல்வது என் அந்தி
 நேர சந்தோஸ மாலையை
பேசு பூவே உன்னை நேசிக்கும் 
மாலை நேரத்தென்றல் இவன்
        



-------------------------------------------


நீ ஒரு தேவதை போல வந்து என் வாழ்வை 
நிழல்கள் போல அப்பா என்று தாலாட்டும் குயிலே 
என்றும் பாடுவேன் ஒரு பாட்டு 
செல்லம் நீயடி!



--------------------

மழைபோல வருவாளோ  மன்னன் 
                                          மனம் குளிர  ஊர்சனம் போடும் 
                                                          ஊழிக்கூத்தில் மின்னல் போல ஒதுங்குவாளோ
                                                                  இன்னும் விடையில்லாத ஆத்திர நடணம் போடும் மழையை புழுதிவாரித் 
தூற்றும் மனதுடன் காளை
  ஒருவன் மயிலிடம் ஓதும் வேதம்!





-------------------------------



 எழுதும் கடிதங்கள் எல்லாம்
உன்னை மறந்த முகவரி போல 
ஏதிலி என்னையும் தொலைத்துவிட்டது
விடியும் பொழுது உன்னையும்
இன்னொரு சுகராகம் மீட்டும்
அதிகாலைப்பொழுதில்!
முகாரி போல ஈழம்விட்டு
மூச்சு வாழும் நாட்டில் 
முகம் காண !
ஆசை என்ன லேசா!!



////////////// 

10 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

ஆசையை ரசித்தேன்...!

yathavan64@gmail.com said...

நீ ஒரு தேவதை போல வந்து என் வாழ்வை

நிழல்கள் போல அப்பா என்று தாலாட்டும் குயிலே

என்றும் பாடுவேன் ஒரு பாட்டு

செல்லம் நீயடி!
இந்த நிழல் கவிதையின் நிஜம் என்னும் பிம்பத்தை உணர்த்திய வரிகள்§
ரசித்தேன்! அருமை!
த ம 3
நட்புடன்,
புதுவை வேலு

Thulasidharan V Thillaiakathu said...

கவிதைக் கிறுக்கல்களை இந்தக் கிறுக்குகளும் ரசித்தோம்.....

Unknown said...


இனம் தெரியா சோகம்! பாடல் ஊடே ஓடுவது தெரிகிறது!

ஊமைக்கனவுகள் said...

காதலின் உணர்வின் கவிதைகள் கிறுக்கல்களாகத் தோன்றுவதும் இயல்புதான்.
அருமை

விச்சு said...

தனிமரத்தின் கவிதை அருமைதான்... பயபுள்ளைக்கு என்ன ஆச்சோ..!!!

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே
தம 5

S.P.SENTHIL KUMAR said...

ரசனையான கிறுக்கல்கள்!
த ம 6

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

ஒவ்வொரு வரிகளும் இரசனை.... பகிர்வுக்கு நன்றி த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...


ரசனையான கவிதை நண்பரே...
தமிழ் மணம் 8